எளிமையும் இனிமையும் கலந்த சித்திரைப் புத்தாண்டு

கி.ஜனார்த்­த­னன்

 

கட்­டு­மா­னத் துறை­யில் பாது­காப்பு நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் குரு­சங்­கர் சங்­க­ர­தாஸ், 42, கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் கடந்­தாண்டு கடு­மை­யாக இருந்­த­போது, சிங்கப்பூரில் உள்ள வய­தான பெற்­றோரை புத்­தாண்­டுக்­காக நேரில் சந்­திக்க இய­ல­வில்லை. காணொளி மூலம் உரையாடி திருப்தியடைந்து கொண்டனர்.

"கிரு­மிப்­ப­ர­வல் குறித்த கவ­லை­யும் எங்­க­ளது பெற்­றோரின் உடல்­நலம் குறித்த அச்­ச­மும் கடந்­தாண்டு அதி­க­மாக இருந்­தது என்றே சொல்­ல­வேண்­டும்," என்­றார் குரு­சங்­கர்.

இவ்­வாண்­டும் சித்­தி­ரைப் புத்­தாண்டு எளி­மை­யாக இருந்­தா­லும் தங்­க­ளது பெற்­றோரை நேரில் சந்­தித்து கொண்­டா­டப் போவதை எண்ணி குரு­சங்­க­ரின் குடும்­பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

இந்­தக் குடும்­பத்தினர் தற்­போது ஜூரோங் வெஸ்ட் வட்­டா­ரத்­தில் வசித்து வருகின்றனர். சித்திரைப் புத்தாண்டின் அதி­கா­லை­யில் எழுந்து நல்ல நேரத்­தில் பொங்­க­லிட்டு வழி­படும் இந்­தக் குடும்­பத்தினர், பிறகு வேலை மற்­றும் பள்­ளி­க­ளுக்­குச் செல்­வர். மாலை வீட்­டில் மீண்­டும் இறை­வ­ழி­பாட்­டுக்­குப் பிறகு அரு­கி­லுள்ள தமது மனை­வி­யின் பெற்­றோர்­ வீட்­டுக்­குச் செல்­வர். அத்துடன் அக்கம் பக்கத்தில் வாழும் தெரிந்தவர்களைக் கண்டு புத்­தாண்டு வாழ்த்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்டு மகிழ்­­வர். புனித வெள்­ளிக்­கி­ழமை விடு­மு­றை­யின்­போது குடும்பத்துடன் தன் பெற்­றோரின் வீட்­டுக்­குச் செல்­லப்­போ­வ­தாக மகிழ்ச்சி பொங்க கூறினார் திரு குரு­சங்­கர்.

புத்­தாண்­டுக்கு இரண்டு வாரங்­களுக்கு முன்­னால் வீட்­டைச் சுத்­தம் செய்­தி­ருந்­தார் குரு­சங்­க­ரின் மனைவி திரு­மதி சுமதி, 42. நல்ல நேரப்­படி பொங்­கல் வைத்­த­பின் தாம் சமைத்த பதார்த்­தங்­களை எடுத்­துக்­கொண்டு அரு­கில் வசிக்கும் தம் பெற்­றோர் வீட்­டுக்கு குடும்­பத்துடன் செல்­லப்­போ­வ­தா­க­வும் கடற்­துறை தள­வாட அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்­றும் திரு­மதி சுமதி கூறி­னார்.

பலர் சித்­தி­ரைப் புத்­தாண்டு தினத்­தன்று கோயி­லுக்­குச் செல்­லும் வழக்­கம் கொண்­டி­ருந்­தா­லும் அந்­நா­ளில் தமது வீட்டை கோயி­லாக்க வேண்­டும் என்றே இத்­தம்­ப­தி­யி­னர் விரும்­பு­கின்­ற­னர்.

வார நாளில் குடும்­பத்­தி­ன­ரு­டன் சித்­தி­ரைப் புத்­தாண்டு கொண்­டா­டு­வ­தால் சிறு சிறு சிர­மங்­கள் ஏற்­பட்­டா­லும் பாரம்­ப­ரி­யத்­தைத் தொட­ரும் பல குடும்­பங்­களில் தமது குடும்­ப­மும் ஒன்று என நினைக்­கும்­போது பெருமை அடை­வ­தா­கக் குறிப்­பிட்­டார். "எந்­தக் கலா­சா­ர­மாக இருந்­தா­லும் புத்­தாண்­டின்­போது வரும் ஆண்டு நல்ல ஆண்­டாக இருக்­க­வேண்­டும் என்ற நம்­பிக்­கை­யைக் கொண்டிருப்பர். கொவிட்-19 நில­வ­ரம் சீர­டைந்து இனி வரும் பண்­டி­கை­க­ளின்­போது இந்­நாட்­டின் நிலை சீராக இருக்­க நான் வேண்­டு­கி­றேன்," குருசங்கர் மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!