ரேஷ்வரனின் கனவு நனவானது

2,000 சிறுவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் இலக்கைக் கொண்டுள்ளது 'மேக் அ விஷ் ஃபவுண்டே­ஷன்'

மாதங்கி இளங்­கோ­வன்

ரேஷ்­வ­ர­னுக்கு கார்­கள் என்­றால் மிகுந்த பிரி­யம். என்றைக்காவது ஒரு நாள் 'ஃபெர்ராரி' அல்­லது 'லம்­போ­கினி' போன்ற கார்­களை ஓட்ட வேண்­டும் என்ற ஆசை நீண்ட கால­மாக இருந்­தது.

தொடக்­கப்­பள்­ளி­யில் படித்­துக்­கொண்­டி­ருந்த ரேஷ்­வ­ர­னுக்கு 2016-ஆம் ஆண்­டில் திடீ­ரென உடல்­ந­லம் குன்­றி­யது. மருத்­து­வர்­கள் அவன் லூக்­கி­மியா நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­விட்­ட­னர்.

அவன் தம் கல்­வியை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நிறுத்த வேண்­டிய சூழ்­நி­லை­யும் ஏற்­பட்­டது. ஆனால், ரேஷ்­வ­ர­னும் அவ­னது தாயா­ரும் மனம் தள­ரா­மல் உட­ன­டி­யா­கவே மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­குச் செல்­வ­தற்கு ஏற்­பா­டு­க­ளைச் செய்­த­னர்.

தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் 'கீமோ தெரபி' சிகிச்சைக்குச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது அவ­னுக்கு உத­வி­யாக இருந்த சமூக மருத்­துவ சேவகி எஸ்­தர், 'மேக் அ விஷ் ஃபவுண்டே­ஷன்' என்ற அமைப்­பைப் பற்றி எடுத்­துக்­கூறி ரேஷ்வரனின் ஆசை­க­ளைப் பூர்த்தி செய்ய இவ்­வ­மைப்­புக்கு விண்­ணப்­பிக்க ஊக்­கு­வித்­தார்.

உயிரை அச்­சு­றுத்­தும் நோய்­வாய்ப்­பட்ட சிறு­வர்­க­ளின் ஆசை­களைப் பூர்த்­தி­செய்­யும் நற்­செ­யல்­களில் ஈடுபட்டு வரும் அமைப்­பு­தான் 'மேக் அ விஷ் ஃபவுண்டே­ஷன்'. சிறு­வர்­க­ளின் சின்ன சின்ன ஆசைக் கன­வு­களை நன­வாக்­கும் இந்த அமைப்பு, ரேஷ்­வ­ர­னின் ஆசை­க­ளை­யும் நன­வாக்­கும் என நம்­பிய எஸ்­தர், தம் அன்பை வெளிக்­காட்­டும் விதத்­தில் 'மேக் அ விஷ் ஃபவுண்டே­ஷன்' அமைப்­புக்கு ரேஷ்­வ­ர­னின் விண்­ணப்­பத்தை அனுப்­பி­னார்.

ரேஷ்­வ­ர­னின் பத்­தா­வது பிறந்த நாளன்று 'மேக் அ விஷ் ஃபௌன்டே­ஷன்' அமைப்­பி­லி­ருந்து சில பணி­யா­ளர்­கள், ஆச்­ச­ரி­ய­மூட்­டும் வகை­யில் ரேஷ்­வ­ர­னைத் தேடி­வந்து அவ­ரது ஆசை­க­ளைப் பற்றி நேரடி­யா­கக் கேட்­டுத் தெரிந்­து­கொண்­ட­னர்.

தனது ஆசைகளில் எதைத் தேர்ந்­தெ­டுப்­பது என குழப்­பத்­தி­லி­ருந்த ரேஷ்வரனுக்கு தம் தாயார், "உனக்கு கார்­கள் என்­றால் பிடிக்­கும் அல்­லவா? அதை­யொட்டி நல்­ல­தொரு ஆசையைத் தேர்ந்­தெ­டுக்­க­லாமே?" என ஞாப­கப்­ப­டுத்­தி­னார். அப்­படி ஆரம்­பித்­த­து­தான் ரேஷ்­வ­ர­னின் 'மேக் அ விஷ்' பய­ணம்.

வாக­னம் ஓட்­டு­வ­தற்கு ஏற்ற வயது இல்­லா­த­தால் கார் ஓட்ட அனு­மதி கிடைப்­பது சவா­லா­கத்­தான் இருக்­கும் என புரிந்­து­கொண்­ட­னர், மேக் அ விஷ் ஃபவுண்டே­ஷன் அமைப்பினர்.

அப்­ப­டி­யென்­றால் ரேஷ்­வ­ர­னின் உற்­சா­கம் குறை­யா­மல் எவ்­வாறு அவ­னது ஆசையை நிறை­வேற்­ற­லாம் என்று திட்­ட­மிட்­ட­னர்.

