ஆய்வு: பூமியின் உள்மையம் எதிர்த்திசையில் சுழல்கிறது

இடை­ய­றாத மாற்­றங்­க­ளுக்கு உள்­ளா­கும் இயற்கை அவ்­வப்­போது மனி­தனை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தத் தவ­று­வதே இல்லை. அண்­மைய ஆய்­வில் அத்­த­கைய மாற்­றம் ஒன்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

பூமி­யின் உள்­மை­யம் தனது சுழற்­சியை நிறுத்தி, பின்­னர் எதிர்த்­தி­சை­யில் சுழ­லத் தொடங்­கி­யி­ருப்­ப­தா­கக் கூறு­கின்­ற­னர் ஆய்­வா­ளர்­கள்.

நாம் வாழும் மேற்­ப­ரப்­பில் இருந்து கிட்­டத்­தட்ட 5,000 கிலோ­மீட்­டர் கீழே அமைந்­தி­ருக்­கிறது பூமிப்­பந்­தின் உள்­மை­யம். மிக அதிக வெப்ப நிலை­யில் உள்ள ஓர் இரும்­புப் பந்­து­போன்ற இது, கிட்­டத்­தட்ட புளூட்டோ கோளின் அள­வைக் கொண்­டது.

இதன் சுழற்சி குறித்து அறி­வி­ய­லா­ளர்­க­ளி­டையே வேறு­பட்ட கருத்­து­கள் நில­வு­கின்­றன.

அண்­மைய ஆய்வு, கடந்த 60 ஆண்­டு­க­ளாக நிகழ்ந்த நில நடுக்­கங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

சீனா­வின் பெக்­கிங் பல்­கலைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் நடத்­திய இந்த ஆய்­வின் முடிவு ‘நேச்­சர் ஜியோ­சயின்ஸ்’ சஞ்­சி­கை­யில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதில், பூமி­யின் உள்­மை­யம் அதன் சுழற்­சியை 2009ஆம் ஆண்டு கிட்­டத்­தட்ட நிறுத்தி, பின்­னர் எதிர்த்­தி­சை­யில் சுழ­லத் தொடங்­கி­ய­தைக் கண்­ட­றிந்­த­தாக ஆய்­வா­ளர்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

பூமி­யின் உள்­மை­யம் புவி­யின் மேற்­ப­ரப்­பு­டன் ஒப்­பி­டு­கை­யில் முன்­னும் பின்­னு­மாக ஓர் ஊஞ்­ச­லைப்­போல் சுழல்­வ­தாக ஆய்­வா­ளர்­கள் ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­த­னர்.

இவ்­வாறு ஒரு­முறை சுழல ஏறக்­கு­றைய 70 ஆண்­டு­கள் பிடிக்­கும். ஆக, ஒவ்­வொரு 35 ஆண்­டுக்கு ஒரு­முறை பூமி­யின் உள்­மை­யம் எதிர்த்­தி­சை­யில் சுழ­லத் தொடங்கும்.

இதற்கு முன்­னர் 1970களின் தொடக்­கத்­தில் இவ்­வாறு திசை மாறிச் சுழன்­ற­தா­கக் கூறும் இவர்­கள், அடுத்து 2040களின் மத்­தி­யில் மீண்­டும் இந்த திசை மாற்­றம் நிக­ழும் என்று முன்­னு­ரைத்­துள்­ள­னர்.

இத்­த­கைய திசை மாற்­றத்­துக்­கும் பூமி தன் அச்­சில் ஒரு­முறை சுழல்­வ­தற்­கான நேரத்­துக்­கும் தொடர்பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதா­வது நமது ஒரு நாளின் நீளம் எவ்­வ­ளவு என்­பது இத­னால் மாறு­படும்.

இதுவரை பூமியின் உள்மையம் அதன் மேற்பரப்பில் வாழும் நம்மை எவ்வாறு பாதிக்கின்றது என்பது குறித்து அதிகமான தகவல்கள் இல்லை.

அண்­மைய ஆய்­வில் பூமி­யின் உள்­மை­யம் முதல் மேற்­ப­ரப்­பு­வரை அனைத்து அடுக்­கு­களும் ஒன்­றோ­டொன்று தொடர்பு கொண்­டி­ருப்­பது தெரி­ய­வந்­த­தா­கக் கூறு­கின்­ற­னர் ஆய்­வா­ளர்­கள். தங்­கள் ஆய்வு இதன் தொடர்­பில் மேலும் பலர் ஆய்­வு­செய்ய உந்­து­த­லாக இருக்­கும் என்று இவர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர். ஆனால் புவி­இ­யற்­பி­யல் துறை சார்ந்­தோர் இது­கு­றித்து ஒரு­ம­ன­தாக எந்த முடி­வுக்­கும் இன்­னும் வர­வில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!