வயதை உறுதிப்படுத்தும் இன்ஸ்டகிராம்

புகைப்பட, காணொளிப் பகிர்வு சமூக ஊடகமான இன்ஸ்டகிராம், தன்னுடைய பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொடர்பில் சில தெரிவுகளைச் சோதித்து வருகிறது. முதற்கட்டமாக, இன்ஸ்டகிராம் பயன்படுத்தும் அமெரிக்கர்களின் வயது சரிபார்க்கப்படும்.

பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்வதற்கான சான்றைப் பதிவேற்றுவதுடன், இரு புதிய வழிகளில் ஒருவரின் வயது சரிபார்க்கப்படும் என்று இன்ஸ்டகிராம் தெரிவித்து இருக்கிறது.

இதற்காக, இணையம்வழி வயதைச் சரிபார்ப்பதில் நிபுணத்துவமுடைய ‘யோட்டி’ எனும் நிறுவனத்துடன் இன்ஸ்டகிராம் கைகோத்து இருக்கிறது. பயனர்கள் தங்களது வயதை உறுதிப் படுத்தும் வகையில், ஒரு தற்படக் காணொளியைப் பதிவேற்றம் செய்யலாம். முக அம்சங்களின் அடிப்படையில் ஒருவரின் வயதை மதிப்பிட்ட பின் அவரது படத்தை இன்ஸ்டகிராமும் யோட்டி நிறுவனமும் அழித்துவிடும்.

தங்களைப் பின்தொடரும் மூவரைத் தேர்வுசெய்வதன் மூலம் வயதை உறுதிசெய்வது இன்னொரு தெரிவு. அந்த மூவரும் குறைந்தது 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

வயதிற்கேற்ற அனுபவத்தை வழங்கவும் முன்பின் அறிமுகம் இல்லாத பெரியவர்களைத் தொடர்புகொள்வதைத் தடுக்கவும் பொருத்தமில்லாத விளம்பரங்கள் அவர்களைச் சென்றடையாத வகையில் கட்டுப்படுத்தவும் ஏதுவாக இந்த வயதுச் சரிபார்ப்பு நடை முறை இடம்பெறவுள்ளதாக இன்ஸ்டகிராம் தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!