வண்ணத்தில் மின்னும் நவீன மின்னூல் திரை

வண்ணத்தில் மின்னும் நவீன மின்னூல் திரை

1 mins read
1072b4db-dc1c-46c5-b777-28b52290b660
முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட கலைடோ-3ஐவிட கலைடோ பிளஸ் நவீனமானது.படம்: பிஸினஸ் வயர் -

மின்­னூல்­களை வாசிக்க உத­வும் கிண்­டில் உள்­ளிட்ட மின்­தி­ரை­கள் பொது­வாக கருப்பு வெள்­ளை­யில் இருக்­கும். வண்­ணப் புத்­த­கங்­களை படிக்க வேண்­டு­மா­னால் வண்­ணத்­தில் இருக்­காது. 'பாக்­கெட்­புக்', 'இ-இங்க்' போன்ற இதர வாசிப்பு திரை­களும் கறுப்பு வெள்ளை யிலேயே இருக்­கின்­றன.

இந்த நிலை­யில் 'கலைடோ பிளஸ்' என்ற வண்­ணத் திரை கொண்ட இ-ரீடரை, 'இ-இங்க்' நிறு வனம் அண்­மை­யில் அறி­மு­கப் படுத்­தி­யது. இது, ஏற்கெ­னவே இ-இங்க் உரு­வாக்­கிய 'கலைடோ-3' என்ற திரையைவிட 30 விழுக்­காடு அதிக அடர்த்­தி­யான வண்ணங் களைக் கொண்­டது.

மேலும் கண்­ணுக்­குக் கெடு­தல் விளை­விக்­கும் நீல ஒளியை 'கலைடோ பிளஸ்' அறு­பது விழுக்­காடு வரை குறைக்­கும் என்று ெதரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சிறிய திரை முதல் 13.3 சதுர அங்­கு­லம் வரை­யி­லான வெவ்­வேறு அள­வு­களில் 'கலைடோ பிளஸ்' வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. வெளிச்­சம் இல்­லா­மல் இர­வில் படித்­தா­லும் கண்­க­ளுக்கு இதமாக இருக்­கும்­படி இதி­லுள்ள தொழில்­நுட்­பம் உத­வு­கிறது. இம்­மா­தம் 27ஆம் தேதி அன்று தைவானில் நடக்­கும் தைப்பே நங்­காங் (Taipei Nangang) கண்­காட்­சி­யில் புதிய கலைடோ-பிளஸ் வாசிப்­புத் திரை அறி­முகப்ப­டுத்­தப்­ப­ட­லாம்.