கம்பத்துக்கால உணர்வை ஊட்டும் நூலகம்

குடியிருப்பாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட அடுக்குமாடி வீட்டுக் கீழ்த்தள நூலகம்

ஒரு சமூ­க­மாக ஒரு­வ­ருக்கு ஒரு­வர் உத­வும் கம்­பத்து மனப்­பான்மை சிங்­கப்­பூ­ரில் குறைந்­து­கொண்டே செல்­கிறது. இந்­நி­லை­யில் சமூக ஒருங்­கி­ணைப்பை வலி­யு­றுத்­தும் வகை­யில் புளோக் 2 ஹாலண்ட் அவென்­யூ­வில் உள்ள அடுக்­கு­மாடி கீழ்த் தளத்­தில் ‘ஹ்வி லிட்­டில் நூல­கம்’ என்ற நூல­கம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆகஸ்ட் மாதத்­தில் ஒரே ஒரு நூல் பேழை­யு­டன் ஆரம்­பித்த இந்த நூல­கம், இப்­போது பல மொழி­களில் பல வகை­யான நூல்­களைக் கொண்­டுள்­ளது.

அடுக்­கு­மாடி கீழ்த் தளம் வெறிச்­சோ­டிக்­கி­டந்த நிலையைக் கண்ட 67 வயது திரு­மதி வாங் கை சீ, தன் அண்டை வீட்­டுக்­கா­ரர்­க­ளு­டன் சேர்ந்து இந்த நூல­கத்­தைத் தொடங்­கி­யுள்­ளார்.

சிறு வய­திலே சிங்­கப்­பூ­ருக்கு வந்த அவர், ஆங்­கி­லம் தெரி­யா­மல் மிக­வும் சிர­மப்­பட்­டார்.

நூல­கத்­தில் நேரம் செல­வ­ழித்­ததால்­தான் தனது மொழி­வ­ளம் மேம்­பட்­டது என்­ப­தைப் பகிர்ந்­து­கொண்­டார்.

ஆகை­யால், மற்­ற­வர்­க­ளுக்கு எளி­தில் எட்­டும் வகை­யில் வீட்­டிற்­குக் கீழேயே நூல­கம் ஒன்றை ஆரம்­பிக்க வேண்­டும் என்ற ஆசை இவர் உள்­ளத்­தில் துளிர்­விட்­டது.

குழந்­தை­கள், முதி­ய­வர்­கள் என்று பாகு­பா­டின்றி எல்­லோ­ரும் இந்த வச­தி­களைப் பயன்­ப­டுத்­த­லாம்.

அண்­மை­யில், இசைக்­க­ரு­வி­களும் இந்த நூல­கத்­திற்கு நன்­கொ­டை­யாக கொடுக்­கப்­பட்­டன. மாண­வர்­கள் படிக்க, அங்கு மேசை­களும், சொகுசு நாற்­கா­லி­களும் போடப்­பட்­டன.

ஹ்வி நூல­கத்­தில் உள்ள எல்லா வச­தி­களும் நூல்­களும் பல­ரால் அன்­ப­ளிப்­பாக கொடுக்­கப்­பட்­டது. 24 மணி நேர­மும் திறந்­தி­ருக்­கும் இந்த நூல­கம் ஒரு சிறிய உணவு தயா­ரிக்­கும் அறை­யை­யும் கழி­வ­றை­யை­யும் கொண்­டுள்­ளது. எந்த நேரத்­தில் வேண்­டு­மா­னா­லும் அங்கு இருக்­கும் இல­வச உண­வுப் பொருள்­க­ளைச் சாப்­பி­ட­லாம்.

இந்த நூல­கத்தை ஆரம்­பிக்­கும் கனவை நிஜ­மாக்­கி­யது மக்­க­ளின் ஆத­ர­வும் அன்­பும் என்று பெரு­மை­யு­டன் கூறி­னார் முன்­னாள் இசைக்­க­லை­ஞர் திரு­மதி வாங்.

“கேட்­கா­மலே இந்­தப் பொருள்கள் நம்மை வந்து அடை­யும்­போது இந்த கம்­பத்து உணர்வு சிங்­கப்­பூ­ரில் இன்­னும் உள்­ளது என்று நினைத்து மகிழ்­கி­றேன்,” என்று கூறி­னார் திரு­மதி வாங்.

இந்த நூல­கத்தை ஆரம்­பிக்க அங்கு இருந்த மக்­கள் மிக­வும் சிர­மப்­பட்­டார்­கள். அர­சாங்­கம், குடி­யி­ருப்­புக் குழுக்­க­ளின் ஆத­ரவு இல்­லா­மல் இந்த வச­தியை ஏற்­ப­டுத்த முடி­யாது என்று அவர்­கள் நினைத்து மனம் தள­ர­வில்லை. அவர்­க­ளுக்­குத் தெரிந்­த­வர்­களை நாடி இந்­தத் திட்­டத்தை செயல்­படுத்­தத் தொடங்­கி­னர்.

