இடைவேளையும் புதுவேலையும்

ஊழியரணியில் மீண்டும் இணைய விரும்புவோருக்கு மனிதவளத் துறையினரின் ஆலோசனைகள்

சில மாதங்­கள் அல்­லது ஆண்­டு­கள் இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் வேலைக்­குச் செல்­லும்­போது சற்று அச்­ச­மாக இருக்­க­லாம். ஏனெ­னில், இடைப்­பட்ட காலத்தில் வேலைக்­கான தகு­தி­களும் தேவை­களும் மாறி­யி­ருக்­க­லாம்.

இடை­வெ­ளிக்­குப்­பின் மீண்­டும் வேலைக்­குச் செல்ல விரும்­பு­வோர், சிறிது காலம் எடுத்­துக்­கொண்டு தங்­களை ஆயத்­தப்­ப­டுத்­திக்­கொண்­டால் வேலை கிடைக்­கும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம் என்கிறார் 'மேன்­ப­வர்­கு­ரூப்' மனி­த­வள நிறு­வனத்­தின் சிங்­கப்­பூர் மேலா­ளர் லிண்டா டியா. அத்­த­கை­யோ­ருக்­கான சில குறிப்­பு­கள் இதோ:

 

திறன்­களை வலுப்­ப­டுத்­த­வும்

 

வேலை­யை­விட்டு நிற்­கு­முன் ஒரு­வரது திறன்­களும் அனு­ப­வ­மும் இப்­போ­தைய தேவைக்­குப் பொருத்­த­மில்­லா­மல் இருக்­க­லாம். அத­னால், ஒரு­வர் என்ன வேலைக்­குச் செல்ல விரும்­பு­கி­றாரோ, அதற்­குத் தேவை­யான புதிய தேர்ச்­சி­கள் என்ன என்­பதை ஆராய்ந்து, கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­கி­றார் திரு­வாட்டி டியோ.

ஒரு­வர் தாம் முன்பு செய்த வேலைக்கோ அல்­லது அது­போன்ற வேலைக்கோ திரும்ப விரும்­பி­னால் புத்­தாக்­கப் பயிற்­சி­கள் அவ­ருக்கு உத­வ­லாம். தன்­னார்­வத் திட்­டப்­பணி­களில் ஈடு­பட்டு, சற்று அனு­ப­வ­மும் தேர்ச்­சி­களும் பெற­லாம்.

குறித்த துறைக்கு அல்­லது வேலைக்கு உரிய பயிற்­சி­களில் சேர்ந்து ஆயத்­தப்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்­கி­றார் தாய்­மார்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வரும் 'மம்ஸ் அட் ஒர்க்' எனும் சமூக அமைப்­பின் நிறு­வ­னர் ஷெர்லி டோரி.

ஒரு­வர் புதி­தாக வேலை தேடு­முன் குறைந்­தது ஆறு முதல் எட்டு மாதங்­க­ளுக்­குத் திட்­ட­மிட்டு, தங்­க­ளது தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றார் அவர்.

தன்விவரக்குறிப்பைப் புதுப்பிக்கவும்

 

அவ்­வாறு தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்­திக்­கொண்­ட­பின், அவ்­வி­வ­ரங்­களை தங்­க­ளது தன்­வி­வ­ரக்­கு­றிப்­பி­லும் (Resume) 'லிங்க்­டு­இன்' பக்­கத்­தி­லும் முன்­னி­லைப்­ப­டுத்­த­லாம்.

வேலை­யி­லி­ருந்து இடை­வெளி எடுத்­துக்­கொண்­ட­தற்­கான கார­ணத்­தைத் தன்­வி­வ­ரக்­கு­றிப்­பில் குறிப்­பிட வேண்­டும் என்­றும் இடைப்­பட்ட காலத்­தில் பயிற்சி வகுப்­பு­கள் மூல­மாக தாங்­கள் கற்­றுக்­கொண்ட புதிய தேர்ச்­சி­களை முன்­னி­லைப்­படுத்த வேண்­டும் என்­றும் கூறி­னார் 'ரேன்ஸ்­டட்' ஆட்­சேர்ப்பு நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர் மற்­றும் மலே­சி­யா­விற்­கான மேலாண்மை இயக்கு­நர் ஜெயா தாஸ்.

"இடைப்பட்ட காலத்தில் ஒரு­வர் தமது திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்ள எடுத்­துக்­கொண்ட முயற்சி­களை வேலை நேர்­கா­ண­லின்­போது விளக்­கும்­போது அது நேர்­கா­ணல் செய்­ப­வரை ஈர்த்து, வேலை கிடைப்­ப­தற்­கான வாய்ப்­பு­களை அதி­க­ரிக்­க­லாம்," என்­றார் திரு­வாட்டி ஜெயா தாஸ்.

