இசைபட/ பாட-ஓர் இனிய கற்றல் அனுபவம்

புத்­தாக்க எண்­ணங்­க­ளு­டன் தமி­ழி ­சையைக் கற்று படைக்க விரும்­பும் இளை­ஞர்­க­ளுக்­காக வளர்­த­மிழ் இயக்­கம் ஏற்­பாட்­டில் நடக்­கும் 'தமிழ்­மொழி விழா 2022'ன் ஒரு பகு­தி­யாக 'பிக்ஸ்­பிட்' நிறு­வ­னம், இம்­மா­தம் 15ஆம் தேதி பிற்­ப­கல் 2 முதல் 4 மணி வரை இணை­யத் தளங்­க­ளின் வழி­யாக இசை­பட/ பாட எனும் மெய்­நி­கர் நிகழ்ச்­சியை அரங்­கேற்­றி­யது.

தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் ஆத­ர­வில் இந்த நிகழ்ச்சி இடம்­பெற்­றது.

நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­னர் குமாரி மோகன் பாபு. தாய்­மொழி கற்­றல் அவ­சி­யத்­தை­யும் நில­வுக்கு தான் அனுப்­பிய கலைப் படைப்­பு­கள் பற்­றி­யும் தெளி­வாக எடுத்­து­ரைத்­தார்.

திரு­மதி. ராஜி ஸ்ரீனி­வா­சன் தமிழிசை­யின் தொன்மை பற்­றிப் பகிர்ந்து­கொண்­டார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் தமிழ் நாட்டி லிருந்து முனை­வர் வளப்­பக்­குடி வீர ஷங்­கர் நாட்­டுப்­பு­றப் பாடல்­களில் தமிழ் தொடக்­கம் எந்த அள­வுக்கு வேரூன்றி இருக்­கிறது என்­ப­தைப் பற்றி எளி­மை­யாகப் பாடி முறை­யாக விளக்­கி­னார்.

தமிழ் திரைப்­ப­டங்­களில் சுமார் 40 வருட இசை அனு­ப­வமிக்க விஜய் சங்­கர், வெற்றி பெறும் பாடல்­களை இசை­ய­மைக்­கும் வழிமுறை­களை பகிர்ந்து கொண்­டார்.

தேசிய தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள் தேஜஸ்­வினி மற்­றும் கநே­சா­னந்த கீர்த்தி (கே.ஏ) கணினி இசை­யில் தமிழ் மொழி பயன்­பாடு பற்றி கற்­ற­தை­யும் அதன் மூலம் பெற்ற அனு­ப­வங்­க­ளை­யும் பற்றி தெளி­வாக விளக்­கி­னார்.

சி. குண­சே­க­ரன், சேம்­சங் மற்­றும் 'பிரைன்ஸ்­டோர்ம்ஸ்' நிறுவனங்­க­ளு­டன் இணைந்து 5G தொழில்­நுட்­பம் வழி 'SwarShala' மென்­பொ­ருள் வழி தமி­ழிசை உருவாக்­கும் முறை­களை எடுத்­துக் கூறி­னார்.

இந்­நி­கழ்ச்­சி­யின் தொடர்ச்­சி­யாக புத்­தாக்­கத்­து­டன் உரு­வாக்­கும் திட்­டங்­களைத் தெளி­வாக விவரித்து எழு­து­வோ­ருக்கு பரிசு அறி­விக்­கப்பட்­டுள்­ளது.

தமிழ்­மொழி மாதம் 2022 சார்­பில் நடந்த இசை பட/ பாட மெய்­நி­கர் நிகழ்ச்­சியை https://www.youtube.com/watch?v=migRgIDTDas என்ற தொடர்பு வழி­யா­கப் பார்த்து சுமார் 100 வார்த்­தை­க­ளுக்­குள் தமிழ் இசைப் படைப்­பு­களை புத்­தாக்கத்­து­டன் உரு­வாக்­கும் திட்­டங்­களை கீழே கொடுக்­கப்­பட்­டுள்ள தளத்­தில் தெளி­வாக விவ­ரித்து எழுத வேண்­டும். https://forms.gle/EvhqhTwNc EujyyBb6 இதில் 12 முதல் 18 வய­துக்கு உட்­பட்ட சிங்­கப்­பூர் மாண­வர்­கள் கலந்து கொள்­ள­லாம்.

சிறப்­பான திட்­டங்­க­ளுக்கு மதிப்­பு­மிக்க பரி­சு­கள் காத்­தி­ருக்­கின்­றன.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு: guna@pixibit.com.sg, சி.குண­சே­க­ரன் 96601051. போட்டி விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்­டது. உங்­கள் படைப்­பு­களை அனுப்ப வேண்­டிய இறுதி நாள் ஏப்­ரல் 27.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!