தடையின்றி அனுசரிக்கப்படும் புனித வெள்ளி

மாதங்கி இளங்­கோ­வன்

ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு கிறிஸ்­துவர்­கள் முழு மன­த்தோடு தடங்­க­லின்றி தங்­கள் பிரார்த்­த­னை­க­ளைப் பூர்த்­தி­செய்ய தேவா­ல­யங்­கள் தங்களது கத­வு­க­ளைத் திறந்­து உள்­ளன.

கொவிட்-19 சூழ­லில் நடப்­பில் இருந்து வந்த பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­க­ளி­லி­ருந்து மக்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தால், கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இணங்கி தேவா­ல­யங்­களில் குறிப்­பிட்ட நேரத்­திற்கு மட்­டுமே இருக்க வேண்­டிய அவ­சி­யம் இப்­போது இல்லை.

இயேசு கிறிஸ்து தம் மக்­க­ளுக்கு செய்த தியா­கங்­க­ளுக்­கும் சிலு­வை­யில் அறை­யப்­பட்டு உயிர் நீத்­ததையும் நினை­வு­கூ­ரும் நாள்­தான் புனித வெள்­ளி­யாக அனு­ச­ரிக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நா­ளில் தேவா­ல­யங்­களில் ஒன்­று­கூடி பிரார்த்­தனை செய்­வதோடு கர்த்­த­ரா­கிய இயேசு கிறிஸ்து சிலு­வை­யில் அனு­ப­வித்த துன்­பங்­களை­யும் இறப்­பை­யும் நினை­வு­கூர கிறிஸ்துவர்கள் "லெந்து" காலத்­தின்போது விர­தம் இருப்­பது வழக்­கம்.

இன்று வெவ்­வேறு தேவா­ல­யங்­களில் சிறப்பு வழி­பாட்­டுக் கூட்­டங்­கள் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன.

தேவா­ல­யங்­க­ளுக்கு வரும் கிறிஸ்­துவர்­கள் பிரார்த்­தனை வாயி­லாக தங்­கள் பிரச்­சி­னை­க­ளைப் பகிர்ந்­து­கொள்­கின்­ற­னர்.

பாவ மன்­னிப்பு பெற அவர்­கள் கட­வுளை வழி­ப­டு­கின்­ற­னர் என்று ஈசூன் கிறிஸ்­துவ தேவா­ல­யத்­தின் குரு­வா­ன­வர் அருட்­திரு இஸ்­ர­வேல் செல்­வம், 48, கூறி­னார்.

"கொவிட்-19 சூழ­லால் தங்­கள் பிரார்த்­த­னை­களை நேர­டி­யாக மன­மார்ந்து பூர்த்­தி­செய்ய முடி­யாத நிலை­யி­லி­ருந்த பக்­தர்­க­ளுக்கு இம்­முறை புனித வெள்ளி புதி­ய­தொரு நம்­பிக்­கை­ய­ளிக்­கும் நாளா­கத் திகழ்­கிறது.

"ஒரு­மித்த சமூ­க­மாக தேவா­ல­யங்­களில் வழி­ப­டு­வோ­ருக்கு வாழ்க்­கை­யில் எந்­த­வொரு சிக்­கல் ஏற்­பட்­டா­லும் தங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க தங்­க­ளைச் சுற்றி பல­ரும் உள்­ள­னர் என்று அவர்­கள் மீண்­டும் ஒன்­று­கூ­டும் இந்­நாள் நினை­வு­படுத்து­கிறது," என்­றார் அருட்­திரு இஸ்­ர­வேல்.

ஈசூன் கிறிஸ்­துவ தேவா­ல­யம், கொவிட்-19 பாது­காப்பு நடை­முறை­களைப் படிப்­ப­டி­யாகத் தளர்த்தி வந்­தா­லும் தேவா­லய வளா­கத்­தில் கிருமி நாசி­னி­யைத் தொடர்ந்து தெளித்து சுகா­தா­ரத்­தைக் கட்­டிக்­காக்­கிறது.

வழி­பாட்­டிற்கு வரு­ப­வர்­க­ளுக்கு உண­வுப் பொட்­ட­லங்­களை வழங்­கி­னா­லும், அவற்றை வீட்­டிற்கு எடுத்­துச் சென்று உண்ண தேவா­லய நிர்­வா­கத்­தி­னர் ஊக்­கு­விக்­கின்­ற­னர்.

கிறிஸ்­துவர்­கள் இன்று தேவா­ல­யங்­க­ளுக்­குச் செல்ல முன்­ப­திவு செய்­யத் தேவை­யில்லை.

அது­மட்டு­மல்­லா­மல், இருக்­கை­களில் அமரும்­போது தங்­க­ளுக்கு இடையே ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யைப் பின்­பற்­றத் தேவை­யில்­லா­த­தால் தேவா­லய வளா­கத்­தில் இடப்­பற்­றாக்­கு­றை­யைப் பற்றி கவ­லைப்­ப­ட­வும் அவ­சி­ய­மில்லை.

தேவா­ல­யத்­திற்­குள் நுழை­வதற்கு முன்பு தங்­கள் கைப்­பே­சி­களில் சேஃப் என்ட்ரி பதிவைச் செய்­தால் மட்­டும் போது­மா­னது.

வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை ஈஸ்டர் பண்­டி­கையை நேர­டி­யாக தேவா­ல­யங்­கள் கொண்­டா­ட­வி­ருப்­பதைக் காண­வும் கிறிஸ்­துவர்­கள் ஆர்­வத்­தோடு உள்­ள­னர்.

புனித வெள்ளிக்குப் பிறகு இயேசு­வின் உயிர்த்­தெ­ழு­த­லைக் கொண்­டா­டும் ஈஸ்­டர் ஞாயி­றும் கிறிஸ்­துவர்­க­ளுக்கு முக்கி­ய­மான நாளாக அமை­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!