நல்ல தூக்கம், நல்ல உடல்நலம்

நல்ல தரமான தூக்கம் உள்ளவர்களுக்கு வாதநோய், இதயநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தூக்கம்தானே எனும் அலட்சியம் வேண்டாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நல்ல தூக்­கம் குறை­வ­தால் இதய நோயும் வாத நோயும் ஏற்­படும் அபா­யம் அதி­க­மா­வ­தாக ஆய்­ வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

நல்ல தர­மான தூக்­கம் உள்­ள­வர்­க­ளுக்கு, மிக மோச­மான தூக்­கம் உள்­ள­வர்­க­ளை­விட இதய நோய் ஏற்­படும் அபா­யம் 75 விழுக்­காடு குறைவு என்று ஓர் ஆய்வு கூறு­கிறது.

ஐரோப்­பிய இத­ய­நோய் சிகிச்சை சங்­கத்­தின் மாநாட்­டில் இந்த வாரம் தெரி­விக்­கப்­பட்ட ஆய்வு, எல்­லா­ருக்­கும் நல்ல தூக்­கம் இருந்­தால் பத்­தில் ஏழு இதய நோய் பிரச்­சி­னை­க­ளைத் தவிர்க்­க­லாம் என்று கூறி­யது.

நல்ல தூக்­கம் இல்­லா­த­வர்­க­ளுக்கு இதய நோய் வரக்­கூ­டும் என்று பல முந்­தைய ஆய்­வு­கள் கூறு­கின்­றன. ஆனால் அவை, தூக்­கத்­தில் அதி­கக் குறட்டை விடு­வது, தூங்­கும் நேரம் போன்ற ஓர் அம்­சத்தை மட்­டும் ஆராய்ந்­தன. இந்த ஆய்வோ ஐந்து முக்­கிய அம்­சங்­களை ஆராய்ந்­தது.

பிரான்­சின் தேசிய சுகா­தார, மருத்­துவ ஆய்வு நிலை­யத்­தின் ஆய்­வா­ளர்­கள் அதை முன்­னெ­டுத்­த­னர். கிட்­டத்­தட்ட 60 வய­துள்ள சுமார் 7,200 பேரின் தூக்­க­மும் உடல்­ந­ல­மும் பத்­தாண்­டு­க­ளுக்­குக் கண்­கா­ணிக்­கப்­பட்­டன. அவர்­க­ளின் தூக்­கத்­தின் தரத்­தைக் குறிக்க பூஜ்­ஜி­யம் மதிப்­பெண்­கள் முதல் ஐந்து மதிப்­பெண்­கள் வரை வழங்­கப்­பட்­டன.

மோச­மான தூக்­கத்­தைக் குறிக்­கும் பூஜ்­ஜி­யம் அல்­லது ஒன்று எனும் மதிப்­பெண் பெற்­ற­வர்­க­ளை­விட மிக நல்ல தூக்­கத்­தைக் குறிக்­கும் ஐந்து மதிப்­பெண்­க­ளைப் பெற்­ற­வர்­க­ளுக்கு, இதய நோய் அல்­லது வாத நோய் ஏற்­படும் அபா­யம் 75 விழுக்­காடு குறைந்­தது.

ஒரு மதிப்­பெண் கூடி தூக்­கம் மேம்­ப­டும்­போது வாத நோய், இதய நோய் ஏற்­படும் அபா­யம் ஏழு விழுக்­காடு குறைந்­தது என்­றும் ஆய்வு தெரி­வித்­தது.

வயது ஏற ஏற, தூக்­கம் தடை­ப­டு­வது அதி­க­ரிக்­கும் என்று ஆக்ஸ்­ஃபோர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் நுஃபீல்டு மருத்­து­வம்­சார் நரம்­பி­யல் துறைப் பேரா­சி­ரி­யர் கோலின் எஸ்பீ கூறி­னார்.

"நம் உட­லி­லும் மூளை­யி­லும் உயிர்­வாயு குறை­வதை இரவு உள்­ளிட்ட எல்லா நேரங்­க­ளி­லும் நாம் தவிர்க்க வேண்­டும். சில­ருக்­குத் தூங்­கும்­போது மூச்சு சற்று நேரம் நின்­று­வி­ட­லாம் அல்­லது ஸ்லீப் ஏப்­னியா எனும் அள­வுக்கு அதி­க­மான குறட்டை ஏற்­ப­ட­லாம். தூக்­கத்­தைக் கெடுக்­கும் இவை மிகக் கடுமையா­னால், இத­ய­நோய் ஏற்­படும் அபா­யம் அதி­கம்," என்­றார் பேரா­சி­ரி­யர் எஸ்பீ. மேலும், வாத நோய் ஏற்­பட்­ட­வர்­கள் உடல் தேறு­வதற்கு நல்ல தூக்­கம் அவ­சி­யம் என்று அவர் கூறி­னார்.

தூக்­கத்­தில் மூன்று கட்­டங்­கள் உள்­ள­தா­க­வும் அவற்­றில் ஆர்­இ­எம் எனப்­படும் ஆழ் தூக்­கத்­தில்­தான் உட­லும் மூளை­யும் ஓய்­வும் புதுத் தெம்­பும் பெறும் என்று மிச்­சி­கன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்­றும் டாக்­டர் மார்க் ஹெல்­ஸர் குறிப்­பிட்­டார்.

தடை­ப­டாத தொடர் தூக்­கம்­தான் நல்ல தூக்­கம். அடிக்­கடி விழித்­துக்­கொண்­டால் தூக்­கம் தடை­பட்டு மீண்­டும் அதன் மூன்று கட்­டங்­களும் முத­லி­லி­ருந்து தொடங்­கும். இத­னால் தூக்­கப் பற்­றாக்­குறை ஏற்­படும். மூளை தேவை­யான ஓய்­வை­யும் புதுப்­பித்­த­லை­யும் பெறாது என்றும் அவர் கூறி­னார்.

படுக்­கை­யில் படம் அல்­லது கைபே­சி­யைப் பார்ப்­பது, சரி­யில்­லாத மெத்தை, அல்­லது சூழல் போன்­ற­வற்­றால் தூக்­கம் தடை­ப­ட­லாம். இத­னால் மூளை மெது­வாக செயல்­ப­டு­வ­து­போல உணர்­வோம். உட­லும் மன­மும் சோர்­வாக இருக்­கும் என்­றார் டாக்­டர் ஹெல்­ஸர்.

நல்ல தூக்­கத்­தைப் பெற ஒவ்­வோர் இர­வும் அதே நேரத்­துக்­குப் படுக்­கச் செல்ல வேண்­டும் என்­றும் கைபே­சி­களை தூங்­கும் இடம் அருகே வைக்­கக் கூடாது என்­றும் மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்­து­கின்­ற­னர். அத்­து­டன் படுக்கை அறையை இருட்­டா­க­வும் அமை­தி­யா­க­வும் வைத்­தி­ருப்­பது அவ­சி­யம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!