ஆய்வு: சைவ உணவால் பெண்கள் இடுப்பு எலும்பு முறிவுக்கு ஆளாகும் அபாயம் அதிகம்

ஆய்வு: சைவ உணவால் பெண்கள் இடுப்பு எலும்பு முறிவுக்கு ஆளாகும் அபாயம் அதிகம்

1 mins read
6a219128-2693-44ae-81f7-b775ec182df2
சைவ உணவை மட்டும் உண்ணும் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இடுப்பு எலும்பு அடர்த்தி குறைவு என்றும் இவர்கள் இடுப்பு எலும்பு முறிவுக்கு ஆளாகும் வாய்ப்பு 25 விழுக்காடு அதிகம் என்று முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தகவல், படம்: இந்திய ஊடகம் -

அசைவ உண­வைத் தவிர்த்து சைவ உணவை மட்­டுமே உண்­போ­ருக்கு நீரி­ழிவு, இதய நோய்­கள், புற்­று­நோய் போன்­றவை பாதிக்­கும் வாய்ப்பு குறைவு என்று முன்­னர் பல ஆய்­வு­க­ளின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டது. ஆனால் அண்­மை­யில் நடத்­தப்­பட்ட ஆய்­வில் சைவ உணவை உண்­ணும் பெண்­களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்­படும் வாய்ப்பு 33 விழுக்­காடு அதி­கம் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

முன்­ன­தாக 1995ஆம் ஆண்­டுக்­கும் 1998ஆம் ஆண்­டுக்­கும் இடையே, பிரிட்­ட­னைச் சேர்ந்த 35 வய­துக்­கும் 69 வய­துக்­கும் இடைப்­பட்ட பெண்­க­ளி­டம் உண­வுப் பழக்­கம், வாழ்க்கை முறை ஆகி­யவை குறித்த தக­வல்­கள் திரட்­டப்­பட்­டன.

பின்­னர் 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இவர்­களில் யாருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்­பட்­டது எனக் கண்­கா­ணிக்­கப்­பட்­டது.

இதில் வாரத்­துக்கு ஐந்து நாள்­க­ளுக்கு இறைச்சி உண்­ணும் பெண்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் அசைவ உணவு உண்­ணாத பெண்­க­ளுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்­படும் அபா­யம் அதி­கம் என்று கண்­ட­றி­யப்­பட்­டது. மீன் மட்­டும் உண்­ப­வர்­க­ளுக்­கும் எப்­போ­தா­வது இறைச்சி உண்­ப­வர்­க­ளுக்­கும் இத்­த­கைய அபா­யம் ஏற்­ப­டா­த­தும் இந்த ஆய்­வில் தெரி­ய­வந்­தது.

இதற்­கான வழி­களை மருத்­து­வர்­கள் பரிந்­து­ரைத்­துள்­ள­னர்.

சரி­யான உடல் எடை­யைக் கொண்­டி­ருப்­பது, புர­தச் சத்து நிறைந்த உண­வு­க­ளை­யும் பால் பொருள்­க­ளை­யும் வைட்­ட­மின் B-12 சத்து நிறைந்த உண­வை­யும் போதிய அள­வில் உண்­பது, புகை­பி­டித்­தல், மது அருந்­து­தல் ஆகி­ய­வற்­றைத் தவிர்ப்­பது, எலும்­பு­களை வலுப்­படுத்­தும் உடற்­ப­யிற்­சி­க­ளைச் செய்­வது ஆகி­யவை அவை.