சிறப்புத் தேவைகளுடைய பிள்ளைகளுக்கு வழிகாட்டும் ஷக்தி

மாதங்கி இளங்­கோ­வன்

பிள்­ளை­க­ளின் கற்­ற­லுக்­குத் தடை­யாக இருக்­கும் குறை­பா­டு­களை ஆரம்­ப­கட்­டத்­தி­லேயே கண்­டு­பிடித்து அவர்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­டும் ஆசி­ரி­யர்­க­ளுள் ஒரு­வர் ஷக்தி மிஷெல், 32. தம் இளம் பரு­வத்­தி­லி­ருந்தே பிள்­ளை­கள் மீது அதிக அன்பு கொண்ட இவ­ருக்கு, அவர்­க­ளு­டைய கற்­ற­லி­லும் வாழ்க்கை­யி­லும் நல்­ல­தொரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்ற வேட்கை உண்­டா­னது.

'ஏவா'வின் ஆரம்­ப­கால இடை­யீட்டு நிலை­யத்­தில் ஐந்து வரு­டங்­க­ளாக பணி­பு­ரி­யும் ஷக்தி, மருத்­து­வ­ம­னை­க­ளால் பரிந்­து­ரைக்­கப்­பட்டு இந்­நி­லை­யத்­துக்கு அனுப்­பப்­படும் பிள்­ளை­க­ளுக்கு உதவி வரு­கி­றார். சில மாதங்­களே ஆன குழந்­தை­கள் முதல் ஆறு வயது சிறு­வர்­க­ளுக்கு இவர் ஆத­ரவு வழங்கி வரு­கி­றார்.

ஒவ்­வொரு நாளும் பிள்­ளை­களு­டன் பல­த­ரப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு அவர்­க­ளுக்கு அடிப்­ப­டைத் திறன்­க­ளைக் கற்­றுத்­த­ரும் ஷக்திக்கு, இப்­ப­ணி­யில் ஈடு­ப­டு­வது தமது மன­துக்கு திருப்தி அளிப்­ப­தாக பகிர்ந்­து­கொண்­டார்.

உதா­ர­ண­மாக, பந்­தைக் கையில் எடுத்­துக்­கொள்­வது, பந்தை உதைப்­பது, சிறு ஏணி­யில் ஏறு­வது என ஒரு சில எளி­தான செயல்­களை எவ்­வாறு செய்­வது எனப் பிள்­ளை­களுக்கு இவர் வழி­காட்­டு­வார்.

பெற்­றோர் தங்­கள் குழந்­தை­களை இந்­நி­லை­யத்­திற்கு முதன் முத­லில் அனுப்­பும்­போது, அவர்­களுக்­குப் பதற்­ற­மாக இருக்­கும் என்று கூறிய ஷக்தி, அந்­தப் பதற்ற நிலை­யைச் சமா­ளிப்­ப­தற்­காக பெற்­றோ­ருக்­கென பயி­ல­ரங்­கு­கள் நடத்­து­வ­தா­க­வும் கூறி­னார். பிள்­ளை­கள் வீட்­டி­லி­ருக்­கும்­போது அவர்­க­ளு­டன் எவ்­வித நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம் என்­றும் அவர்­க­ளு­டைய திறன்­களை எவ்­வாறு மேம்­ப­டுத்த உத­வ­லாம் என்­றும் பெற்­றோ­ருக்கு அவர் அறி­வு­றுத்­து­வார்.

"சிறப்­புத் தேவை­யு­டைய இந்­தப் பிள்­ளை­கள் தங்­க­ளின் கற்­ற­லில் முன்­னேற்­றம் காண, பெற்­றோர் என்­னென்ன வழி­க­ளைக் கையா­ள­லாம் என்று வழி­காட்­டு­வேன். நாள­டை­வில் பிள்­ளை­க­ளின் நட­வ­டிக்­கை­களில் முன்­னேற்­றம் தெரி­யும்­போ­தெல்­லாம் என் பணி­யின் உன்­ன­தத்தை உணர்­கி­றேன்," என்­றார் குழந்தை உள­வி­யல் கல்­வித் துறை­யில் பட்­ட­யம் பெற்ற ஷக்தி.

ஷக்தி ஒவ்­வொரு பிள்­ளைக்­கும் தனிப்­பட்ட திட்­டத்தை உரு­வாக்கி அவர்­க­ளுக்கு வழி­காட்­டு­வ­தில் பெரு­மை­கொள்­கி­றார். பிள்­ளை­களின் பெற்­றோ­ரு­டன் நல்ல தொடர்பு இருக்க வேண்­டும் என்று நம்­பும் இவர், தம் குழு­வோடு சில சம­யம் பிள்­ளை­க­ளின் வீடு­க­ளுக்­குச் சென்று பார்ப்­ப­தும் உண்டு.

பேச்­சுத்­தி­றன், கேட்­கும் திறன் இல்­லாத பிள்­ளை­க­ளு­ட­னும் அவர்­களின் பெற்­றோ­ரு­ட­னும் சைகை மொழி மூலம் உரை­யா­டு­வ­தற்கு தான் அதைக் கற்று வரு­வ­தாக ஷக்தி குறிப்­பிட்­டார்.

இது அவ­ருக்­குச் சற்று சவா­லாக இருந்­தா­லும் இதன்­வழி மேலும் பல பிள்­ளை­க­ளுக்கு உதவ முடி­யும் என்று நம்­பு­கி­றார். கல்­வி­யா­ளர்­களுக்கு அர்ப்­ப­ணிப்­பும் ஆர்­வ­மும் இருக்­கும்­போது ஆசி­ரி­யர் துறைக்கு மேலும் சிறப்பு சேர்ப்­பர் என்­பதை ஷக்தி போன்­ற­வர்­கள்­வழி உணர முடி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!