 

தெரிந்­த­வர்­களை அணு­க­லாம்

 

வேலைக்­கான போட்டி அதி­க­மாக இருக்­கும்­போது, சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னத்­தில் தெரிந்­த­வர்­கள் எவ­ரே­னும் இருப்­பி­னும் அவர்­மூ­லம் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வது சாத­க­மாக விளங்­க­லாம் என்­கி­றார் திரு­வாட்டி டோரி.

வேலை தேடு­ப­வர்­கள் தங்­க­ளது முன்­னாள் மேலா­ளர்­க­ளைத் தொடர்பு­கொண்டு பரிந்­து­ரைக் கடி­த­மும் ஆலோ­ச­னை­யும் பெறு­வது ஒரு­வருக்கு வேலை கிடைக்­கும் வாய்ப்பு­களை அதி­க­ரிக்­கும் என்று திரு­வாட்டி தாஸ் கூறி­னார்.

'லிங்க்­டு­இன்' மூலம் தங்­க­ளது தொடர்­பு­களை விரி­வு­ப­டுத்­து­வ­தும் நல்­லது.

அது­போல, நிபு­ணத்­து­வச் சங்­கங்­கள், வணி­கச் சங்­கங்­கள், வர்த்­த­கச் சபை­கள் போன்­றவை நடத்­தும் நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­றும் ஒரு­வர் தம்முடைய தொடர்பு வட்டாரத்தை விரி­வு­ப­டுத்­த­லாம்.

 

வேலைப்பயிற்சி வாய்ப்பு

 

மீண்­டும் நிரந்­தர வேலை கிடைக்கு­முன், இடைப்­பட்ட காலத்­தில் குறைந்த கடப்­பா­டும் எதிர்­பார்ப்­பு­களும் கொண்ட தன்­னார்வ அல்­லது பகு­தி­நேர வேலை­க­ளைச் செய்­ய­லாம் என்­கி­றார் 'ஃபாஸ்ட்கோ' ஆட்­சேர்ப்பு நிறு­வ­னத்­தின் நிறு­வ­ன­ரும் தலைமை நிர்­வா­கி­யு­மான திரு ஜூலி­யன் டான்.

வேலை­யில் இருந்து இடை­வெளி எடுத்­துக்­கொண்­டோர் மீண்­டும் ஊழி­ய­ர­ணி­யில் இணைய 'ரிட்­டன்­ஷிப்' எனும் வேலைப்­ப­யிற்­சித் தெரி­வு­கள் மூலம் ஆத­ர­வ­ளிக்­கப்­படு­கின்­றன.

"பெரும்­பா­லான நேரங்­களில், 'ரிட்­டன்­ஷிப்' வேலைப்­ப­யிற்­சியை ஒரு நிறு­வ­னம் அளித்­தால், ஒரு­வரது திற­மை­யின் மதிப்பை அந்­நி­று­வ­னம் உணர்ந்­துள்­ளது என்­றும் அவர் மேலும் ஊழி­ய­ர­ணி­யில் இணைய அந்­நி­று­வ­னம் பெரி­தும் ஆத­ர­வ­ளிக்­கும் என்­றும் உறு­தி­யாக இருக்­க­லாம்," என்­றார் திரு­வாட்டி டோரி.

 

எதிர்பார்ப்புகளைக் குறைக்கலாம்

 

நீண்­ட­கால வேலை இடை­வெளி எடுத்­துக்­கொண்ட ஒரு­வர், மீண்­டும் வேலைக்­குத் திரும்­பும்­போது சம்­ப­ளத்­தைக் குறைத்­துக்­கொள்­ள­லாம் என்று திரு­வாட்டி டியோ கூறி­னார்.

சிறிது கால இடை­வெ­ளிக்­குப்­பின் மீண்­டும் வேலைக்­குத் திரும்ப விரும்­பும் ஒரு­வர், தமது மதிப்பை அறிந்­தி­ருக்க வேண்­டும். குறிப்­பாக, நான்கு அல்­லது ஆறு ஆண்­டு­கள் கழித்து வேலைக்­குத் திரும்ப விரும்­பும் ஒரு­வர், நேர்­கா­ண­லின்­போது தமது அனு­ப­வம் மட்­டு­மின்றி, தமது திற­மை­யை­யும் நிறு­வ­னம் மதிப்­பிடலாம் என்­பதை உணர்ந்­தி­ருக்க வேண்­டும் என்­கி­றார் திரு­வாட்டி டோரி.

"ஆகை­யால், கற்­றுக்­கொள்­ளத் தயா­ராக இருப்­ப­தி­லும் தமது நீண்­ட­கா­லத் திட்­டத்­தி­லும் நிறு­வ­னத்­தின் இலக்­கு­க­ளுக்­குத் தாம் எவ்­வ­கை­யில் பொருத்­த­மாக இருப்­போம் என்­ப­தி­லும் அச்­ச­மின்றித் தொழில்­நுட்ப மாற்­றங்­க­ளைக் கையாள முடி­யும் திற­னி­லும் கவ­னம் செலுத்த வேண்­டும்," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!