உலகெங்கும் கால்பதிக்க விரும்பும் நிரஞ்சன்

மாதங்கி இளங்­கோ­வன்

நிரஞ்­சன் பாண்­டி­யன் ஐந்து வய­தாக இருந்­த­போது, அவ­ரின் தந்தை இந்­தி­யா­வில் நடந்த விபத்து ஒன்­றில் தமது வலது கையை இழந்­து­விட்­டார். அந்த இழப்­பினால் தந்­தை­யின் அன்­றாட வாழ்க்­கை­மு­றையே மாறிப்­போ­னது. சுய­மா­கச் சில செயல்­க­ளைச் செய்­யும் ஆற்­றலை அவர் இழந்­தார். இசைக்­க­ரு­வி­களை அவ­ரால் வாசிக்க முடி­யா­ம­லும் போனது.

தமக்கு ஏற்­பட்ட இக்­கட்­டான சூழ்­நிலை தம் பிள்­ளை­க­ளைப் பாதித்­து­வி­டக்­கூ­டாது என்று எண்­ணிய அந்­தத் தந்தை, பிள்­ளை­கள் வாழ்­வில் ஓர் உயர்ந்த இடத்தை அடைய வேண்­டும் என லட்­சி­யம் கொண்­டார். வீட்­டில் உள்­ள­வர்­கள் இசைக் கலை­ஞர்­க­ளாக இல்­லா­விட்­டா­லும் இசை சூழ்ந்­த­ப­டியே அவர்­கள் வாழ்ந்­த­தால், நிரஞ்­ச­னுக்­குச் சிறு வய­தி­லி­ருந்தே இசை மீது மோகம் வளர்ந்­தது.

அவ­ரின் தந்­தை­தான் அவரை 'பாஸ்கர்ஸ் கலைக் கழ­கத்­தில் புல்­லாங்­கு­ழல் வகுப்­பு­க­ளுக்கு அனுப்­பி­னார். அவ்­வாறே இசை அவ­ரு­டைய வாழ்­வில் பின்­னிப் பிணையத் தொடங்கியது.

தன் குரு­வான கான­வி­நோ­தன் ரத்­தினம்­வழி புல்­லாங்­கு­ழ­லின் மகி­மையை அவர் உணர்ந்­தார்.

மற்ற இசைக்­க­ரு­வி­க­ளுக்கு அழகு சேர்க்­கும் சக்­தி­வாய்ந்த இசைக்­க­ருவி, புல்­லாங்­கு­ழல் எனக் கற்­றுக்­கொண்­டார், நிரஞ்­சன். அது­மட்­டு­மல்­லா­மல், கான­விநோதன் இசைக் கலை­ஞர்­க­ளு­ட­னும் மக்­க­ளு­ட­னும் நல்­லு­றவு வைத்­தி­ருப்­ப­தைக் கண்டு வியந்த நிரஞ்­சன், அவ்­வாறு பிற­ரு­டன் வலு­வான உறவை வளர்த்­துக்­கொள்­வ­தன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் கற்­றுக்­கொண்­டார்.

தேசிய கலை­கள் மன்­றத்­தின் உப­காரச் சம்­ப­ளத்தை 2019ஆம் ஆண்­டில் பெற்ற நிரஞ்­சன், அண்­மை­யில் லசால் பள்­ளி­யில் ஜெஸ் இசை­யில் தன் பட்­டப்­ப­டிப்பை முடித்­தி­ருந்­தார். கர்­நா­டக இசை­யில் மட்­டும் திறன்­வாய்ந்த கலை­ஞ­ராக மற்­ற­வர்­கள் தன்­னைப் பார்க்­கா­மல், பல­வி­த­மான இசை வகை­களை அழ­கா­கக் கலவை செய்­யும் கலை­ஞ­ரா­கப் பார்க்க வேண்­டு­மென விரும்பு­கி­றார்.

மேற்­கத்­திய புல்­லாங்­கு­ழ­லை­யும் இந்­திய புல்­லாங்­கு­ழ­லை­யும் எவ்­வாறு வாசிப்­பது எனக் கற்­றுக்­கொண்ட நிரஞ்­சன், இந்­திய இசை­யு­டன் 'இண்டோ-ஜெஸ்' இசை­யைக் கலந்து பல்­வேறு பாடல்­க­ளுக்­கும் நிகழ்ச்­சி­க­ளுக்­கும் இசை­ய­மைத்­துள்­ளார்.

நிரஞ்­ச­னின் இசைப் பய­ணத்­தில் பல சவால்­கள் இருந்­தா­லும் சாதிக்க முடி­யும் என்று அவர் தனக்­குத்­தானே கூறிக்­கொள்­வார். தன் இளம் பரு­வத்­தில் அவ­ரு­டைய அடை­யா­ளம் என்­ன­வென்று அறி­யா­ம­ல் இருந்த நிரஞ்­ச­னுக்கு, இசை­வழி கதை­சொல்­வது சிறந்­த­வொரு அடை­யா­ள­மாகி­விட்­டது என்­றார்.

"ஒரு செய்­தி­யா­ளர் எவ்­வாறு ஒரு நிகழ்­வைக் கோர்­வை­யா­கக் கோர்த்து அதைச் சுவா­ர­சி­ய­மாக எழு­து­கி­றாரோ அதைப்­போல என்­னு­டைய இசைப் படைப்­பு­க­ளின்­வழி மனி­தர்­க­ளின் கதை­களை மக்­கள் உள்­ளத்­தைத் தொடும்­வி­த­மா­கக் கூற விரும்­பு­கி­றேன்," என்­றார் 29 வயது நிரஞ்­சன்.

'பிரம்­மாஸ்­திரா' இசைக்­கு­ழுவை ஆரம்­பித்த நிரஞ்­சன் பாண்­டி­யன், பல்­வேறு இசை விழாக்­களில் கலந்­து­கொண்­ட­து­டன் தன் குழு­வி­ன­ரு­டன் இளை­யர்­களின் ரச­னை­யைத் தூண்­டும் பல படைப்பு­க­ளை­யும் வழங்­கி­யுள்­ளார்.

உள்­ளூர்ப் பாட­கர்­கள், இசைக் கலை­ஞர்­கள் மட்­டு­மல்­லா­மல் இந்­தி­யா­வி­லி­ருந்­தும் மற்ற நாடு­க­ளி­லி­ருந்­தும் வரு­ப­வர்­களோடு இணைந்து பணி­யாற்­று­வ­தில் பெரு­மி­தம் கொள்­கி­றார் இவர். அவ்­விதத்­தில் அவர் அஜீஸ் அசோக், ஹரி­ச­ரண் போன்ற பாட­கர்­க­ளு­டன் இணை­யம்­வ­ழி­யும் கைத்­தொ­லை­பேசி மூல­மும் தொடர்­பு­கொண்டு, இசை­ய­மைத்து, சில இத­மான பாடல்­களை வழங்­கி­யுள்­ளார்.

'எனது தமிழே', 'சுட்­டும் விழி', 'என்னை இழந்­தேன்' ஆகியவை அவர் இசை­ய­மைத்த சில புகழ்­பெற்ற பாடல்­களா­கும். இவை­ய­னைத்­தும் உட்பட இந்­திய விருது விழாக்­க­ளி­லும் 'டர்­ஹாம்' போன்ற மற்ற வெளி­நாட்டு, அனைத்­து­லக இசை விருது விழாக்­க­ளி­லும் விருது­கள், நிய­ம­னங்­கள், கௌரவ அறி­விப்­பு­களை­யும் பெற்­றுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!