மீண்டும் மலரும் காதல் கடிதம்

மீண்டும் மலரும் காதல் கடிதம்

1 mins read
5175511f-3e7f-4015-9f29-39b4e60aeed9
பழைய முறையெனினும் கைப்பட காதல் கடிதம் எழுதும் திட்டம், ஜப்பானின் மியாஸாக்கி நகர இளையர்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. படம்: மியாஸாக்கிகொய்புமி.காம் -

இன்­றைய இணைய யுகத்­தில் பேனா கொண்டு தாளில் காதல் கடி­தம் வரை­வது கிட்­டத்­தட்ட ஒழிந்தே போய்­விட்­டது.

இந்­நி­லை­யில், அந்­தப் பழக்­கத்­திற்­குப் புத்­து­யிர் ஊட்டி வரு­கிறது ஜப்­பா­னின் மியா­ஸாக்கி நக­ரம். பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதை அடுத்து, அதனை ஊக்குவிக்கும் நோக்கில் காதல் கடிதம் எழுதும் திட்டத்தை மியாஸாக்கி நகராட்சி அறிமுகப் படுத்தியது.

கைப்பட காதல் கடி­தம் எழுதி, தங்­க­ளுடைய வாழ்க்­கைத்­து­ணை­யைத் தேடும்­படி அந்­ந­க­ரம் அறி­மு­கப்படுத்­தி­யுள்ள திட்­டத்­திற்கு ஒற்­றை­யர்­கள் இடையே பெரும் வர­வேற்பு கிட்­டி­யுள்­ளது.

இத­னால் அத்­திட்­டத்தை மேலும் பல இடங்­க­ளுக்கு விரிவு­படுத்த அத்­திட்­டத்­தின் ஏற்­பாட்­டா­ளர்­கள் முடி­வு­செய்­துள்­ள­னர்.

"ஒரு­வ­ரது எழுத்­தாற்­றலை யாரும் பார்ப்­ப­தில்லை. ஆனால், ஒவ்­வொ­ரு­வ­ரும் தாம் நேசிப்­ப­வரைப் பற்றி ஆழ­மா­கச் சிந்­தித்து, உண்­மை­யு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் ஒவ்­வொரு சொல்­லை­யும் எழு­து­வோம் என்­ப­து­தான் உண்மை. அதுதான் கடிதங்களை ஆற்றல் மிக்கதாக ஆக்குகிறது," என்று சொன்­னார், அத்­திட்­டத்தை நடத்­தி­வ­ரும் உள்­ளூர் ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் தலை­வர் ரை மியாட்டா.