கறுப்பு சாக்லெட் வழங்கும் நற்பலன்கள்

சாக்­லெட்டை விரும்­பா­தோர் அதி­கம் இருக்க வாய்ப்­பில்லை. சிறு­வர்­ முதல் பெரி­ய­வர்­கள் வரை பலர் சாக்­லெட் மோகம் கொண்­ட­வர்­களே. விழாக்­கா­லங்­க­ளுக்­கும் பிறந்த நாள்­க­ளுக்­கும் பல வகை சாக்­லெட்­டு­களை வழங்­கு­வது வழக்­கம்.

எனி­னும், பொது­வாக ஆரோக்­கி­யம் என்ற வார்த்­தைக்­கும் சாக்­லெட்­டுக்­கும் அதி­கத் தொடர்பு கிடை­யாது. இதற்கு விதி­வி­லக்கு, 'டார்க் சாக்­லெட்' எனப்­படும் கறுப்பு சாக்­லெட்.

இதன் பழுப்பு நிறம் சற்று தூக்­க­லாக இருக்­கும். இனிப்­பும் குறைவு. சற்று கசக்­க­வும் செய்­யும். ஆனால், இதை விரும்பி உண்­ப­வர்­களும் அதி­க­மாக இருக்­கவே செய்­கின்­றனர். கறுப்பு சாக்­லெட்­ தரக்­கூ­டிய நற்­ப­லன்­களை விவ­ரிக்­கிறது eatingwell.com இணை­யத்­த­ளம்.

 

• இதய ஆரோக்­கி­யத்தை மேம்­படுத்­தும்

 

ஓர் அவுன்ஸ் அளவு கறுப்பு சாக்­லெட்டை ஒரு வாரத்­திற்கு மூன்­றி­லி­ருந்து ஆறு முறை உண்­டால் இத­யத்­தின் ஆரோக்­கி­யம் மேம்­படும் என்று 'அமெ­ரிக்­கன் ஹார்ட் ஜர்­னல்' மருத்­துவ சஞ்­சிகை மேற்­கொண்ட ஆய்­வில் தெரி­ய­வந்­துள்ளது.

 

• ரத்த அழுத்­தம் குறையும்

 

தினந்­தோ­றும் கறுப்பு சாக்­லெட்டை அள­வோடு உண்­ப­வர்­க­ளுக்கு ரத்த அழுத்­தம் குயை­லாம் என்று ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

 

• நீரிழிவு நோய் வரும்

வாய்ப்புகள் குறையும்

 

ஒரு வாரத்­திற்கு இரண்­டரை அவுன்ஸ் கறுப்பு சாக்­லெட்டை உண்­பது நீரி­ழிவு நோய் வரும் அபா­யத்தை 10 விழுக்­காடு குறைப்­பதாக 2018ஆம் மேற்­கொள்­ளப்­பட்ட ஓர் ஆய்வு தெரிவித்தது.

 

• மூளை செயல்பாடு மேம்படும்

 

கறுப்பு சாக்­லெட்டை வாரத்­திற்கு ஒரு முறை­யா­வது உட்­கொண்ட மூத்­தோ­ரி­டையே மூளை செயல்­பாடு மேம்­பட்­டதாக சில ஆய்வு­கள் குறிப்­பி­டு­கின்­றன.

 

இதன் தொடர்­பில் மருத்­து­வர்­கள் அல்லது சுகா­தா­ரத்­துறை நிபு­ணர்­க­ளின் ஆலோ­ச­னை­யைக் கேட்­ட­றி­வது நல்­லது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!