ரேஷ்­வ­ரன் காரை ஓட்­ட­வில்லை என்­றா­லும் லம்­போ­கினி காரில் பய­ணம் செல்ல வாய்ப்­புக் கிடைத்­தால் அவன் மன­நிலை எப்­படி இருக்­கும் என்று யோசித்தனர்.

ஒரு நாள் இந்த வாய்ப்பு அவன் வீட்­டின் கத­வையே தட்­டி­யது, ரேஷ்­வ­ரன் அதிர்ச்­சி­யி­லும் மகிழ்ச்­சி­யி­லும் மெய்­ம­றந்து போனார்.

ரேஷ்­வ­ரன் வீட்­டின் அரு­கி­லேயே லம்­போ­கினி காரை ஓட்டி வந்து, ஓர் ஆட­வர், ரேஷ்வரனை காரில் ஏற்றிக்கொண்டு சிலேத்­தார் வட்­டா­ரத்­தை வலம் வந்தார். இதுபோன்ற காரில் பய­ணம் செய்­வது அதுவே அவ­னுக்கு முதல் அனு­ப­வ­மாக இருந்­தது.

பின்பு 2018-ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் நடந்­தே­றிய எஃப்-1 கார் பந்­த­யத்­தைப் பார்க்க வாய்ப்­ப­ளித்­தது, 'மேக் அ விஷ் ஃபவுண்டே­ஷன்'. வி,ஐ.பி-களுக்கு ஒதுக்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து போட்­டி­யைப் பார்க்­கும் வாய்ப்பு ரேஷ்­வ­ர­னுக்­குக் கிடைத்­தது.

பிர­பல எஃப்-1 விளை­யாட்­டுப் போட்­டி­யா­ளர்­க­ளான மேக்ஸ் வர்ஸ்­தாப்­பன், லுவிஸ் ஹேமில்­டன் என பல­ரை­யும் கண்­ணுக்கு எட்­டிய தூரத்­தில் பார்த்து மகிழ்­வுற்ற ரேஷ்­வ­ரன், இந்த அனு­ப­வத்தை தன் வாழ்­நாள் முழுக்­க­வும் மறக்­கவே முடி­யாது என நினை­வு­கூர்ந்­தார்.

தாம் எண்­ணிப்­பார்க்க முடி­யாத அள­வில் அனு­ப­வங்­களை அளித்த 'மேக் அ விஷ்' அமைப்­பிற்கு ரேஷ்­வ­ர­னும் அவ­னு­டைய தாயா­ரும் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­ட­னர்.

"நோயால் தவித்­துக்­கொண்­டி­ருந்­தா­லும் எனக்கு வாழ்க்­கை­யில் நம்­பிக்கை தந்­த­தோடு மறக்­க­மு­டி­யாத இனி­மை­யான நினை­வு­க­ளை­யும் 'மேக் அ விஷ்' அமைப்பு தந்­துள்­ளது. என்­னைப் போன்­ற சிறு­வர்­கள் தயங்­கா­மல் தங்­கள் ஆசை­க­ளைப் பூர்த்தி செய்ய நான் நிச்­ச­யம் ஊக்­கு­விப்­பேன்," என்­றார் ரேஷ்­வ­ரன். 'மேக் அ விஸ் சிங்­கப்­பூர்' அமைப்பு கடந்த இரு­ப­தாண்­டு­களில் கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த 1,700க்கு மேற்­பட்ட குழந்­தை­க­ளின் ஆசையை நிறை­வேற்றி வைத்­துள்­ளது. இன்­னும் அதி­க­மான குழந்­தை­க­ளுக்கு உத­வும் வகை­யில், இந்த அமைப்பு தனது 20ஆம் ஆண்டு நிறை­வுக் கொண்­டாட்­டத்­தையொட்டி 2,000 குழந்­தை­க­ளின் ஆசை­களை நிறை­வேற்ற இலக்கு கொண்­டுள்­ளது.

ஆசை­க­ளைப் பூர்த்தி செய்­யும் உல­கின் ஆகப்­பெ­ரிய அமைப்­பாக திக­ழும் 'மேக் அ விஷ் ஃபவுண்­டே­ஷன்', 'லெகோ குரூப்', கேகே மருத்­து­வ­மனை, 'எஸ்.ஐ.ஏ. கிரிஸ் ஃப்ளையர்', 'சீக்­ரெட் லேப்' என மொத்­தம் 84 அமைப்­பு­க­ளின் உத­வி­யோடு சுமார் 1,700 பிள்­ளை­க­ளின் ஆசை­களை நன­வாக்­கி­யுள்­ளது. இந்த ஆண்டு மொத்­தம் 13 புதிய ஆத­ர­வா­ளர்­க­ளை­யும் பெற்­றுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!