தமிழில் ‘ஏடிஎச்டி’ விழிப்புணர்வுக் குறுந்தளம்

மோன­லிசா

கவ­னக்­குறை மிகைச்­சு­றுதி குறை­பாடு (ADHD) குறித்து முதன்­முதலாகத் தமி­ழில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள குறுந்­த­ளத்தை 'அன்­லாக்­கிங் ஏடி­எச்டி' எனும் தொண்டு நிறு­வ­னம் அண்­மை­யில் அறி­முகப்­படுத்­தி­யது.

"ஏடி­எச்டி குறை­பாடு பற்­றிய பல பய­னுள்ள தக­வல்­களை ஒன்­று­திரட்டி முதன்­மு­த­லாக தமிழ்மொழி­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள குறுந்­தளம் ஒரு சிறந்த முயற்சி. அந்தக் ­கு­றை­பாட்டிற்கான அறி­கு­றி­கள், சிகிச்சை முறை­கள் உள்­ளிட்ட பல தக­வல்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய இந்த குறுந்­த­ளம், அது­கு­றித்து மக்களிடம் விழிப்­புணர்­வூட்டி, தக்க ஆலோ­சனை­களை­யும் சரி­யான வழி­காட்டு­த­லை­யும் வழங்க பெரி­தும் உத­வும்," என்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி கூறி­னார்.

https://www.unlockingadhd.com/ta/ என்ற முக­வ­ரி­யைக் கொண்ட இக்­கு­று­ந்­தள அறி­முக நிகழ்ச்சி இம்­மா­தம் 1ஆம் தேதி இடம்­பெற்­றது.

"ஏடி­எச்டி குறை­பாடு பற்­றிய விழிப்­பு­ணர்வு மக்­க­ளுக்கு ஏற்­பட வேண்­டும். இந்­தக் குறை­பாட்டை தொடக்க நிலை­யி­லேயே கண்­ட­றிந்­து­விட்­டால் தக்க உத­வி­யை­யும் சரி­யான சிகிச்­சை­மு­றை­க­ளை­யும் பின்­பற்றி, நல்ல முன்­னேற்­றம் காண இய­லும்," என்­றார் 'அன்­லாக்­கிங் ஏடி­எச்டி' நிறு­வ­னர் மூன்­லேக் லீ.

'ஸூம்' வழி நடந்­தே­றிய குறுந்­தள அறி­முக நிகழ்ச்­சி­யின்­போது 'ஏடி­எச்டி கண்­ட­றி­தல் மற்­றும் சமா­ளித்­தல்' எனும் கருத்­த­ரங்­கும் இடம்­பெற்­றது.

அக்கருத்தரங்கில் கலந்­து­கொண்டு பேசிய உள­வி­யல் வல்லு­நர் எஸ்.சி.அன்­பரசு, "ஏடி­எச்டி என்­பது சிறு­வ­யது முதலே நரம்­பி­யல் வளர்ச்­சி­யில் ஏற்­படும் குறை­பாடு ஆகும். கவனச்­சி­த­றல், மிகைச் செயல்­பாடு, அன்­றா­டப் பணி­களில் மறதி, பொறு­மை­யின்மை போன்ற அறி­கு­றி­கள் மூலம் அத­னைக் கண்­ட­றிய இய­லும். நினை­வாற்­ற­லைத் தூண்­டு­தல், புலனுணர்வு சார்ந்த சிகிச்சை, மருந்­தி­யல் சிகிச்சை, நடத்­தை சார்ந்த சிகிச்சை போன்றவை மூலம் அக்கு­றை­பாட்­டின் தீவிரத்­தைக் குறைக்க முடி­யும்," என்­றார்.

