மனநலனை மேம்படுத்துமாம்

உல­கம் முழு­வ­தும் கொவிட்-19, கொரோனா, கொள்­ளை­நோய், தடுப்­பூசி என்ற பேச்சே கடந்த ஈராண்­டு­க­ளுக்­கும் மேலா­கப் பேசப்­பட்டு வரு­கிறது. இந்­நி­லை­யில், கொவிட்-19 கொள்­ளை­நோ­யைத் தடுக்­கப் போட்­டுக்­கொள்­ளப்­படும் தடுப்­பூ­சி­யால் விளை­யும் நன்மை பற்றி புதிய ஆய்­வுத் தக­வல் ஒன்று வெளி­யாகி உள்­ளது.

கொள்­ளை­நோ­யின் தீவி­ரத்­தைத் தடுக்­கும் ஆற்­ற­லைப் பெற்­றி­ருக்­கும் தடுப்­பூ­சியை மக்­க­ளுக்­குப் போடும் நட­வ­டிக்­கையை உலக அர­சாங்­கங்­கள் தொடர்ந்து தீவி­ரப்­ப­டுத்தி வரு­கின்­றன.

அவ்­வாறு போடப்­படும் தடுப்­பூ­சி­யின் ஆற்­றல் குறித்த ஆய்­வு­களும் அவ்­வப்­போது வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. 'அமெ­ரிக்­கன் ஜர்­னல் ஆஃப் பிரி­வென்­டிவ் மெடி­சின்' என்­னும் சஞ்­சிகை அமெ­ரிக்க மக்­க­ளி­டம் ஆய்வு ஒன்றை நடத்­தி­யது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு கொள்­ளை­நோய் ஆபத்து குறைவு என்­பது ஏற்­கெ­னவே சொல்­லப்­பட்டு வரும் தக­வல்.

அதா­வது கிரு­மி­த்தொற்­றால் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்

­ப­டு­வது, உயி­ரி­ழப்பு ஏற்­ப­டு­வது போன்­ற­வற்­றுக்­கான வாய்ப்­பு­களை தடுப்­பூசி குறைப்­ப­தா­கத் தக­வல்.

ஆனால், இவற்­றுக்­கும் மேலாக தடுப்­பூசி சில முக்­கி­ய­மான உள­வி­யல் நன்­மை­க­ளைத் தரு­வதாக இந்த ஆய்­வில் கண்­ட­றிந்­துள்­ள­தாக முன்­னணி ஆய்­வா­ளர் ஜோனா­தன் கோல்­டாய் தெரி­வித்­தார்.

2020 மார்ச்­சுக்­கும் 2021 ஜூனுக் கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் சுமார் 8,090 பெரி­ய­வர்­க­ளி­டம் குறிப்­பாக, 2020 டிசம்­ப­ருக்­கும் 2021 ஜூனுக்­கும் இடை­யில் குறைந்­த­பட்­சம் ஒரு தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட பெரி­ய­வர்­க­ளின் உடல்­நிலை பரி­சோ­திக்­கப்­பட்­டது.

தடுப்­பூசி போட்­ட­பின்­னர் அவர்­க­ளின் மன உளைச்­ச­லில் 7 விழுக்­காடு குறைந்­துள்­ள­தாக அந்­தப் பரி­சோ­த­னை­யில் தெரிய வந்­த­தாக ஆய்­வுத் தக­வல் குறிப்­பிட்­டது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு குறைந்­தது 8 வாரங்­கள் வரை அவர்­க­ளின் மன­ந­லம் மேம்­பட்­டு இருந்­ததை­யும் ஆய்வு கண்­ட­றிந்­தது.

"சாதா­ர­ண­மாக, தொற்று ஏற்­ப­டு­வ­தை­யும் அதன் பாதிப்­பை­யும் தடுப்­பூசி குறைப்­ப­தால் நேர்­ம­றை­யான தாக்­கம் ஏற்­ப­டு­கிறது. தடுப்­பூசியால் பாது­காப்பை உணர்­வ­தோடு மனஅழுத்­த­மும் குறைகிறது," என்று ஆய்­வா­ளர்­கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!