ஆதரவு வழங்குவோராக வலம்வரும் விநியோக ஊழியர்கள்

காயத்­திரி காந்தி

உயிரை மாய்த்­துக்­கொள்­வ­தைத் தடுக்­கும் நோக்­கில் டெலி­வரூ சிங்­கப்­பூர், 'எஸ்­ஓ­எஸ்' எனப்­படும் சிங்­கப்­பூர் அபய ஆலோ­சனை மன்­றத்­து­டன் (Samaritans of Singapore) இணைந்து புதிய திட்­டம் ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

உயிர் மாய்ப்­புத் தடுப்பு தினம் வரும் 10ஆம் தேதி­யன்று அனு­சரிக்­கப்­ப­டு­கிறது. இதை முன்­னிட்டு டெலி­வரூ சிங்­கப்­பூர், லாப நோக்­க­மற்ற எஸ்­ஓ­எஸ் அமைப்­பு­டன் இணைந்து 30 விநி­யோக ஓட்­டு­நர்­க­ளுக்­குப் பயிற்­சிப் பயி­ல­ரங்கு ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­தது.

முத­லில் உட­னடி உதவி வழங்கு­ப­வ­ருக்­கான பயிற்­சி­யாக பயி­ல­ரங்கு அமைந்­தது. உயிர் மாய்ப்­புத் தடுப்பு தொடர்­பான முக்­கி­யத் திறன்­க­ளை­யும் தக­வல்­க­ளை­யும் பெற்­றுக்­கொண்ட விநி­யோக ஓட்டு­நர்­கள், சமூ­கத்­தில் எளி­தில் பாதிப்­படை­யக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு மேம்­பட்ட ஆத­ரவை வழங்க வேண்­டு­மென அறிந்­து­கொண்­ட­னர்.

கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடந்த பயி­ல­ரங்­கில் எஸ்­ஓ­எஸ் பயிற்­சி­யா­ளர்­கள் 'பி எ செமே­ரிட்­டன்' (பிஏ­எஸ்) திட்­டத்தை மேற்­கொண்­ட­னர்.

உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் அபா­யத்­தில் உள்­ள­வர்­க­ளி­டம் காணப்­படும் எச்­ச­ரிக்கை அறி­குறி­களை அடை­யா­ளம் காண்­பது, உயிர் மாய்ப்பு அபா­யத்­தில் உள்­ள­வர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கும் வழி­கள், ஆரம்­ப­கட்­டத்­தி­லேயே உதவி நாடு­வ­தற்­கான வளங்­கள் ஆகி­ய­வற்­றைப் பற்றி டெலி­வரூ ஓட்­டு­நர்­கள் அறிந்­து­கொண்­ட­னர்.

பயிற்­சி­யில் கலந்­து­கொண்ட விநி­யோக ஓட்­டு­நர்­க­ளுக்­குச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டது. அத்­து­டன் துய­ரத்­தில் இருப்­ப­வர்­க­ளைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு ஆத­ரவு நல்­கும் நம்­பிக்­கை­யை­யும் பெற்­ற­னர். இதற்­கி­டையே, மேலும் சில டெலி­வரூ ஊழி­யர்­கள், இம்­மா­தம் பயிற்சி பெறு­வ­தா­கக் கூறப்­பட்­டது. உல­கெங்­கும் மன­ந­லம் தொடர்­பான ஒரு பெரும் பிரச்­சினை­யாக உயிர் மாய்த்­துக்­கொள்­ளும் போக்கு உரு­வெ­டுத்­துள்­ளது.

பிஏ­எஸ் திட்­டத்­து­டன் 200க்கும் மேற்­பட்ட விநி­யோக ஓட்­டு­நர்­கள் இம்­மா­தம் முழு­வ­தும் உயிர் மாய்ப்பு தடுப்பு விழிப்­பு­ணர்வு ஒட்­டு­வில்­லை­க­ளைத் தங்­க­ளின் விநி­யோகப் பைக­ளின் மீது ஒட்­டு­வார்­கள்.

"உயிர் மாய்ப்பு விவ­கா­ரம் இன்­ன­மும் அதி­கம் பேசப்­ப­டாத, களங்­கத்­து­டன் தொடர்­பு­டைய ஒன்­றாக உள்­ளது. இதை உடைத்­தெ­றிய உயிர் மாய்ப்­புத் தடுப்பு தொடர்­பான உரை­யா­டல்­களும் புரிந்­து­ணர்­வும் தேவைப்­ப­டு­கிறது," என்­றார் எஸ்­ஓ­எஸ் அமைப்­பின் தலைமை நிர்­வாகி கேஸ்­பர் டான்.

விநி­யோ­கச் சேவை­யின் மைய­மாக இயங்கி வரும் விநி­யோக ஊழி­யர்­கள் அடிக்­கடி சமூ­கத்­தி­ன­ரைச் சந்­திப்­ப­தால் உயிர் மாய்ப்­புத் தடுப்பு தொடர்­பான திறன்­களை அவர்­கள் பெற்­றி­ருப்­பது மிகப் பெரிய மாற்­றத்­தைக் கொண்­டு­வரும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!