சித்திரைக் கலை விழா, இந்திய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

மாதங்கி இளங்­கோ­வன்

இந்­திய புத்­தாண்டு விழா

வெவ்­வேறு இந்­திய சமூ­கங்­கள் இம்­மா­தத்­தில் தங்­கள் புத்­தாண்­டைக் கொண்­டா­டு­வ­தை­யொட்டி அவற்றை சிறப்­பிக்­கும் வண்­ணம் நடந்த நிகழ்ச்­சி­தான் லிஷா­வின் இந்­திய புத்­தாண்டு விழா.

இந்­நி­கழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராக பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின் அமைச்­ச­ரான இந்­தி­ராணி ராஜா கலந்­து­கொண்­டார். சிங்­கப்­பூ­ரி­லி­ருக்­கும் பதி­னாறு இந்­திய சமூ­கங்­களைப் பிர­தி­நி­தித்து அதன் தலை­வர்­களும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சில விருந்­தி­னர்­களும் சென்ற வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று நிகழ்ச்­சிக்கு வரு­கை­ய­ளித்­த­னர்.

மலை­யா­ளம், தெலுங்கு, சிந்தி, பிரா­னா­கான், பஞ்­சாபி ஆகிய சமூ­கங்­க­ளைச் சேர்ந்த நட­ன­மணி­கள் மேடை­யில் தங்­கள் திற­மை­யை­யும் கலா­சா­ரத்­தை­யும் வெளிக்­காட்­டும் விதத்­தில் நட­னங்­களை படைத்து வரு­கை­யா­ளர்­க­ளைப் பர­வ­சப்­ப­டுத்­தி­னர். அது­மட்­டு­மல்­லா­மல் உள்­ளூர்க் கலை­ஞர்­களும் பாடல்­க­ளைப் பாடி நிகழ்ச்­சியை மேலும் சிறப்­பித்­த­னர்.

சித்­தி­ரைக் கலை விழா

திருக்­கு­ற­ளை­யும் திரு­வள்­ளு­வ­ரை­யும் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்டு சித்­தி­ரைப் புத்­தாண்டை இவ்­வாண்டு கொண்­டா­டு­கின்­றது லிஷா அமைப்பு. 'உள்­ளத்­தில் நல்ல உள்­ளம்' போன்ற திரைப்­பட பாடல்­க­ளைக் கொண்டு சில குறள்­க­ளின் பொரு­ளை­யும் நீங்­காச் சிறப்­பை­யும் வெளிக்­காட்­டி­னர், உள்­ளூர் கலை­ஞர்­கள்.

"ஒன்­ஃபே­ரர் விடுதி மேடை­யில் நடந்த இந்­நி­கழ்ச்­சி­யில் இனிய பாடல்­க­ளுக்கு மெரு­கூட்­டும் வகை­யில் நட­னங்­களும் இடம்­பெற்­றன.

அது­மட்­டு­மல்­லா­மல், தமி­ழ­கத்­தைச் சேர்ந்த இசைக்­கவி ரம­ணன், ஒரு சில குறள்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து அவை எப்­படி இன்­றும் மக்­க­ளுக்­குப் பொருந்­து­கின்­றன என்­பதை விளக்­கி­னார்.

இவ்­வி­ழா­விற்கு சிறப்பு விருந்­தி­ன­ராக வந்­தி­ருந்த வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், "பல இன சமு­தா­யத்­தில் வசிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு, தாய்­மொழி நம் தனிப்­பட்ட கலா­சா­ரங்­க­ளுக்கு அடித்­த­ள­மாக அமை­கின்­றது. "நமது முன்­னோர்­க­ளின் வாழ்க்கை, காலம் கால­மாக மற்ற இனத்­த­வ­ரோடு பின்­னிப் பிணைந்­தி­ருந்­த­தால் அவர்­க­ளு­டைய பண்­பா­டு­கள், வழி­மு­றை­கள் அனைத்­தும் உன்­ன­த­மான சிங்கை தமி­ழர் நடை­மு­றை­க­ளாக அமைந்­து­விட்­டன," என தம் உரை­யில் கூறி­னார். அதா­வது, சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் தமி­ழர்­க­ளுக்­கென தனிப்­பட்ட ஓர் அடை­யா­ளம் உள்­ளது என்று அவர் கூறி­னார்.

மேலும், இரண்டு ஆண்­டு­களுக்­குப் பின்பு லிஷா அமைப்பு நேரடி நிகழ்ச்­சி­களை நடத்­தி­ய­தில் பெரு­மி­தம் கொண்­ட­தோடு தொடர்ந்து தமி­ழர் அடை­யா­ளத்தை பேணிக்­காப்­ப­தில் முக்­கிய பங்­காற்­று­வ­தா­க அமைச்­சர் விவி­யன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!