கலை, கவிதையை இணைக்கும் வரலாற்றுக் கண்காட்சி

அனுஷா செல்­வ­மணி

இம்­மா­தம் 30ஆம் தேதி­யி­லி­ருந்து அடுத்த மாதம் 30ஆம் தேதி­வரை ஒரு மாதத்­திற்கு நடக்­க­வி­ருக்­கும் 'ஓவியமும் கவிதை­யும்' எனும் கண்காட்சி, ஓவியக்கலையையும் கவிதையையும் இணைக்கிறது. இதில் உள்­ளூர் ஓவி­யக் கலை­ஞர் எம்ஜி குமா­ரின் எண்­ணெய் ஓவி­யங்­கள் இடம்பெறுகின்றன.

எஸ்­த­லேட்­டிக் நுண்­க­லைக் கூடம், சிங்­கப்­பூர் கவிதை விழா, சிங்­கப்­பூர் வெளி­நாட்டு ஊழியர் எழுத்­தா­ளர் அமைப்பு ஆகி­ய­வற்றின் பங்­கா­ளித்­து­வத்­தோடு, சிங்­கப்­பூர் தேசிய நூல­கத்­தின் ஆத­ர­வோடு நடக்­க­வி­ருக்­கும் கண்­காட்­சியை தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ இம்­மா­தம் 30ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை தொடங்­கி­வைக்­கி­றார்.

'ஏ ஜெர்ணி டௌன் தி ரிவர்' எனும் கருப்­பொ­ரு­ளில் இந்­தக் கண்­காட்சி, பார்­வை­யா­ளர்­களை சிங்­கப்­பூர் வர­லாற்­றில் பின்­னோக்கி கொண்டுசெல்லும். சிங்­கப்­பூர் ஆற்றை ஒட்­டிய கதை­களை­யும் அக்கா­லத்­தில் சிங்­கப்­பூ­ருக்கு குடி­யே­றி­ய­வர்­கள் ஏற்­படுத்­திய தாக்­க­மும் நாட்­டிற்கு அவர்­களின் பங்­க­ளிப்­பும் சிங்­கப்­பூரை எவ்­வாறு உரு­மாற்றி­ உள்ளது என்­பதை முன்­வைக்­கும் வகை­யில் கண்­காட்சி அமை­யும்.

சிங்­கப்­பூர் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இடங்­க­ளான கிளார்க் கீ, சைனா­ட­வுன் போன்ற இடங்­களை நினை­வூட்­டும் வண்­ணத்­தில் சித்­தி­ரங்­களும் கவி­தை­களும் கண்­காட்­சி­யில் முக்­கிய அம்­சங்­க­ளாக இடம்­பெ­ற­வுள்­ளன.

ஓவி­யங்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, இல­வச புத்­த­கங்­கள், பிர­பல கவி­ஞர்­க­ளின் படைப்­பு­கள், மனித நூல­கம், கலை­ஞர்­க­ளுக்கு இடையிலான கலந்­து­ரை­யா­டல்­கள் ஆகி­ய­வற்றை பார்­வை­யா­ளர்­கள் எதிர்­பார்க்­க­லாம். தேசிய நூல­கக் கட்­ட­டத்­தின் ஒன்­ப­தா­வது தளத்­தில் நடை­பெ­றும் இக்­கண்­காட்­சிக்கு அனு­மதி இல­வசம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!