இதயநோயை விரட்டியடிக்க வீட்டுவேலை செய்வது நல்லது

வய­தா­கும்­போது சாதா­ர­ண­மா­கவே உட­லு­ழைப்பு குறைந்­து­வி­டு­கிறது. உறுப்­பு­கள் வேலை செய்­வது குறைந்­து­வி­டு­கிறது. இத­னால் உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­ப­டு­கிறது. சில­ருக்கு இத­னால் மன அழுத்­த­மும் ஏற்­ப­டு­கிறது. பெரும்­பா­லும் வய­தா­ன­வர்­கள் ஓய்­வில் இருப்­ப­தால் பல­வற்­றைப் பற்றி சிந்­திக்­கின்­ற­னர். இதன் கார­ண­மா­க­வும் உட­லும் மன­மும் பாதிக்­கப்­ப­ட­லாம்.

உடல் உறுப்­பு­களை சுறு­சு­றுப்­பாக வைக்க சிறிது உடற்­ப­யிற்சி செய்ய வேண்­டும் என மருத்­து­வர்­கள் கூறு­வ­துண்டு.

ஆனால், பெண்­க­ளுக்கு ஓர் எளிய வழி இருக்­கிறது. வீட்­டைப் பரா­ம­ரிக்­கும் வேலை செய்­தாலே போதும் உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­ப­டாது, இதய பாதிப்பு ஏற்­ப­டு­வது குறைவு என்று ஓர் ஆய்வு கூறு­கிறது.

வீட்­டுத் தோட்­டத்­தைப் பரா­ம­ரிப்­பது, சமை­யல் செய்­வது, வீட்டை அழ­கு­ப­டுத்­து­வது, தம்மை அழ­கு­ப­டுத்­திக்­கொள்­வது போன்ற செயல்­களில் ஈடு­படும் பெண்­க­ளின் மன­

ந­லன் மேம்­ப­டு­கிறது என்­றும் இத­னால் அவர்­க­ளுக்கு இதய பாதிப்­பு­கள் ஏற்­ப­டு­வது குறைவு என்­றும் இந்த ஆய்வு தெரி­விக்­கின்­றது.

ஆய்­வின் முடி­வு­கள் 'ஜர்­னல் ஆஃப் தி அமெ­ரிக்­கன் ஹார்ட் அசோ­சி­யே­ஷன்' சஞ்­சி­கை­யில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

கலி­ஃபோர்­னியா சான் டியாகோ பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்­கள் தலை­மை­யி­லான குழு இந்த ஆய்வை நடத்­தி­யது.

வீட்­டில் ஒரு நாளைக்கு 4 மணி­நே­ரம் வேலை­யில் ஈடு­படும் பெண்­க­ளுக்கு இதய நோய் ஆபத்து 43% குறைவு, ரத்­தக்­கு­ழாய் சார்ந்த இதய நோய் ஆபத்து 43% குறைவு, பக்­க­வா­த ஆபத்து 30% குறைவு, இதய நோயால் நிக­ழும் உயி­ரி­ழப்­புக்­கான வாய்ப்பு 62% குறை­வு என ஆய்வா­ ளர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!