‘வாழ்வில் மறக்கவே முடியாத அனுபவம்’

பிரிட்டிஷ் அரசியாரை மும்முறை சந்தித்தது குறித்து இஸ்தானாவின் தலைமைப் பணியாளர்

பொன்­மணி உத­ய­கு­மார்

மறைந்த பிரிட்­டிஷ் அர­சி­யார் 2006ல் சிங்­கப்­பூ­ருக்கு வருகை தந்­தி­ருந்­த­போது, இஸ்­தா­னா­வின் தலை­மைப் பணி­யாளர் இஸ்­மா­யில் அப்­துல் கனி அவரை சந்­தித்­தி­ருந்­தார்.

"நான் மூன்­றா­வது முறை­யாக அரசி­யாரை நேரில் சந்­தித்­த­போது, முதன்­மு­த­லில் நாங்­கள் சந்­தித்த தரு­ணத்தை அவர் நினை­வு­கூர்ந்­தார். அது எனக்கு ஆச்­ச­ரி­யத்­தை­யும் ஆனந்­தத்­தை­யும் அளித்­தது," என்­றார் திரு இஸ்­மா­யில்.

2006ல் அர­சி­யா­ருக்கு அளிக்­கப்­பட்ட அரசு விருந்­தின்­போது அவ­ருக்கு சேவை­யாற்­றி­ய­வர்­களில் இவ­ரும் ஒரு­வர். விருந்­திற்­குப் பிறகு, அர­சி­யாரை வழி­ய­னுப்பி வைக்­கும் அணி வரி­சை­யில் தலை­மைப் பணி­யாளர்கள் நின்­ற­போது திரு இஸ்­மா­யி­லி­டம் அர­சி­யார் உரை­யா­டி­னார்.

அதற்கு முன்பு, 1972ல் சிங்­கப்­பூர் வந்­தி­ருந்த அர­சி­யார், இஸ்­தா­னா­வில் தங்­கி­யி­ருந்­தார். 'பிரிட்­டா­னியா' அரசு கப்­ப­லில் இங்கு பய­ணம் செய்த அரசி­யா­ருக்கு கப்­ப­லில் விருந்து நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அப்­போது, அர­சி­யா­ருக்கு விருந்­தோம்­பல் வழங்­கிய குழு­வில் பணி­யாளராக இருந்­தார் திரு இஸ்­மா­யில். இன்று இஸ்­தா­னா­வின் தலை­மைப் பணி­யாளராக உள்ள இவர், அன்று அர­சி­யாரை முதல்­மு­றை­யாக சந்­தித்­த­தில் மகிழ்ச்சி கொண்­டுள்­ளார். அர­சி­யாரை உப­ச­ரித்­தது அற்­பு­த­மான ஓர் அனு­ப­வ­மாக அமைந்­தது என்று இவர் பகிர்ந்து­கொண்­டார்.

இரண்­டா­வது முறை­யாக 1989ல் இடம்­பெற்ற மற்­றோர் அரசு விருந்­தில், மீண்­டும் அர­சி­யாரை உப­ச­ரிக்­கும் வாய்ப்பு இவ­ருக்கு கிடைத்­தது. ஆக, மூன்று முறை அர­சி­யா­ரைச் சந்­தித்­ததை இனிய அனு­ப­வ­மாக கரு­தும் திரு இஸ்­மா­யில், 2006ல் கடை­சி­யாக அர­சி­யாரைச் சந்­திப்­போம் என்­ப­தை எதிர்­பார்க்­க­வில்லை.

அர­சி­யார் மறைந்த செய்­தியை இவ­ரு­டைய மூத்த மகன் இவ­ருக்கு தெரி­யப்­ப­டுத்தி இருந்­தார். இது, திரு இஸ்­மா­யிலை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யது.

இவ­ரு­டைய தந்­தை­யும் தாத்­தா­வும் இஸ்­தா­னா­வில் பணி­யாளர்க­ளாக பணி­பு­ரிந்த போதி­லும் அவர்­க­ளுக்கு அர­சி­யாரை சந்­திக்­கும் வாய்ப்பு கிட்­ட­வில்லை. மூன்று முறை அர­சி­யாரை சந்­தித்­துள்ள இவர், அர­சி­யாரை அடக்­க­மும் கண்­ணி­ய­மும் மிடுக்­கும் நிறைந்­த­வ­ராக நினை­வில் வைத்­தி­ருப்­ப­தாகக் கூறி­னார்.

u

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!