‘அர்ஜென்டினா அணி மாற்றப்படலாம்’

அபு­தாபி: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டிக்­கா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள அர்­ஜென்­டினா அணி­யில் மாற்­றங்­கள் இடம்­பெ­ற­லாம் என்று அதன் பயிற்­று­விப்­பா­ளர் லய­னல் ஸ்க­லோனி தெரி­வித்­துள்ளார்.

நட்­பு­முறை ஆட்­டத்­தில் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­களை 5-0 எனும் கோல் கணக்­கில் அர்­ஜென்­டினா வெற்றி கண்ட பிறகு ஸ்க­லோனி அவ்­வாறு சொன்­னார். அணி­யின் சில விளை­யாட்­டா­ளர்­கள் காய­முற்றிருப்­பது அதற்­குக் கார­ணம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் கிறிஸ்­டி­யன் ரொமேரோ, தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர்­கள் நிக்­க­லஸ் கோன்­ஸா­லஸ், அலெ­ஹாண்­டிரோ கோமெஸ், பாவ்லோ டைபாலா ஆகி­யோர் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் விளை­யா­ட­வில்லை. அவர்­கள் சற்று காய­முற்­றி­ருந்­த­தாக ஸ்கலோனி தெரி­வித்­தார்.

"எங்­க­ளுக்கு சில பிரச்­சி­னை­கள் உள்­ளன. முடி­வாக எந்த விளை­யாட்­டா­ளர்­களைத் தேர்ந்­தெ­டுப்­பது என்­பது குறித்து முடி­வெ­டுக்க இன்­னும் சில நாள்­கள் உள்­ளன. அணி­யில் மாற்­றங்­கள் இடம்­பெ­ற­லாம். மாற்றம் தேவைப்படாது என்­பது எங்­க­ளின் நம்­பிக்கை. ஆனால் அதற்­கான வாய்ப்பு உள்­ளது," என்று ஸ்க­லோனி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் சொன்­னார்.

உல­கக் காற்­பந்­தில் தலை­சி­றந்த நட்­சத்­தி­ரங்­களில் ஒரு­வ­ரா­கக் கரு­தப்­படும் அர்­ஜென்­டி­னா­வின் லய­னல் மெஸ்ஸி, உல­கக் கிண்­ணத்தை வெல்­லும் கடைசி முயற்­சி­யில் இறங்­கவுள்ளார்.

அர்­ஜென்­டி­னா­வின் பரம வைரி­களான பிரே­சி­லி­லும் சில விளை­யாட்­டா­ளர்­கள் காய­முற்­றி­ருக்­க­லாம் என்ற அச்­சம் நில­வி­யது. புருனோ குய்­மா­ரெஷ், அலெக்ஸ் டெலெஸ் ஆகி­யோர் பயிற்­சி­க­ளின்­போது சற்று காய­முற்­ற­னர். எனி­னும், டெலெஸ் பயிற்சி முடி­யும் வரை அதில் பங்­கேற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. எல்லா

அதே வேளையில், எல்லா ஆட்டங்களிலும் தன்னால் ஆட்டங்­களிலும் விளை­யா­ட­மு­டி­யுமா என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­யது என்று காய­மடைந்த பிறகு குண­ம­டைந்­து­வ­ரும் தென்­கொ­ரிய நட்­சத்­தி­ரம் சொன் ஹியோங் மின் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, மான்­செஸ்­டர் யுனை­டெட்டின் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ சர்ச்­சை­யில் சிக்­கி­யி­ருப்­பது தனது அணி­யின் கவ­னத்­தைப் பாதிக்­காது என்று போர்ச்­சு­கல் பயிற்­று­விப்­பா­ளர் ஃபெர்னாண்டோ சான்டோ்ஸ் குறிப்­பிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!