இத்­து­டன், மழை வரும் நேரத்­தில் நீர் பெருகி நூல்­களை சேதப்­படுத்­து­வதை நினைத்து வருந்­து­கிறார் அங்கு வசிக்­கும் திரு­மதி ஜாய்ஸ். இதை தவிர்க்க திரைச் சீலை­கள் பொருத்த அவர்­கள் ஒன்று­சேர்ந்து நிதி திரட்­டி­னர். அடுத்த ஆண்டு இன்­னும் வச­தி­களை மேம்­ப­டுத்த நிதி திரட்ட ஆரம்­பிப்­பார்­கள்.

அங்கு வசிக்­கும் முதி­யோர்­கள் செய்­தித்­தாள்­கள், நூல்­கள் படித்து மகி­ழ­லாம்.

நான்கு சுவர்­க­ளுக்­குள் வீட்­டி­லேயே அடைந்துகிடக்­கத் தேவை­யில்லை என்­றார் அங்கு வசிக்­கும் திரு முஹம்­மத். இதில், தாத்தா பாட்­டி­கள் தங்­க­ளின் பேரப்­பிள்­ளை­க­ளு­டன் நூல்­க­ளைப் படித்து விளை­யாட்­டு­களை விளை­யா­ட­வும் ஓர் இடம் அமைக்­கப்­பட்­டுள்­ளதை நினைத்து மகிழ்­கி­றார் இரண்டு பேரப்­பிள்­ளை­க­ளுக்­கான பாட்டி திரு­மதி லத்­திஃபா.

அண்டை வீட்­டுக்­கா­ரர் யார் என்று தெரி­யாத திரு கிரன், இந்த நூல­கம் மூலம் அவ­ரும் அவ­ரின் குடும்­பத்­தா­ரும் இப்போது பல நண்­பர்­களைப் பெற்றுள்ளனர்.

நம்­மைச் சுற்றி அழகு இருந்­தால்­தான் நம் வாழ்க்­கை­யும் அழ­காக காட்­சி­ய­ளிக்­கும் என்று நம்­பு­கி­றார் திரு­மதி வாங். அத­னால் இந்த நூல­கத்தை அவர்­கள் மிக­வும் அழ­கா­க­வும் சுத்­த­மா­க­வும் பரா­ம­ரித்து வரு­கி­றார்­கள்.

விழாக் காலங்களில் விழாக்களுக்கு ஏற்ப அவ்­வி­டம் அலங்­க­ரிக்­கப்­படும். அவ்­வாறு அலங்­க­ரிக்­கப்­படும் பொருள்­கள் யாவும் மக்­க­ளால் அன்­ப­ளிப்­பா­கக் கொடுக்­கப்­பட்­டவை.

மக்­க­ளின் அன்­புக்குத் தடை இல்லை என்ற அவர், டேபிள் டென்­னிஸ் போன்ற விளை­யாட்­டு­களை சொல்­லிக் கொடுக்­க­வும் சிலர் முன்­வந்­துள்­ள­னர்.

அங்கு வசிப்­ப­வர்­கள் மட்­டு­மல்­லா­மல் மற்ற குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் வாழ்­ப­வர்­களும் இங்கு வந்து நூல்­க­ளைப் படிப்­ப­தோடு பியா­னோ­வை­யும் வாசித்து மகிழ்­கி­றார்­கள்.

நேரம் கிடைக்­கும்­போது பங்­­ளா­தேஷ் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இங்கு வந்து பொழு­தைக் கழிப்­பர்.

புத்­தாண்டுக் காலத்­தில் ஹாலண்­டில் புளோக் 2 இல் வசிப்­ப­வர்­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வீட்­டிற்கு அழைத்­துச் சென்று அவர்­க­ளுக்கு விருந்­த­ளித்து மகிழ்­வர்.

மேலும் பல குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் இது­போன்ற நூல­கத்தை உரு­வாக்க வேண்­டும் என்று அங்­குள்ள மக்­கள் விரும்­பு­கி­றார்­கள். அங்­குள்ளவர்கள் சலிப்புத் தட்­டா­மல் முகத்­தில் புன்­ன­கை­யோடு இருக்க இந்த நூல­கம் ஒரு பெரிய பங்கை ஆற்­றி­யுள்­ளது. கம்­பம் மனப்­பான்மை நம் தாத்தா பாட்டி காலத்­து­டன் முடிந்து­போய்­வி­டக் கூடாது என்ற குறிக்­கோ­ளு­டன் திருவாட்டி வாங்­கும் அவ­ரின் அண்டை வீட்­டுக்­கா­ரர்­களும் இருக்­கி­றார்­கள்.

 

 

ரச்சனா வேலாயுதம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!