முவே தாய் மீது தீராக் காதல்

அரங்­கில் சண்­டை­யிட்ட நாள்­களில், தான் யார் என்­பதை உணர்ந்­த­தா­கக் கூறு­கி­றார் ஜெய் முவே தாய் உடற்­ப­யிற்சிக் கூடத்­தின் நிறு­வ­ன­ரான திரு ஜெரமி ஜூட், 37.

முவே தாய் சண்டைக் கலை­யில் போட்­டி­யா­ளர்­கள் கைகால்­களைப் பயன்­ப­டுத்தி சண்­டை­யி­ட­லாம். இக்­கலை தாய்­லாந்தில் தோன்றி அதன் தேசிய விளை­யாட்­டாக விளங்குவதால் இதற்கு தாய்லாந்துக் குத்துச்சண்டை என்ற பெய­ரும் உண்டு.

2008ஆம் ஆண்­டில் அமெ­ரிக்­கா­வி­ன் நியூயார்க் நக­ருக்­குத் தனது 23ஆம் வய­தில் கல்விப் பய­ணத்­திற்­கா­க இவர் சென்றார். அப்­போ­து தனது வாழ்க்­கை­முறை பிடிக்­கா­மல் போன­தால், வாழ்­வில் ஏதே­னும் மாற்­றத்­தைக் கொண்டு வரவேண்­டும் என்ற எண்­ணம் இவருக்கு ஏற்­பட்­டது.

அவ்­வாண்டு 'தி கன்­டெண்­டெர் ஆசியா' என்ற முவே தாய் போட்டி தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பா­வதைக் கண்ட ஜெர­மிக்கு அந்தச்­சண்டைக் கலை­யின் மீது நாட்­டம் ஏற்­பட்­ட­து. நியூயார்க்கில் இவர் தங்­கி­யி­ருந்த இடத்­தி­லி­ருந்து 45 நிமிடத் தொலை­வில் அமைந்­தி­ருந்த உடற்­ப­யிற்சிக் கூடம் ஒன்­றில் வாரத்­திற்கு மூன்று முறை முவே தாய் வகுப்­பு­கள் நடத்­தப்­ப­டு­வ­தைத் தெரிந்துகொண்டு எவ்­வித தயக்கமுமின்றி அவற்­றில் சேர்ந்தார்.

வகுப்­பு­களில் பங்­கெ­டுப்­ப­தற்கு முன்பு அவை சுல­ப­மாக இருக்­கு­மென எண்­ணிய இவர், அவற்­றுக்­குச் சென்ற பின்பு, அவை உடல­ள­வி­லும் மன­த­ள­வி­லும் தன்­னைப் பெரி­தும் சோதித்­ததாகக் கூறி­னார்.

ஆனால், இக்­க­லை­யைக் கற்று சண்­டை­யில் ஈடு­பட்­ட­போது இனம்­பு­ரியா ஆனந்­ததை உணர்ந்­த­தால் இதில் சிறந்து விளங்­க­வேண்­டும்­என்ற வேட்­கை­யும் மன­தில் தோன்­றி­ய­தாக ஜெரமி சொன்­னார்.

அத­னால், இவர் தனது பயிற்­று­விப்­பா­ளர்­க­ளின் அறி­வு­ரை­யைக் கேட்டு, இணை­யத்­தில் முவே தாய் சார்ந்த காணொ­ளி­க­ளைப் பார்த்து ஓய்வு திங்­க­ளி­லும் பயிற்­சி­களில் ஈடு­பட்டு திறன்­களை வளர்த்­துக்­கொண்­டார்.

கற்­றல் பய­ணம் முடிந்து 2010ஆம் ஆண்டு சிங்­கப்­பூர் திரும்­பிய ஜெரமி, முவே தாய் கலை மீது கொண்ட ஆர்­வத்­தால் தின­மும் அதை பயி­லத் தொடங்­கிய பிறகு இவ­ரது ஆற்­ற­லை­யும் ஆர்­வத்­தை­யும் கவ­னித்த பயிற்­று­விப்­பா­ளர்­கள், தாய்­லாந்­துக்­குச் சென்று பயிற்­சி­பெற ஊக்­கு­வித்­த­தால் இக்­க­லையை நன்கு கற்க இவர் அங்கு சென்­றார். தாய்­லாந்­தில் ஒரு நாளுக்கு மொத்­தம் ஆறு மணி நேரம் பயிற்­சி­களில் ஈடு­பட்­ட­தா­க­வும் அப்­ப­யிற்­சி­கள் நிபு­ணத்­து­வம் வாய்ந்­த­வை­யாக இருந்­த­தென்­றும் இவர் கூறி­னார். அங்கு பல புது உத்­தி­க­ளை­யும் நுணுக்­கங்­க­ளை­யும் கற்­றுக்­கொண்­ட­தா­க­வும் ஜெரமி தெரி­வித்­தார்.

