கதைக்களம் 100வது நிகழ்ச்சியில் பரிசுத்தொகை அதிகரிப்பு

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் மாதந்­தோ­றும் நடத்­தும் கதைக்­க­ளம் நிகழ்ச்சி, சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை நான்கு மணிக்கு தேசிய நூல­கத்­தில் நடை­பெற்­றது. மாண­வர் கண்­ணோட்­டம் அங்­கத்­தில் இரா­ஃபிள்ஸ் கல்வி நிலைய மாண­வர்­கள், உள்­ளூர் எழுத்­தா­ளர்­கள் இரு­வ­ரின் சிறு­கதை­க­ளைப் பற்றி உரையாடினர்.

எழுத்­தா­ளர் சே.வெ.சண்­மு­கம் எழு­திய 'சிங்­கப்­பூர்க் குழந்­தை­கள்' என்ற சிறு­கதை அக்­கா­லத்­தில் மக்­கள், இன, மொழி, மத வேறு­பா­டின்றி ஒற்­று­மை­யாக வாழ்ந்­ததை உணர்த்­து­வ­தாக மாண­வர்­கள் கூறி­னர். சிங்­கப்­பூ­ரில் 50 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் தீபா­வளி எவ்­வாறு கொண்­டா­டப்­பட்­டது என்­பதை இந்­தக் கதை பதி­வு­செய்­தி­ருப்­பதை சுட்­டி­னர்.

எழுத்­தா­ளர் இராம வயி­ர­வ­னின் 'நகர மறுத்த மேசை' என்ற சிறு­கதை பழைய பொருள்­களை மறு­ப­ய­னீடு செய்­யும் சிந்­த­னையை விதைப்­ப­தா­கக் கூறிய மாண­வர்­கள் கதா­சி­ரி­ய­ரி­டம் தங்­கள் ஐயங்­களுக்கு நேரில் விளக்­கம் பெற்­ற­னர்.

மாண­வர் கண்­ணோட்­டம் அங்­கத்­தில் பங்­கு­பெ­றும் மாண­வர்­கள் கதை­க­ளைச் சிறப்­பா­கத் திற­னாய்வு செய்­வ­தா­கக் குறிப்­பிட்ட கழ­கத் தலை­வர் நா. ஆண்­டி­யப்பன், தொடர்ந்து பயிற்சி செய்து சிறந்த எழுத்­தா­ளர்­க­ளா­க­வும் விமர்­ச­கர்­க­ளா­க­வும் உரு­வா­க­வேண்­டும் என்று அவர்­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டார்.

நிகழ்ச்சியில் இந்த மாதப் போட்­டிப் படைப்­பு­க­ளைப் பற்­றிய கலந்­து­ரை­யா­ட­லு­டன் வெற்­றி­யா­ளர்­க­ளுக்­குப் பரி­சும் வழங்­கப்­பட்­டது. அடுத்த மாதம் நடை­பெ­றும் கதைக்­க­ளம் 100வது நிகழ்ச்சி என்­ப­தால் பொதுப் பிரிவு பரி­சுத்­தொகை மட்­டும் உயர்த்­தப்­பட்­டுள்­ளது. முதல் பரிசு $100­, இரண்­டா­வது பரிசு $75, மூன்­றா­வது பரிசு $50 வழங்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!