சிறு வயதிலிருந்து இருமொழி கற்றலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி

இரு மொழிப் பயன்­பாட்­டைச் சிறார்­க­ளி­டத்­தில் வளர்க்க எழுத்­தா­ளர் அபி கிருஷ் உட்­பட நான்கு எழுத்­தா­ளர்­கள் 'டாக்­கிங் யுவர் வே அவுட்' என்ற நிகழ்ச்­சியை வழி­ந­டத்­தி­னர்.

சிங்­கப்­பூர் புத்­தக மன்­றத்­தின் ஏற்­பாட்­டில் மே 26ஆம் தேதி­யில் இ­ருந்து 29ஆம் தேதி வரை நடை­பெற்ற 'ஏஎ­ஃப்­சிசி' எனப்­படும் சிறு­வர் நூல்­க­ளுக்­கான ஆசிய விழா­வின் ஓர் அங்­க­மாக மே 28ஆம் தேதி இந்­நி­கழ்ச்சி நடை­பெற்­றது.

ஆங்­கில எழுத்­தா­ளர் ஈவ்­லின் சூ வாங் எழு­திய 'ஜஸ்ட் அ லிட்­டில் மைனா' என்ற புத்­த­கத்தை மைய­மா­கக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த விளை­யாட்­டில் கொடுக்­கப்­பட்­டி­ருந்த குறிப்­பு­களை வைத்து சீன, மலாய், தமிழ் ஆகிய மொழி­க­ளைப் பற்றி சிறார்­கள் தெரிந்­து­கொண்­ட­னர்.

சீன எழுத்­தா­ளர் குவெக் ஹாங் ஷ்யின், மலாய் எழுத்­தாளர் ரில்லா மெலாட்டி, தமிழ் எழுத்­தா­ளர் அபி கிருஷ் ஆகி­யோர் எழு­திய கதை­களை அவ­ர­வர் மொழி­பெ­யர்த்து அனைத்து சிறு­வர்­க­ளுக்­கும் ஆங்­கி­லத்­தில் சொன்­னார்­கள்.

பிறகு, 'குவே பஹுலு', 'சாம்­பார்' போன்ற எளிய வார்த்­தை­களை எழுத்­தா­ளர்­கள் சிறு­வர்­களுக்கு கற்­றுக்­கொ­டுத்­த­னர்.

"என்னைப் போன்ற ஆசி­ரி­யர்­களுக்கு இது­போன்ற நிகழ்ச்­சி­கள் உத­வி­யாக இருக்­கின்­றன. மாண­வர்­க­ளி­டத்­தில் எவ்­வாறு இரு­மொழி கற்­றலை மேம்­ப­டுத்­த­லாம், எவ்­வாறு ஈடு­பாடு மிகுந்த வழி­யில் பாடங்­க­ளைக் கற்­றுக்­கொ­டுக்­க­லாம் ஆகி­ய­வற்றை இந்த ­நி­கழ்ச்­சி­யின் வழி­யாக நான் கற்­றுக்­கொண்­டேன்," என்­றார் ஜின் சான் தொடக்­கப்­பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றும் ஸ்ரீவித்யா மோகன், 32.

 

செய்தி: ஹர்­ஷிதா பாலாஜி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!