எழுத்தாளர் விழா தமிழ் நிகழ்ச்சிகள், கதைக்களம்

இன்று தொடங்­கும் சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வில் விரு­து­பெற்ற எழுத்­தா­ளர் சுனில் கிருஷ்­ணன், குற்­றப்­பு­னைவு எழுத்­தா­ளர் பட்­டுக்­கோட்டை பிர­பா­கர், தமி­ழ­கத்­தைச் சேர்ந்த கவி­ஞ­ரும் பாட­க­ரு­மான இசைக்­கவி இரம­ணன் ஆகி­யோர் கலந்­து­கொண்டு சிறப்­பிக்க உள்­ள­னர்.

இலக்­கிய கலா­சார விருது பெற்ற படைப்­பு­க­ளைக் கொண்­டா­டும் வகை­யில், 'தி ஆர்ட்ஸ் ஹவுஸ்' கட்­ட­டத்­தின் முதல் தளத்­தில் இம்­மா­தம் 13ஆம் தேதி­யன்று காலை 11 மணி முதல் நண்­ப­கல் 12 மணி­வரை இராம கண்­ண­பிரான் சார்­பில் சித்ரா ரமேஷ் வாசிக்க உள்­ளார். நிகழ்ச்­சிக்கு அனு­மதி இல­வ­சம்.

'வாச­கர் வட்­டம்' ஏற்­பாட்­டில் இம்­மா­தம் 13ஆம் தேதி­யன்று பிற்­பகல் 3 மணி முதல் 4.30 மணி­வரை ஆசிய நாக­ரிக அரும்­பொரு­ள­கத்­தின் 'டிஸ்­க­வரி' அறை­யில் 'வெகு ஜன இலக்­கி­ய­மும் தீவிர இலக்­கி­ய­மும்: இடை­வெளி­களை இணைக்­கும் பாலங்­கள்' என்ற குழு அமர்வு இடம்­பெ­றும்.

நிகழ்ச்­சி­யில் பட்­டுக்­கோட்டை பிர­பா­கர் மற்­றும் சுனில் கிருஷ்­ணன் பேச­வுள்­ள­னர். நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்ள விரும்­பு­வோர் $30 கட்­ட­ணத்­தில் விழா நுழைவு அனு­ம­தி­யைப் பெற­வேண்­டும்.

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் மூன்று நிகழ்ச்­சி­க­ளைப் படைக்­க­வுள்­ளது.

குற்­ற­வி­யல் எழுத்­தா­ளர் பட்­டுக்­கோட்டை பிர­பா­கர் நடத்­தும் குற்­ற­வி­யல் கதை எழு­தும் பயி­ல­ரங்கு, இம்­மா­தம் 12ஆம் தேதி­யன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடை­பெ­றும். இரண்­டா­வது நிகழ்வு பட்­டுக்­கோட்டை பிர­பா­க­ரு­டன் ஒரு நேர்­கா­ணல் ஆகும். 'புதி­யன கற்­று­ணர்' என்ற இந்த நிகழ்ச்சி, 13ஆம் தேதி­யன்று காலை 11 மணி முதல் பிற்­ப­கல் 12.30 வரை இடம்­பெ­றும். இரு நிகழ்வு­களும் விழா அனு­ம­தி­யு­டன் ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்­தில் நடை­பெ­றும்.

எழுத்­தா­ளர் கழ­கம் ஆண்­டு­தோறும் நடத்­தும் கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விழா­வை­யும் இவ்­வாண்டு எழுத்­தா­ளர் விழா­வு­டன் இணைந்து நடத்­த­வி­ருக்­கிறது. கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விழா­வில் இசைக்­கவி இர­ம­ணன் 'கவி­ய­ர­சின் பாடல்­களில் இலக்­கிய நயம்' என்­னும் தலைப்­பில் சிறப்­புரை ஆற்­ற­வுள்­ளார்.

இந்த நிகழ்வு தேசிய நூல­கக் கட்­ட­டத்­தின் நாடக நிலை­யத்­தில் இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று மாலை 5.30 மணி முதல் 9 மணி வரை நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விழா­வுக்கு அனு­மதி இல­வ­சம். இருப்­பி­னும் அரங்­குக்­குள் செல்ல, கட்­ட­ண­மில்லா நுழை­வுச்­சீட்­டு­கள் தேவை. அவற்றை விழா அன்று தேசிய நூல­கக் கட்­ட­டத்­தின் மூன்­றா­வது மாடி­யில் அரங்­கத்­தின் நுழை­வா­யி­லில் பெறலாம்.

கதைக்களத்தில் மாத்தளை சோமு

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் மாதாந்­தி­ரக் கதைக்­களத்­தில் ஆஸ்­தி­ரே­லிய எழுத்­தாளர் திரு மாத்­தளை சோமு 'எழுத்­தும் சிந்­த­னை­யும்' என்ற தலைப்­பில் சிறப்­புரை ஆற்­ற­வி­ருக்­கி­றார். கதைக்­க­ளம் நாளை மாலை 5.30 மணிக்கு சிங்­கப்­பூர் தேசிய நூல­கத்­தின் முதல் தளத்­தில் 'விபி­ஆர்' அறை­யில் நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

நிகழ்ச்­சி­யில் எழுத்­தா­ளர் திரு சிவக்­கு­மார் கே.பி­.யின் 'கொஞ்­சம் காபி...கொஞ்­சம் கதை­கள்...' என்ற சிறு­க­தைத் தொகுப்பு நூலின் அறி­மு­க­மும் இடம்­பெ­ற­வி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!