நினைவுத்திறனை அதிகரிக்க சிறிய உடற்பயிற்சியே போதும்: ஆய்வு

வேக­மான இன்­றைய சூழ்­நி­லை­யில் பல­ரும் ஞாபக மற­தி­யால் அவ­திப்­ப­டு­கின்­ற­னர். இவர்­க­ளின் நினை­வுத்­தி­றனை மேம்­ப­டுத்த அறி­வி­யல் பதில் சொல்­கிறது.

லேசான நமது உடல் செயல்­பா­டு­கூட நினை­வ­கச் செயல்­பாட்டை உட­ன­டி­யாக மேம்­ப­டுத்­து­கிறது. உடற்­ப­யிற்­சி­யின்­போது ஒவ்­வொரு நொடி­யும் உடலில் அசைவு ஏற்­ப­டு­கிறது. இத­னால் நினை­வுத்­தி­றன் அதி­க­ரிக்­கி­ற­தாம். கலி­ஃபோர்­னியா பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் இர்­வின் என்­ப­வ­ரின் ஆய்­வுக் குழு இத­னைக் கண்­ட­றிந்­துள்­ளது.

மிக இல­கு­வான உடற்­ப­யிற்­சி­க­ளும்­கூட நினை­வக உரு­வாக்­கம் மற்­றும் சேமிப்­பிற்­குக் கார­ண­மான மூளை­யின் பாகங்­க­ளுக்­கி­டை­யே­யான தொடர்பை அதி­க­ரிக்­கும் என்று ஆராய்ச்­சியா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

"ஒரு சிறிய யோகா­ச­னப் பயிற்­சி­யைத் தங்­க­ளின் ஒவ்­வொரு நாள் செயல்­பாட்­டி­லும் சேர்த்­துக் கொள்­ப­வர்­கள் தங்­க­ளது நினை­வுத்­தி­றன் சாவியை கையில் வைத்­தி­ருக்­கி­றார்­கள்; எனவே, அவர்­கள் நினை­வில் கொள்­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம்," என்­கி­றார்­கள் ஆய்­வா­ளர்­கள்.

பேரா­சி­ரி­யர் இர்­வி­னு­டன் ஜப்­பா­னிலுள்ள சுகுபா பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்­களும் மிக இலகு­வான உடற்­ப­யிற்­சி­கள்­கூட நினை­வக உரு­வாக்­கம் மற்­றும் சேமிப்­பிற்­குக் கார­ண­மான மூளை­யின் பகு­தி­க­ளுக்கு இடை­யி­லான தொடர்பை அதி­க­ரிக்­கும் என்று கண்­ட­றிந்­துள்­ள­னர். 36 ஆரோக்­கி­ய­மான இளை­ஞர்­க­ளி­டம் உடல் செயல்­பாடு தொடர்­பாக ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. 10 நிமிட மித­மான உழைப்பு மற்­றும் உடல் செயல்­பாடு, கணி­ச­மான அறி­வாற்­றல் திறனை அதி­க­ரிக்­கிறது என்று கண்­டு­பி­டித்­த­னர்.

உயர் தெளி­வுத்­தி­றன் கொண்ட செயல்­பாட்டு காந்த அதிர்வு இமே­ஜிங்கை பயன்­ப­டுத்தி, உடற்­ப­யிற்சி அமர்­வு­க­ளுக்­குப் பிறகு மூளையை குழு ஆய்வு செய்­தது. மேலும், அப்­போது அங்கே விரி ­வான நினை­வகச் செய­லாக்­கத்­து­டன் இணைக்­கப்­பட்ட 'ஹிப்­போ­காம்­பல் டென்­டேட் கைரஸ்' மற்­றும் உறுப்­பு­க­ளின் புறப்­ப­கு­தி­

க­ளுக்கு இடையே சிறந்த இணைப்பு இருப்­ப­தை­யும் கண்­ட­றிந்­த­னர். ஆய்வு முடி­வு­கள் அமெ­ரிக்க தேசிய அறி­வி­யல் அகா­டமி சஞ்­சி­கை­யில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!