செயற்கை நுண்ணறிவால் மருத்துவத்தில் சவால்கள்

செயற்கை நுண்­ண­றி­வால் மருத்­து­வத் துறை­யில் நல்ல முன்­னேற்­றம் காணப்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக சில வேளை­களில் செயற்கை நுண்­ண­றிவு அம்­சங்­களால் துல்­லி­ய­மான முறை­யில் வேக­மாக நோய்­க­ளைக் கண்­ட­றிய முடி­கிறது.

எனி­னும், செயற்கை நுண்­ணறிவு முறை­க­ளால் கொள்கை அடிப்­ப­டை­யி­லான பிரச்­சி­னை­கள், சட்ட ரீதி­யான சவால்­கள் ஆகி­யவையும் எழக்­கூ­டும். அவற்றை சரி­செய்­வது அவ­சி­யம்.

அதற்­குப் பின்­னரே மருத்­து­வத் துறை­யில் செயற்கை நுண்­ண­றிவு முறை­களைப் பர­வ­லா­கச் செயல்­படுத்­த­மு­டி­யும் என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் லீ கொங் சியான் மருத்­து­வப் பள்­ளி­யின் தலை­வ­ரான பேரா­சி­ரியர் ஜோசஃப் சுங் கூறி­யுள்­ளார். நோயாளி­க­ளின் தனிப்­பட்ட தக­வல்­கள் கசி­யாத வகை­யில் அவற்­றைப் பாது­காப்­பா­கப் பயன்­ப­டுத்­து­வது, செயற்கை நுண்­ண­றிவு முறை­களும் கரு­வி­களும் தவ­றாக உப­யோ­கிக்­கப்­பட்­டால் அதற்­கு யார் பொறுப்பேற்பது போன்­றவை இதன் தொடர்­பி­லான பிரச்­சி­னை­களில் அடங்­கும்.

"தொழில்­நுட்­பத்தைச் சரி­யான முறை­யில் பயன்­ப­டுத்­தத் தெரி­யா­விட்­டால் நாம் மீறப்­ப­டு­வ­தோடு மனித குலத்­திற்கே பேரி­டர் ஏற்­படும்," என்று பேரா­சி­ரி­யர் சுங் குறிப்­பிட்­டார்.

மருத்­து­வம் உள்­பட வாழ்க்­கை­யின் பல்­வேறு அம்­சங்­களில் செயற்கை நுண்­ண­றிவு வகிக்­கும் பங்­கைப் பற்­றி பேரா­சி­ரி­யர் சுங் தமது உரை­யில் சுட்­டி­னார். சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­கள் உள்­ளிட்­டோ­ரு­டன் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை, சமூ­கம் ஆகி­ய­வற்­றி­லும் செயற்கை நுண்­ண­றிவு பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தை­அவர் குறிப்­பிட்­டார்.

உதா­ர­ண­மாக, நோய்­க­ளைக் கண்­ட­றி­வ­தற்கு உத­வும் பல செயற்கை நுண்­ண­றிவு முறை­கள் சிகிச்சை நட­வ­டிக்­கை­களில் பயன்­படுத்­தப்­ப­டு­கின்­றன என்று­ அவர் கூறி­னார்.

எனி­னும், தக­வல் தரவு பாது­காப்பு தொடர்­பி­லான அச்­சம் இருந்து வரு­வ­தை­யும் பேராசிரியர் சுங் எடுத்­துச்சொன்­னார்.

"பெருங்­க­டல­ளவு தக­வல் தரவு நம்­மி­டம் இருக்­கிறது. ஆனால், தக­வல்­களைப் பாது­காப்­பான முறை­யில் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­யும் அவ்­வாறு செய்­ய­மு­டி­யும் என்ற நம்­பிக்­கை­யும் இல்லை," என்­பதை அவர் தெரி­வித்­தார். மேலும், உயிர் தொடர்­பி­லான முடி­வு­களைச் செயற்கை நுண்­ண­றிவு முறை­கள் அல்­லது இயந்­தி­ரங்­க­ளைக் கொண்டு எடுப்­பது சரி­தானா என்ற கேள்வி நோயா­ளி­க­ளி­டையே நிலவி வரு­கிறது.

மருத்­து­வத் துறை­யின் செயற்கை நுண்­ண­றி­வு அம்சங்களையும் தானி­யக்க வாக­னங்­க­ளை­யும் பேரா­சி­ரி­யர் சுங் ஒப்­பிட்­டுப் பேசி­னார்.

"இயந்­தி­ரங்­கள் வாக­னத்தை இயக்­கும்­போது ஓட்­டும் பொறுப்பு படிப்­ப­டி­யாக ஓட்­டு­ந­ரி­ட­மி­ருந்து எடுத்­து­க்கொள்­ளப்­ப­டு­கிறது.

"இதை வைத்­துப் பார்க்­கும்­போது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை­கள், அறுவை சிகிச்சை ஆகி­ய­வை­யும் அந்த திசை­யில் செல்­லக்­கூ­டும். மருத்­து­வர்­க­ளுக்­குப் பதி­லாக இயந்­தி­ரங்­கள் முடி­வெ­டுக்­க­லாம், இயந்­திர மனி­தர்­கள் அறுவை சிகிச்­சையை மேற்­கொள்­ள­லாம். இதன் தொடர்­பில் பேச்­சு­வார்த்தை அதி­கம் இடம்­பெ­றும்," என்று பேரா­சி­ரி­யர் சுங் விவ­ரித்­தார்.

கிராண்ட் கோப்­தோர்ன் வாட்­டர்­ஃபி­ரண்ட் ஹோட்­ட­லில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற 'ஏஎம்­எஸ்' எனும் சிங்­கப்­பூர் மருத்­து­வக் கழ­கத்­தின் அறி­முக நிகழ்ச்­சி­யில் அவர் பேசி­னார். 105 கல்­வி­மான்­கள் கழ­கத்­தில் சேர்த்­துக்­கொள்ளப்­பட்­ட­னர்.

நிகழ்ச்­சி­யில் அதி­பர் ஹலிமா யாக்­கோப் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!