சிறுவர்களுக்குப் பிடித்த ‘சிக்கன் லாலிபாப்’

இன்று பெரும்­பா­லான மக்­கள் அசைவ உண­வில் கோழி­யைத்­தான் அதி­கம் விரும்பி உண்­கின்­ற­னர். அதி­லும் சிறு குழந்­தை­கள் சொல்­லவே வேண்­டாம்.

குழந்­தை­கள் விரும்பி உண்ணும் கோழி­ வகைகளில் ஒன்றுதான் 'சிக்­கன் லாலி­பாப்'.

இதனை சுவை­யான முறை­யில் கடை­களில் செய்­யும் விதத்­தில் வீட்­டி­லேயே செய்­வது எப்­படி என்று பார்க்­க­லாம்.

தேவையான பொருள்கள்:

சிக்கன் லாலிபாப்

துண்டுகள் - 8, முட்டை - 1, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி,

எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி,

தயிர் - 50 மில்லி, சோள மாவு - ஒரு தேக்கரண்டி, விரும்பினால் ஒரு சிட்டிகை சிவப்பு வண்ணம் சேர்த்துக் கொள்ளவும்

முதலில் சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின் பாத்திரம் ஒன்றில் முட்டை, இஞ்சி பூண்டு விழுது, மிளகு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தயிர், சோள மாவு, உப்பு, சாப்பாட்டு கலர் என அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்து வைத்திருக்கும் லாலி பாப் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் 'சிக்கன் லாலிபாப்' துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான 'சிக்கன் லாலிபாப்' தயார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!