‘எல்லா மொழி­க­ளை­யும் கற்­றுக்கொள்; தமிழ் மொழி மீது பற்­றுக்கொள்’

தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக வளர்தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆதரவில் இம்மாதம் 17ஆம் தேதியன்று ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) "நிற்க அதற்குத் தக" எனும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியை இணையம் வழியாக நடத்தியது. யூனோய தொடக்கக் கல்லூரி மாணவி அனுமிதா முரளியின் "வாழ்க தமிழ் மொழி" எனும் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.

சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர், "சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நலப்பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன் னாள் மாணவர்கள் சங்கம், கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை 111 நிகழ்ச்சி களை நடத்தி சாதனை படைத்து உள்ளது," என்று தமது வரவேற்பில் குறிப்பிட்டார்.

தமிழ் மொழியை அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மாணவர் அங்கத்தில் 'புத்தாக்கம்' எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார் 'நான் சியாவ்' தொடக்கப்பள்ளி மாணவர் முஹம்மது ஷேய்க் ஷஹீம்.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் திரு. சு. மனோ­க­ரன் வழங்­கிய வாழ்த்­து­ரை­யில் "தமிழ் மொழி விழா­வின் முக்­கிய அம்­சங்­கள் தமிழ் மொழி­யைக் கொண்­டா­டு­வ­தும், தமிழ் மொழியை வளர்ப்­ப­து­மா­கும் என்­றும் தமிழ் மொழி விழா­வில் எல்லா வய­தி­ன­ருக்­கும் பொருத்­த­மான நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன," என்றும் எடுத்­து­ரைத்­தார்.

2021ஆம் ஆண்டு பொதுக்­கல்வி உயர்­நி­லைத் தேர்­வில் சிறப்­புத் தேர்ச்­சி பெற்ற டிபிஎஸ் அனைத்­து­ல­கப் பள்ளி மாண­வர் முஹம்­மது முஹ்­சின் கான் கல்­வி­யில் சிறந்து விளங்­கு­வ­தைப் பாராட்டி ஊக்­கு­விக்­கும் வண்­ணம் பாராட்டுச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டது.

"நிற்க அதற்­குத் தக" என்ற தலைப்­பில் தமி­ழா­சி­ரி­ய­ரும் பிர­பல பேச்­சா­ள­ரு­மான கவி­ஞர் ஜோ. அருள் பிர­காஷ், தமிழ் மொழி­யின் அழ­கை­யும் சிறப்­பி­யல்­பு­க­ளை­யும் நகைச்­சு­வை கலந்து ஒரு மணி நேரம் சிறப்­பு­ரை ஆற்­றி­னார்.

அவர் ஆற்­றிய சிறப்­பு­ரை­யில் "சேமித்த அறி­வும் சிந்­தித்த அறி­வும் ஒரு பேச்­சா­ள­ருக்கு அவ­சி­யம். திருக்­கு­ற­ளைப் பிரித்­தால் பூ! இணைத்­தால் மாலை! வணி­கத்­தில் தர்­மம் கிடை­யாது; தர்­மத்­தில் வணி­கம் கிடை­யாது. அழும்­போ­து­கூட ஒழுங்­கு­மு­றை­யோடு அழு­ப­வன் தமி­ழன். அடுத்­த­வர் துன்­பத்தை தன் துன்­ப­மாக நினைப்­பதே அறி­வு­டைமை. மனித வாழ்வு சிறக்க வள்­ளு­வம் ஒன்றே போதும்! கற்­றுக்கொள்ள வேண்­டும் என்ற ஆர்­வம் அவ­சி­யம். தமிழ் மொழி வாழ்­வி­ய­லைச் சொல்­லிக் கொடுக்­கிறது. படைப்­பி­லக்­கி­யங்­கள் தொடர்ந்து படைக்­கப்­ப­டு­வ­தால், தமிழ் மொழி இள­மை­யா­கவே உள்­ளது. எல்லா மொழி­க­ளை­யும் கற்­றுக்கொள்; தமிழ் மொழி­யின் மீது பற்­றுக்கொள்! சிந்­தித்து சிந்­தித்து செதுக்­கப்­பட்ட மொழி தமிழ் மொழி" என்று அரிய பல கருத்­துக்­க­ளைச் சுவை­யாக எடுத்­து­ரைத்­தார்.

சங்கத்தின் செயலவை உறுப்பினர் ரியாஜ் அகமது இந்நிகழ்ச்சியைச் சிறப் பாக வழிநடத்தினார்.

சங்கத்தின் துணைத் தலைவர் கலந்தர் மொகிதீன், செயலவை உறுப்பினர் அப்துல் சுபஹான் ஆகியோரின் தகவல் தொழில்நுட்ப உதவியோடு தமிழ் மணம் கமழ இனிதே நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!