இணையம்வழி ஆய்வரங்கம் - ‘சிங்கப்பூர்த் தமிழரும் தமிழும்’

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழுள்ள மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து இணையம் வழி ஆய்வரங்கம் நடத்தவிருக்கின்றன.

‘சிங்கப்பூர்த் தமிழரும் தமிழும்’ தொடர்பில் பல்வேறு துணைத் தலைப்புகளில் நாளை முதல் ஜூலை 17ஆம் தேதி வரை அந்த இணையம் வழி ஆய்வரங்கு ‘ஸூம்’ வழியாக ஒவ்வொரு நாளும் மாலை மணி 6.30 முதல் 7.30 மணி வரை நடைபெறும்.

‘சிங்கப்பூர் அரசியலில் தமிழர்கள்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய துணைத் தலைவருமான திரு. நா. ஆண்டியப்பன் பேசவுள்ளார்.

தொடர்ந்து வரும் நாட்களில் ‘சிங்கப்பூர்ச் சமூகத்தில் தமிழர்கள்’, ‘சிங்கைப் பொருளாதாரத்தில் தமிழர்கள்’, ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள்’, ‘சிங்கப்பூர்க் கவிதைகள்’, ‘சிங்கப்பூர்ப் புதினங்கள்’, ‘பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ்’, ‘பல்கலைக்கழகங்களில் தமிழ்’, ‘உலகத் தமிழ்க் கல்வி வளர்ச்சியில் சிங்கப்பூர்’, ‘சிங்கைத் தமிழர் இசை’, ‘சிங்கையில் தமிழ் நாடக வளர்ச்சி’, ‘சிங்கை மொழிபெயர்ப்பு இலக்கியம்’, ‘சிங்கைத் தமிழ் இதழ்கள்’, ‘சிங்கை வானொலி’, ‘சிங்கைத் தொலைக்காட்சி’ ஆகிய தலைப்புகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் உரைகள் இடம்பெறவுள்ளன.

இந்த ஸூம் ஆய்வரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். பதிவு செய்ய tps://tinyurl.com/SGTamilConf என்ற இணைப்பிற்குச் செல்லவும்.