கயிறு தாண்டி இளைக்கலாம்

உடற்­ப­யிற்சி என்­றாலே பொது­வாக நெடுந்­தொ­லை­வோட்­டம், மெது­வோட்­டம், நடைப்­ப­யிற்சி ஆகி­ய­வற்­றைப் பற்­றித்­தான் பலர் அதி­க­மா­கப் பேசு­வ­ர். ஆனால், குறைந்த நேரத்­தில் உடல் எடை­யைக் குறைக்­க­ உத­வும் ஒரு நடவடிக்கை 'ஸ்கிப்­பிங்' எனும் கயிறு தாண்­டு­வது.

அவ­ர­வர் உடல் ஆரோக்­கி­யத்­திற்கு ஏற்­ற­வாறு பல்­வேறு கயிறு தாண்­டும் உடற்­ப­யிற்சி முறை­கள் உள்­ளன.

ஆரோக்­கி­ய­மான உண­வுப் பழக்­கங்­க­ளு­டன் கயிறு தாண்­டு­வ­தை­யும் சேர்த்­துக்­கொண்­டால் உடல் எடையை சீராக வைத்­துக்­கொள்­ள­லாம்,் உடல் எடை அதி­கம் கூடா­மல் பார்த்­துக்­கொள்­ள­லாம்; உடல் எடை­யைக் குறைக்­க­வும் செய்­ய­லாம்.

கயிறு தாண்­டு­வது எலும்­பு­களை வலுப்­ப­டுத்­தும் ஒரு நட­வடிக்கை. இதில் ஈடு­ப­டும்­போது ஒரு­வர் குதிப்­ப­தால் தரை­யு­டன் ஏற்­படும் தொடர்பு எலும்­பு­களை வலு­வாக வைத்­தி­ருக்க உத­வு­வதா­கச் சொல்­லப்­படு­கிறது.

'ஓஸ்­டி­யோ­பொ­ரோ­சிஸ்' எனும் எலும்­புத் தேய்வு ஏற்பட்­டோ­ருக்­கும் கயிறு தாண்­டு­வது உத­வக்­கூ­டும். இந்­தப் பிரச்­சி­னைக்கு ஆளா­னோ­ருக்கு கயிறு தாண்­டு­வது பொது­வாக அபா­யம் ஏதும் விளை­விக்­காது. எனி­னும், வேறு சில மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் உள்­ள­வர்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­ப­ட­லாம். மருத்­து­வ­ரி­டம் தெளி­வுப்­ப­டுத்­திக்­கொள்­வது நல்­லது.

இரு கால்களையும் கொண்டு கயிறு தாண்டலாம் அல்லது ஒரு காலில் இந்நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஒரு காலில் குதித்த பிறகு மற்றொரு காலைக் கொண்டு கயிறு தாண்டலாம்.

இரண்டு நிமிடங்கள் கயிறு தாண்டுவதுகூட உடல் எடையைக் குறைக்க உதவலாம். எத்தனை முறை கயிறு தாண்டுகிறோம் என்பதைப் பொறுத்தது இது.

medicalnewstoday.com எனும் சுகா­தார இணை­யத்­த­ளத்­தில் இருந்த விவ­ரங்­க­ளைக் கொண்டு இந்­தத் தக­வல்­கள் குறிப்­பி­டப்­பட்டுள்­ளன.

உங்­கள் மருத்­து­வர் அல்­லது சுக­ாதார நிபு­ண­ரின் ஆலோ­ச­னை­யைக் கேட்டு இத்­தகைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது நல்லது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!