மாணவக் கவிகள் ஒலித்த ஆர்க்கிட் பூங்கா

ஆ. விஷ்ணு வர்­தினி

 

கவி­ம­ணமும் இசை­ம­ண­மும் வீசிய ஆர்க்­கிட் பூங்­கா­வில் தமிழ் மாண­வர்­களும் பார்­வை­யா­ளர்­களும் கலந்து­கொண்­ட­னர்.

கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த மே 1ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 200 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்வைத் தொடங்கி வைத்­த, வானொலி படைப்­பா­ளர் திரு முகமது ரஃபியின் நெறி­யாள்­கை­யில் நடந்­தே­றியது 'கவி­ம­ண­மும் இசை­ம­ண­மும்' பாடல் நிகழ்ச்சி.

'சூப்­பர் சிங்­கர்' புகழ் சூரி­யா­வும், திரு­மதி அனு­பமா முர­ளி­யும் பாட, பாடல்­க­ளின் பின்­னணி, உள்­ளர்த்­தம், கவி­ந­யம் குறித்து உரை­யா­டி­னார் முனை­வர் ஜெய­ரா­ஜ­தாஸ் பாண்­டி­யன்.

தொடக்­கப்­பள்ளி முதல் உயர்­கல்வி மாண­வர்­க­ளுக்­கான கவிதை சொல்­லும் போட்டி, கவிதை எழு­தும் போட்டி, கவிதை மொழி­பெ­யர்ப்­புப் போட்டி ஆகி­யவை ஏப்­ரல் மாதத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன. அவற்­றுக்­கான பரி­ச­ளிப்பு விழா, மாண­வர்­க­ளின் வெற்றி­பெற்ற படைப்­பு­க­ளு­டன் இடம்­பெற்­றது. ஏறக்­கு­றைய நூறு மாண­வர்­கள் கவிதை, கவிதை மொழி­பெ­யர்ப்பு ஆகிய பயி­ல­ரங்கு­களில் பங்­கேற்று, இப்­போட்­டி­களில் கலந்­து­கொண்­ட­னர். சங்­ககால புல­வர்­கள், கவி­ஞர்­கள் என அறு­வரை மேடை­யில் தோன்ற வைத்­த­னர் ஏற்­பாட்­டா­ளர்­கள்.

சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொழிப் புழக்­கத்­தைப் பற்­றி­யும், தமிழ்­மொழி விழா­வின் சிறப்­பு­க­ளைப் பற்­றி­யும் நகைச்­சு­வை­யாக எடுத்தியம்பியது ஆறு இளை­யர்­கள் படைத்த 'ஆர்க்­கிட் பூங்கா' கவிதை நாட­கம்.

தமி­ழுக்­குத் தொண்டு செய்­தோரை அங்­கீ­க­ரிக்­கும் கணை­யாழி விரு­தி­னைப் பெற்­றார் திரு சாமிக்­கண்ணு.

2003ஆம் ஆண்­டி­லி­ருந்து இவ்­வி­ருது ஆண்­டு­தோ­றும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

"புதுமைப் பாணி­யில் பல நிகழ்­வு­க­ளைத் தமிழ் மாண­வர்­கள் படைக்­கின்­ற­னர். மாறி­வ­ரும் மொழிச்­சூ­ழ­லுக்­கேற்ப நாம் இளைய தலை­மு­றை­யி­ன­ருக்­கான நவீ­ன­ம­ய­மான முயற்­சி­கள் குறித்து ஆலோ­சிக்க வேண்­டும்.

"தமி­ழில் நன்­றாக படைக்­கும் மாண­வர்­க­ளுக்கு மட்­டு­மின்றி, அனைத்து தமிழ் மாண­வர்­க­ளுக்­கு­மான நிகழ்­வு­க­ளைப் படைக்க முயற்­சி செய்வோம்," என்­றார் அவர். இளங்­க­வி­ஞர் தங்­க­முத்­திரை விருது திரு இரா. அருள்­ராஜுக்கு வழங்­கப்­பட்­டது.

நிகழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்ட திரு மனோ­க­ரன், சமூக தலை­வர்­களும் அமைப்­பு­களும் இணைந்து கூட்­டு­மு­யற்­சி­யி­னால் தமிழ்­மொழி விழா­வினை வெற்­றி­க­ர­மாக நடத்­தி­யுள்­ள­தைச் சுட்­டி­னார். சிங்­கப்­பூ­ரில் ஒலிக்­கும் தமிழ்­மொழி உல­க­றிய வளர்ந்­துள்ள நிலை­யி­லும், மேன்­மே­லும் தமி­ழோடு இணை­யாத இளை­யர்­களை, குடும்­பங்­களை ஈர்க்க முயற்­சிப்­பது அவ­சி­யம் என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!