‘இயற்கையும் தமிழர் வாழ்வும்’

அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர்­கள் சங்­கத்தின் நிகழ்ச்சி

தமிழ்மொழி மாத விழா­வின் ஓர் அங்­க­மாக, வளர்தமிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில், அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம் (சிங்­கப்­பூர்) தொடர்ந்து ஒன்­ப­தா­வது ஆண்­டாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை, ஏப்­ரல் 24ம் தேதி "இயற்­கை­யும் தமி­ழர் வாழ்­வும்" என்ற தலைப்­பில் மெய்­நி­கர் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இளம் தலை­மு­றை­யைச் சேர்ந்த செல்வி. சுப்­ரஜா சர­வ­ணக்­கு­மா­ரின் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாட­லு­டன் நிகழ்ச்சி இனிதே தொடங்­கி­யது.

சிங்­கப்­பூர் மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் மற்­றும் பல்­வேறு அமைப்­பு­க­ளைச் சேர்ந்த தலை­வர்­கள் என ஏராளமானோர் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

வர­வேற்­புரை வழங்­கிய சங்­கத்­தின் தலை­வர் தலை­வர் திரு. சௌந்­தர ராஜன், தமி­ழ­ரின் வாழ்­வி­யலை ஆய்வு செய்­தால் இயற்கை குறித்த தமிழ் அறிவு மரபு நம்மை வியப்­ப­டை­யச்­செய்­யும் என்­ப­தை­ச் சுட்­டிக்­காட்டி, அதன் பொருட்டே இந்­தத் தலைப்பு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது என விளக்­கம் அளித்­தார்.

நிகழ்ச்­சிக்கு முன்­னிலை ஏற்று தொடக்­க­வுரை அளித்த அண்­ணா­மலைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் துணை வேந்­தர், பேரா­சி­ரி­யர் இராம. கதி­ரே­சன், இயற்­கை­யோடு இணைந்த தமி­ழர் நாக­ரி­கம் பற்­றி பேசினார்.

அத்துடன், எவ்­வாறு தமி­ழர்­கள் திரு­வி­ழாக்­களை தங்­க­ளின் முதன்­மைப் பயி­ரான நெல் வளர்ச்­சி­யின் ஐந்து பரு­வங்­க­ளோடு ஒப்­பிட்டு கொண்­டா­டி­னார்­கள் என்­பதை எடுத்­து­ரைத்­தார்.

விதைவிதைக்­கும் பரு­வம், குருத்து விடும் பரு­வம், பூப்­பூக்­கும் பரு­வம், நெல்மணி­யா­கும் பரு­வம், அறு­வ­டைப் பரு­வம் ஆகிய ஐந்து பரு­வங்­க­ளுக்­கும் எவ்­வாறு ஆடிப்­பெ­ருக்கு முதல் அறு­வ­டைத் திரு­நாள் வரை விழா எடுத்­துக் கொண்­டா­டி­னார்­கள் என்­பதை அழ­காக விளக்­கிக்­கூ­றி­னார்.

"இயற்­கை­யும் தமி­ழர் வாழ்­வும்" என்ற தலைப்­பில் தங்­க­ளின் ஆய்­வுப் படைப்­பினை சமர்ப்­பிக்க பள்ளி மாண­வர்­க­ளுக்­குப் போட்டி நடத்­தப்­பட்­டது.

இந்­தப் போட்­டி­யில் 49 மாண­வர்­கள் கலந்துகொண்டனர். அவர்களில், உயர்நிலை 1, 2ஆம் பிரிவுக்கான முதல் பரிசை தெமாசெக் தொடக்கக் கல்லூரியின் மாணவி சுரேஷ் அனிகா, ஆசிரியை திருமதி சூடிக்கொடுத்தாள் கணேசன் வென்றனர்.

உயர்நிலை 3, 4ஆம் பிரிவுக்கான முதல் பரிசை ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் மாணவர் ஆறுமுகம் முகேஷ்குமார், ஆசிரியை திருமதி கல்யாணி நாராயணன் வென்றனர்.

தொடக்கக் கல்லூரி பிரிவுக்கான முதல் பரிசை தெமாசெக் தொடக்கக் கல்லூரியின் மாணவர் விஷால் அருண்குமார், ஆசிரியை திருமதி சூடிக்கொடுத்தாள் கணேசன் வென்றனர்.

வெற்றி பெற்ற மாண­வர்­கள் நிகழ்ச்­சி­யில் தங்­க­ளது ஆய்­வி­னைப் படைத்து அனை­வ­ரின் பாராட்­டு­களை­யும் பெற்­ற­னர்.

இந்த நிகழ்ச்­சி­யில் சிறப்­புரை ஆற்­றிய சிங்கை எழுத்­தா­ளர், கவி­ஞர், மற்­றும் இலக்­கிய மேடைப்­பேச்­சா­ளர் முனை­வர் சரோ­ஜினி செல்­லக்­கி­ருஷ்­ணன், தமி­ழர்­கள் இயற்­கை­யின் வனப்­பி­லும், பூப்­பி­லும், பொலி­வி­லும் ஈடு­பட்டு மகிழ்­வ­தோடு நின்­று­வி­டா­மல், பயன்­த­ரும் அந்த இயற்­கையை எவ்­வாறு தன் வாழ்க்­கைத் துணை­யாக்­கிக் கொண்­டார்­கள் என்­பதை விளக்­கிக்­கூ­றி­னார்.

முந்­தைய ஆண்டு தமிழ் மொழி விழாக்­க­ளின் சுருக்­கத் தொகுப்பை திரு. செல்­வ­முத்­துக்­கு­ம­ரன் படைக்க, சங்­கத்­தின் செய­லா­ளர் செல்வி சுவர்ணா நன்­றி­யுரை நவில, நிகழ்ச்­சி­யின் நெறி­யா­ள­ராக திரு­மதி ஷோபா அழ­குத் தமி­ழில் அனை­வ­ரை­யும் ஒருங்­கி­ணைத்­துச் செல்ல, நிகழ்ச்­சி­யின் ஏற்­பாட்­டுக் குழுத்­த­லை­வ­ராக செயல்­பட்ட சங்­கத்­தின் செயற்­குழு உறுப்­பி­னர் திரு. கும­ரே­சன் நிகழ்ச்­சியை செவ்­வனே வழி நடத்­திச் சென்­றார்.

செய்தி: அண்­ணா­ம­லைப் பல்கலைக்­க­ழக முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!