இவ்­வாறு பயிற்சி பெற்று வந்த வேளை­யில், 2011ஆம் ஆண்டு முதல்­மு­றை­யாக பாது­காப்பு கவ­சம் ஏதுமின்றி ­சண்­டை­யி­டும் முவே தாய் போட்டி ஒன்­றில் பங்­கேற்று அதில் தோல்­வி­யுற்ற நிலை­யி­லும், அதன் வழி தனக்­கான பாதையைக் கண்­ட­றிந்­த­தாக ஜெரமி கூறி­னார். முவே தாய் சண்­டைக்­க­லையை நன்கு கற்று, அதில் போட்­டி­யிடவேண்­டும் என்­பதை இவர் தனது குறிக்­கோளாகத் தேர்ந்­தெ­டுத்­தார்.

ஆனால், பயிற்­சி­க­ளுக்­கான கட்­டண செல­வு­க­ளைச் சமா­ளிக்க என்ன செய்­வ­தென்ற கேள்வி எழுந்­த­போது இவர் சுவா­ர­சி­ய­மான தீர்­வொன்­றைக் கையி­லெ­டுத்­தார்.

சிங்­கப்­பூ­ரில் ஒன்­றி­லி­ருந்து இரண்டு ஆண்­டு­கள் வரை பணி­பு­ரிந்து பணம் சேமித்­து­, ஏறக்­கு­றைய ஆறு மாதங்­கள் தாய்­லாந்துக்­குச் சென்று பயிற்சி பெறத் தொடங்­கி­னார். இதை 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை செய்துவந்­தார்.

அத­னால் பல போட்­டி­களில் பங்­கேற்­கும் வாய்ப்­பைப் பெற்ற ஜெர­மிக்கு 2019ஆம் ஆண்டு கண்­ணில் ஏற்­பட்ட காயம் இவரின் முவே தாய் பய­ணத்தை முடி­வுக்­குக் கொண்டு வரும் என்­பது அப்­போது தெரி­ய­வில்லை.

அந்தக் காயம் மோச­மான ஒன்­றாக இருந்­த­போ­தும் தனது மனம் தொடர்ந்து போட்­டி­யி­டு­வ­தையே விரும்­பி­ய­தாக இவர் கூறி­னார். ஆனால், மனம் விரும்­பி­ய­தற்கு உடல் ஒத்­து­ழைக்­கா­த­தால் அவ்­வாறு செய்ய முடி­ய­வில்­லை­யென ஜெரமி கவ­லை தெரி­வித்­தார்.

மன­தில் வருத்­தம் நிறைந்­தி­ருந்­தா­லும், காயம் குண­மாக காத்­திருந்த காலத்­தில், வாழ்க்­கை­யைப் பற்றிச் சிந்­திக்­கத் தொடங்­கி­ய­தாக இவர் கூறி­னார். முவே தாய் கற்­ப­தில் அதிக கவ­னம் செலுத்­தி­ய­தால் பணம் சேமிப்­ப­தில் இவர் கவ­னம் செலுத்­தத் தவ­றி­விட்­டார். அத­னால், காயம் ஏற்­பட்­ட­ பிறகு சில ஆண்­டு­கள் பல்­வேறு வேலை­களைச் செய்த ஜெர­மி­யால் முழு மன­து­டன் ஆனந்­த­மாக இருக்­க­மு­டி­ய­வில்லை. முவே தாய் கலை­யைப் பயி­லா­தது மன­தில் வெற்­றி­டம் ஒன்றை உரு­வாக்­கி­யது போன்ற உணர்வு இவரிடம் இருந்தது.

இவ்­வாறு சென்று கொண்­டி­ருந்த வாழ்­க்கையில், இவர் ஒரு முவே தாய் வீரர் என்­பதை அறிந்த சில நண்­பர்­கள் தங்­க­ளுக்குக் கற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்­த­னர். தனக்குப் பிடித்த கலை­யைக் கற்­றுத்தரும் வாய்ப்பு கிடைத்­த­தால் அதை மிகுந்த ஆனந்­தத்­து­டன் ஜெரமி ஏற்­றார். ஆரம்­பத்­தில் குறைந்­த­ள­வி­லான மாண­வர்­க­ளு­டன் தொடங்­கிய இவ­ரது வகுப்­பு­கள், சென்ற ஆண்டு முதல் பல மாண­வர்­களை ஈர்த்­தன.

இத­னால், இவர் ஜெய் முவே தாய் என்ற உடற்­ப­யிற்சிக் கூடத்தை நிறுவி, கட்­டுப்­ப­டி­யான கட்­ட­ணங்­களில் முவே தாய் வகுப்புகளை நடத்தி வரு­கி­றார். இவ­ரது மாண­வர்­கள் முவே தாய் கலை­யில் தேர்ச்சி பெறு­வ­தோடு அவர்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்­பது மன­திற்கு நெகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தாக ஜெரமி மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

"போட்­டி­யிட முடி­யா­மல் போன­தால் ஏற்­பட்ட வெற்­றி­டம், மற்­ற­வர்­க­ளின் வாழ்­க்கையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் வாய்ப்பு கிடைத்­தி­ருப்­ப­தன் வழி நிறைந்­துள்­ளது" என்று ஜெரமி கூறி­னார்.

யுகேஷ் கண்ணன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!