கவிமாலையின் கவிதை, மொழிபெயர்ப்புப் பயிலரங்கு

இம்மாதம் 5ஆம் தேதி மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களுக்காக கவிதைப் பயிலரங்கு, மொழிப்பெயர்ப்புப் பயிலரங்கு மற்றும் கவிதைப் போட்டியை கவி மாலை நடத்தியது. 35 பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து சுமார் 155 மாணவர்கள் பயிலரங்கிற்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் முதலில், கவிஞர் மோகனரங்கன், கவிதை குறித்து 'சூம்' செயலி மூலம் மாணவர்களிடம் உரையாற்றினார்.

மரபுக் கவிதைகள் துவங்கி, புதுக்கவிதைகள் உருவாகி நூறு வருடங்கள் ஆகிறது என்பதைக் கூறி, அச்சுத்தொழில் துவங்கிய பின் புத்தகங்களின் வெளியீடு என வரலாற்றுப் பின்னணியை எளிய விளக்கங்களுடனும் சிறிய உதாரணங்களுடன் புதிதாக கவிதை குறித்து அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அழகாக எடுத்துக்கூறினார்.

புதுக்கவிதைகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை கவிஞர்கள் பிரமிள், தேவதச்சன் மற்றும் விக்ரமாதித்யன் கவிதை களை மேற்கோள்காட்டி கவிதை குறித்த ஒரு புரிதலை மாணவர் களுக்கு உருவாக்கினார்.

எழுதுவது எல்லாமே கவிதை யாகிவிடுவதில்லை என்றும் அதன் உருவம், உள்ளடக்கம் தொடர்பான தெளிவை உணர்த்தினார். கவிதை தொடர்ந்து வாசிக்கவேண்டிய தேவை மற்றும் ஏன் கவிதை எழுத வேண்டும் என்பதையும் தனது உரையில் அவர் முன்வைத்தார்.

தமிழ்க் கவிதைகள் குறித்து புதியவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான உரையாக கவிஞர் மோகனரங்கனின் உரை அமைந்திருந்தது.

அடுத்த நிகழ்­வாக, கவிதை மொழி­பெ­யர்ப்பு குறித்து சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் கவி­ஞர் மஹேஷ்­கு­மார் மாண­வர்­களை வழி நடத்­தி­னார்.

வேற்று மொழிக் கவி­தை­கள் வாசிப்­ப­தற்­கான தேவை என்ன என்­பதை ஒவ்­வொன்­றாக அவர் விளக்­கி­னார்.

ஒரு புதிய உலகை அறிந்துகொள்­ள­வும் புதிய காட்சி, தேடல் மற்­றும் வாழ்­வைக் குறித்த புதிய பரி­ணா­மத்தை உண­ர­வும் வேற்­று­மொ­ழிக் கவி­தை­கள் உத­வு­வ­தாக தனது உரை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

இரு­மொ­ழிப் புல­மைக்­கான அவ­சி­யத்­தை­யும் தரு­மொ­ழி­யின் நில­வி­யல், அர­சி­யல் மற்­றும் பண்­பாடு ஆகி­யவை அறிந்துகொள்ள வேண்­டி­ய­தன் மகத்­து­ வத்­தை­யும் கூறி வேற்­று­மொ­ழிக் கவி­தை­யின் கரு சொல்­ல­வ­ரு­வ­தைச் சரி­யா­கப் புரிந்துகொள்­வது என மொழி­ பெயர்ப்­ புக்­குத் தேவை­யா­ன­வற்றை தனக்கே உரிய எளிய மொழி­யில் மாண­வர்­கள் புரி­யும் வகை­யில் அவர் விளக்­கி­னார்.

மொழி­பெ­யர்ப்­பில் கவ­னிக்க வேண்­டிய உத்­தி­க­ளை­யும் நடு­நி­லை­யாக நிற்க வேண்­டிய அவ­சி­யத்­தை­யும் அவர் வலி­யு­றுத்­தி­னார். மொழி­பெ­யர்ப்­பில் ஒவ்வொரு­சொல்­லாக மொழி­பெ­யர்த்­தல், சுருக்­க­மாக மொழி­பெ­யர்த்­தல், விரி­வாக மொழி­ பெயர்த்­தல், தழு­வ­லாக மொழி­பெ­யர்த்­தல் மற்­றும் மொழி­யாக்­கம் ஆகி­ய­வற்­றின் நிறை­களை மட்­டு­மல்­லாது மொழி­பெ­யர்ப்­பில் காணும் இடர்­க­ளை­யும் சிக்­கல்­க­ளை­யும் அவர் சுட்­டி­னார். மொழி­பெ­யர்ப்­புத் தன்­மைக்கான தெளிவு, பொருத்­தம், மாறு­பா­டின்மை மற்­றும் எளிமை ஆகி­ய­வற்­றை­யும் அவர் விளக்­கி­னார்.

உதாரணத்திற்கு Anaïs Nin எழு­திய Risk என்ற ஆங்­கி­லக் கவி­தையை எடுத்­துக்­கொண்டு எப்­படி மொழி­பெ­யர்க்க வேண்­டும் என்­பதை தனது இரு­வேறு மொழி­பெ­யர்ப்பை எடுத்­தாண்டு விளக்­கி­னார். இறு­தி­யாக, மாண­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லு­டன் கவி­மா­லை­யின் கவி­தைப் போட்­டிக்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது.

மேல்­நிலை மற்­றும் கல்­லூரி மாண­வர்­க­ளுக்­கான கவி­தைப்­போட்­டி­யின் முதற்­கட்­டப் போட்­டி­யாக தலைப்பு மற்­றும் படங்­கள் கொடுத்து கவிதை எழு­தும் போட்­டி­யும் கொடுக்­கப்­பட்ட பத்து ஆங்­கி­லக்­ க­வி­தை­க­ளைக் கொண்டு மொழிப் ­ பெ­யர்ப்­புக் கவி­தைப் போட்­டி­யும் கவி­மாலை அறி­வித்­தது. (செய்தி: மோக­ன­பி­ரியா)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!