சுகா­தார உள­வி­ய­லா­ள­ரா­கப் பயிற்சி பெற்­று­வ­ரும் சஞ்­சனா பிரபாகர், 20, "ஏடி­எச்டி குறை­பாடு உள்­ளோ­ரால் கல்­வி­யி­லும் பிற­வற்­றி­லும் முன்­னிலை பெற இய­லாது என்­னும் தவ­றான மனப்­பான்­மை­யால் என்­னி­டம் இருந்த இக்­கு­றை­பாட்டை கண்­ட­றி­யப் பல ஆண்­டு­கள் ஆனது. சிறு­வ­யது முதலே எல்­லா­வற்­றி­லும் சிறந்து விளங்க வேண்­டும் என்ற உந்­து­தல் நாள­டை­வில் அதிக மன­யி­றுக்­கத்தை ஏற்­ப­டுத்தி, பின்­னா­ளில் அதுவே என்­னு­டைய செயல்­தி­ற­னைக் குறைத்து, கவ­னத்­தைச் சித­ற­டித்­தது," என்­றார்.

மருத்­து­வரை அணுகி உரிய சிகிச்­சை­கள் எடுத்­துக்­கொள்­வ­தா­லும், சரி­யான உண­வுப் பழக்­கங்­களை கடைப்­பி­டிப்­ப­தா­லும், யோகா, தியா­னம் போன்ற பயிற்­சி­க­ளா­லும் ஏடி­எச்டி குறை­பாட்­டின் தீவி­ரம் குறைந்து நல்ல முன்­னேற்­றம் கண்­டுள்­ள­தாக அவர் மகிழ்­வு­டன் தெரி­வித்­தார். 'அன்­லாக்­கிங் ஏடி­எச்டி' நிறு­வ­னத்­து­டன் இணைந்து தொண்­டூ­ழி­யம் செய்து வரும் இவர், தன்னைப்­போல் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு ஊக்­கம் அளித்­தும் தேவை­யான உத­வி­க­ளை­யும் செய்து வரு­கி­றார்.

"இது­போன்ற ஒரு குறை­பாட்­டி­னால் பாதிக்­கப்­பட்­டு­விட்­டோமே என்று கவ­லைப்­ப­டு­வ­தை­விட அதைச் சரி­செய்து வாழ்­வைச் செம்­மைப்­ப­டுத்­தும் மனப்­பான்­மையை வளர்த்­துக்­கொள்­வது மிக­வும் அவ­சி­யம். ஏடி­எச்டி குறை­பாடு உடை­யோரை அவர்­க­ளின் நண்­பர்­களும் குடும்­பத்­தி­ன­ரும் புரிந்­து­கொண்டு, நல்­ல­தொரு சூழலை உரு­வாக்­கித் தரு­வது அவர்­க­ளுக்­குப் பேரு­த­வி­யாக இருக்­கும்," என்­றார் கால்­நடை மருத்­து­வ­ரான ஜன­னி­பி­ரியா கிருஷ்­ண­சாமி, 30.

ஏடி­எச்­டி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள பாஹியா பஷீர், 20, "தொடக்­க­கால பாலர் பருவ மேம்­பாட்­டில் பட்­ட­யம் பயின்­ற­போ­து­தான் எனக்­கும் அக்­கு­றை­பாடு இருப்­ப­தைத் தெரிந்­து­கொண்­டேன். உடனே அதற்கு சிகிச்சை பெறத் தொடங்­கி­னேன். என்­னைப் போன்­றோ­ருக்கு உத­வும் நோக்­கில் 'அன்­லாக்­கிங் ஏடி­எச்டி' நிறு­வ­னத்­து­டன் இணைந்து தொண்­டூ­ழி­யமும் செய்­து­வ­ரு­கி­றேன்," என்று கூறி­னார்.

ஏடி­எச்டி குறை­பாட்­டினை மருத்­து­வர் மூலம் கண்­ட­றி­வ­தன் அவ­சி­யம், அறி­கு­றி­கள், அக்­கு­றை­பாடு இருப்­பதை அறி­யா­த­தால் ஏற்­படும் விளை­வு­கள் என்­பன போன்ற பல விவ­ரங்­களும் இந்­நி­கழ்­வில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!