சமூக ஊடகங்களில் இருந்து விலகியிருப்பது மனநலத்தை மேம்படுத்தும்

சமூக ஊட­கங்­க­ளி­டம் இருந்து ஒரு வாரம் வில­கி­யி­ருந்­தாலே போதும், ஒரு­வ­ரின் ஒட்­டு­மொத்த நல்­வாழ்­வும் மேம்­படும். அத்­து­டன், மனச்­சோர்வு, மனப்­பதற்­றம் போன்­ற­வை குறைந்து, மன­நலம் மேம்­ப­ட­வும் உத­வும்.

‘இணைய உள­வி­ய­லும் சமூக வலைப்­பின்­ன­லும்’ என்ற சஞ்­சி­கை­யில் வெளி­யி­டப்­பட்­டுள்ள புதிய ஆய்­வுக் கட்­டு­ரை­யில் இத்­த­க­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

பிரிட்­ட­னின் பாத் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­கள் குழு, சமூக ஊட­கங்­களில் இருந்து ஒரு­வார காலத்­திற்கு வில­கி­யி­ருப்­பது எத்­த­கைய விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என ஆராய்ந்­தது.

ஃபேஸ்புக், டிக்­டாக், இன்ஸ்­ட­கி­ராம், வாட்ஸ்­அப், டுவிட்­டர் போன்ற சமூக ஊட­கங்­களை அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் 18 முதல் 72 வய­திற்­குட்­பட்ட 154 பேர் இந்த ஆய்­விற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர்.

அவர்­கள் இரு பிரி­வு­க­ளா­கப் பிரிக்­கப்­பட்­ட­னர். முதல் பிரி­வி­னர் சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வதை ஒரு­வார காலத்­திற்கு நிறுத்­தும்­ப­டி­யும் இரண்­டாம் பிரி­வி­னர் வழக்­கம்­போல சமூக ஊட­கங்­களில் நேரம் செல­வி­டும்­ப­டி­யும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

ஆய்­வின் தொடக்­கத்­தில், அவர்­களின் மனப்­ப­தற்­றம், மனச்­சோர்வு, நல்­வாழ்வு ஆகி­யவை மதிப்­பி­டப்­பட்­டது. முதல் வாரத்­தில் அவர்­கள் 8 மணி நேரத்­தைச் சமூக ஊட­கங்­களில் செல­வி­டுமாறு அறி­வு­றுத்­தப்­பட்­ட­னர்.

இரண்­டா­வது வாரத்­தில், முதல் பிரி­வி­னர் 21 நிமி­டங்­களும் இரண்­டாம் பிரி­வி­னர் ஏழு மணி நேர­மும் சமூக ஊட­கங்­களில் உலவ அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

“காலை எழு­வ­தில் இருந்து, இரவு உறங்­கும்­வரை நம்மை அறி­யா­மலே பல மணி நேரத்­தைச் சமூக ஊட­கங்­களில் செல­வி­டு­கி­றோம். அத­னால், ஒரு வாரத்­திற்­குச் சமூக ஊட­கங்­களில் இருந்து வில­கி­யி­ருப்­பது, மன­ந­லத்­தில் எத்­த­கைய பலன்­க­ளைத் தரும் என்­பதை அறிய விரும்­பி­னோம்,” என்­றார் பாத் பல்­கலைக்­க­ழ­கச் சுகா­தா­ரத் துறை­யின் தலைமை ஆய்­வா­ளர் டாக்­டர் ஜெஃப் லாம்­பர்ட்.

“ஆய்­வின் முடி­வில் பங்­கேற்­பா­ளர்­களில் பல­ரது மன­நிலை மேம்­பட்டு இருந்­த­தை­யும் மனப்­ப­தற்­றம் குறைந்­தி­ருந்­த­தை­யும் கண்­ட­றிந்­தோம். இது, சமூக ஊட­கங்­களில் இருந்து சற்றே வில­கி­யி­ருப்­ப­து­கூட நேர்­ம­றைத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தைக் காட்­டு­கிறது,” என்று அவர் சொன்­னார்.

“சமூக ஊட­கங்­கள், வாழ்க்­கை­யின் ஒரு பகுதி என்­ப­தி­லும் மற்­ற­வர்­க­ளைத் தொடர்­பு­கொள்ள பல­ருக்­கும் அவை இன்­றி­ய­மை­யா­த­தாக விளங்­கு­கின்­றன என்­ப­தி­லும் ஐயத்­திற்கு இட­மில்லை. ஆனால், சமூக ஊட­கங்­களில் பல மணி நேரம் செல­வி­டு­வது தம்­மில் எதிர்­மறைத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக ஒரு­வர் நினைத்­தால், அவற்­றின் பயன்­பாட்­டைக் குறைப்­பது நல்­லது,” என்­றார் டாக்­டர் ஜெஃப்.

அடுத்­த­தாக, சமூக ஊட­கங்­களில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருப்­பது வெவ்­வேறு வய­துப் பிரி­வி­ன­ரின் உடல்­ந­லத்­தி­லும் மன­ந­லத்­தி­லும் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பது குறித்து ஆராய அந்த ஆய்­வா­ளர் குழு விரும்­பு­கிறது.

கடந்த 15 ஆண்­டு­களில், நாம் தொடர்­பு­கொள்­ளும் முறை­யில் சமூக ஊட­கங்­கள் பெரும் புரட்­சியை ஏற்­படுத்தி­யி­ருக்­கின்­றன.

பிரிட்­ட­னில் 2011ஆம் ஆண்­டில் 45 விழுக்­காட்­டுப் பெரி­ய­வர்­கள் சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­திய நிலை­யில், கடந்த 2021ஆம் ஆண்­டில் அவ்­வி­கி­தம் 71 விழுக்­கா­டாக உயர்ந்­து­விட்­டது.

அங்கு 16 முதல் 44 வய­துப் பிரி­வி­ன­ரில் 97 விழுக்­காட்­டி­னர் சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!