சாதனங்களில் மூழ்குவதைக் குறைப்போம்

அனுஷா செல்­வ­மணி

வேக­மாக நகர்ந்­து­கொண்­டி­ருக்­கும் இந்­தப் பர­ப­ரப்­பான வாழ்க்­கைச் சூழ­லில், நாம் தொழில்­நுட்­பத்­தையே அதி­கம் சார்ந்­துள்­ளோம். அத்­து­டன் கொரோனா நெருக்­கடி நம் வாழ்க்கை முறை­யில் பெரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ்­வ­கை­யில், வீட்­டில் இருந்­த­வாறு வேலை செய்­வது, கல்வி கற்­பது, இணை­யம் வழி பொருள்­களை வாங்­கு­வது என மின்­னணுச் சாத­னங்­க­ளின் பயன்­பாடு பெரும் அளவு அதி­க­ரித்­துள்­ளது. இது­போன்ற அத்­தி­யா­வ­சிய பயன்­பா­டு­களை நம்­மால் தவிர்க்க முடி­யாது.

ஆனால், சாலை­யில் நடக்­கும்­போ­தும் பொதுப் போக்­கு­வ­ரத்­து­களில் பய­ணம் செய்­யும்­போ­தும் திறன்­பே­சி­களில் மூழ்­கி­ய­வாறு இருக்­கும் பலரை நாம் பார்க்­கி­றோம்.

வேலை, கல்வி, குடும்­பம், நட்பு வட்­டா­ரம் என பல கார­ணங்­க­ளுக்காக மின்­னணுச் சாத­னங்­களைப் பயன்­ப­டுத்­து­கி­றோம். ஒரு கட்­டத்­தில் அச்­சா­த­னங்­கள் நம்­மைக் கட்­டுப்­ப­டுத்­தும் நிலைமை வந்­து­வி­டு­கிறது.

அதன் பின்­வி­ளை­வு­களை எதிர்­நோக்க நாம் தயா­ராக உள்­ளோமா என்­பது ஒரு கேள்­விக்­கு­றி­யா­கத்­தான் இருக்­கிறது.

மின்­னணுச் சாத­னப் பயன்­பாட்­டைக் குறைத்­துக்கொள்­வது குறித்து பல­ரி­டம் விழிப்­பு­ணர்வு வரத் தொடங்­கி­யுள்­ளது.

அண்­மைய கால­மா­கப் பலர் ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ எனும் பழக்­கத்தை மேற்­கொள்­கி­றார்­கள் என்று கருத்­துக்­க­ணிப்­பில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

உண­வுப் பழக்­க­மு­றை­யில் ‘டீடாக்ஸ்’ பின்­பற்றி உடல் ஆரோக்­கி­யத்தை வலுப்­ப­டுத்த உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொள்­வது என பல­வற்­றை­யும் கடந்து, இப்­போது, மின்­னணுச் சாத­னங்­களில் இருந்து குறு­கிய நேரம் நம்மை விடு­வித்­துக்­கொள்­வ­தற்கு ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ முறை கடை­ப்பி­டிக்­கப்­பட்டு வரு­கிறது.

அமெ­ரிக்­கா­வின் தனி­யார் நிறு­வ­ன­மான ‘ஸ்டேட்­டிஸ்டா’வின் ஆய்­வுப் பிரிவு, கடந்த ஆண்டு நடத்­திய கணக்­கெ­டுப்­பின்­படி, அமெ­ரிக்­கா­வில் இணை­யத்­த­ளம், மின்­னி­யல் சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோ­ரில் 32 விழுக்­காட்­டி­னர், அவற்­றில் இருந்து தங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக விடு­வித்­துக்­கொள்ள அன்­றா­டம் இரண்டு மணி நேரம் இடை­வேளை எடுத்­துக்­கொள்­ளும் ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ பழக்­கத்தை வழக்­க­மாக்­கிக் கொண்­டுள்­ள­னர்.

ஒரு­நாள் முழு­வ­தும் இது­போன்று ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ செய்ய இய­லா­விட்­டா­லும், சில மணி நேரங்­கள், தொழில்­நுட்­பச் சாத­னங்­க­ளைச் சார்ந்­தி­ருப்­ப­தில் இருந்து தங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக விடு­வித்­துக்கொள்­ள­லாம். எவ்­வ­ளவு நேரம் இடை­வேளை எடுத்­துக்­கொள்­வது என்­பது அவ­ர­வர் விருப்­பம்.

ஒரு முழு நாளி­லி­ருந்து, ஒரு மாதம் முழு­மை­யாக ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ செய்­ப­வர்­களும் இருக்­கி­றார்­கள்.

திறன்­பேசி, தொழில்­நுட்­பச் சாதனங்கள் ஆகி­ய­வற்­றைப் பயன்­படுத்­தா­மல் இடை­வேளை எடுத்­துக்­கொண்டு ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ செய்­து­கொள்ளலாம்.

அவ்­வாறு, திறன்­பே­சியை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­தா­மல் இருக்­க­மு­டி­யாத ஒரு சூழ­லில், சமூக ஊட­கத்­தைத் திறந்­து­பார்க்­கா­மல் ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ செய்து­கொள்­ள­லாம்.

இதன்­மூ­லம் நமக்­குக் கிடைக்­கும் பயன்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டுக்­கொண்டே போக­லாம்.

‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ மூலம் நாம் மின்­னி­யல் சாத­னங்­களை எவ்­வ­ளவு சார்ந்­துள்­ளோம், அத­னால் எவ்­வாறு பாதிக்­கப்­ப­டு­கிறோம் என்­பதை அறிந்­து­கொள்­வ­தோடு உண­ர­வும் முடி­யும் என்­கின்­ற­னர் ஆய்­வா­ளர்­கள்.

மின்­னி­யல் சாத­னங்­கள் இல்­லாத பட்­சத்­தில், நம்­மைச் சுற்றி இருப்­போ­ரு­டன் மகிழ்ச்­சி­யு­டன் உரை­யா­டு­வ­தற்கு நேரம் கிடைக்­கிறது.

குடும்­பத்­தி­ன­ரோடு பய­னுள்ள வழி­யில் நேரத்­தைச் செல­வி­ட­லாம். வேலை­யி­லும் படிப்­பி­லும் கவ­னச்­சி­த­றல் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் குறை­யும். நண்­பர்­க­ளி­டை­யே­யும் குடும்­பத்­தி­ன­ரி­டை­யே­யும் உறவு மேம்­படும்.

நாம் கவ­னச் சித­ற­லில் சிக்­கிக்­கொள்ள மாட்­டோம். நம்­மைச் சுற்றி என்ன நடக்­கிறது என்­பதை உட­னுக்­கு­டன் கவ­னித்து சரி­யான முடி­வெ­டுக்க முடி­யும்.

அனைத்­திற்­கும் மேலாக மன உளைச்­சல் வெகு­வாக குறைய ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ வழி­வ­குக்­கின்­றது.

மின்­னி­யல் சாத­னங்­க­ளின் மூலம் பல­வற்­றைப் பார்த்து, நம் வாழ்க்­கைக்­குத் தொடர்­பு­ப­டுத்­திக்­கொள்­வ­தால், ஒரு­வர் அனா­வ­சி­ய­மாக தன்­னு­டைய மனதை அழுத்­தத்­திற்கு இட்­டுச் செல்­கி­றார்.

தொழில்­நுட்­பச் சாத­னங்­களை நம் அன்­றாட நட­வ­டிக்­கை­யில் இருந்து தற்­கா­லி­க­மாக அகற்­று­வ­தால், மன அமைதி பெறு­கி­றோம். புதி­தாக ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ செய்ய விரும்­பு­வோ­ருக்கு இது ஒரு பெரிய புதிர் அல்ல. அதற்கு நாம் முத­லில் தொழில்­நுட்­பச் சாத­னங்­களை எவ்­வ­ளவு தூரம் சார்ந்­துள்­ளோம் என்­பதை கண்­ட­றி­ய­வேண்­டும்.

ஒரு நாளைக்கு, ஒரு மாதத்­திற்கு அல்­லது ஒரு வாரத்­திற்கு எவ்­வ­ளவு நேரம், எவ்­வ­ளவு நாள்­கள் நாம் தொழில்­நுட்­பச் சாத­னங்­களில் இருந்து நம்மை தற்­கா­லி­க­மாக விடு­வித்­துக்­கொள்­ளப் போகி­றோம் என்­ப­தைத் தீர்­மா­னித்த பிறகு, ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ முறை­யைப் பின்­பற்­ற­வேண்­டும்.

சில முறை ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ செய்­த­பின், நாம் எவ்­வ­ளவு தூரம் முன்­னேற்­றம் கண்­டுள்­ளோம் என்­ப­தை­யும் கவ­னித்­துக் கொள்ள­வேண்­டும்.

நல்ல முன்­னேற்­றம் கண்­டால், நீண்ட காலத்­திற்கு அதை மேற்­கொள்ள திட்­ட­வட்­ட­மாக யோசிக்­கத் தொடங்­க­லாம்.

மின்­னி­யல் சாத­னங்­களில் இருந்து தங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக விடு­வித்­துக்­கொள்­ளும் ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ முறையைக் கடைப்­பி­டிக்­கத் தொடங்­கி­யுள்­ள­தாக பலர் தெரி­வித்­துள்­ள­னர். இருப்­பி­னும் சிலர், அது எங்­க­ளால் முடி­யவே முடி­யாது என்­றும் கூறு­கின்­ற­னர்.

‘ஹவுஸ் ஆஃப் சமோ­சாஸ்’ என்­னும் கடையை தன்­னு­டைய குடும்­பத்­தோடு நடத்தி வரும் குமாரி நஜீரா ரோஸ்னி, 28, சில நாள்­க­ளுக்கு முன்­பி­லி­ருந்து ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ செய்­யத் தொடங்­கி­விட்­டார். இதைப் பற்றி கேள்­விப்­பட்­டி­ருந்த அவர், இந்த ஆண்­டி­லி­ருந்து இதில் முழு­வீச்­சில் இறங்­கி­யுள்­ளார்.

அன்­றா­டம் சமூக ஊட­கத் தளங்­களில் நேரத்­தைச் செல­விடு­வது, நண்­பர்­க­ளோடு அதில் உரை­யா­டு­வது என அவர் நேரத்­தைச் செல­விட்டு வந்­தார்.

வியா­பா­ரத்­தை­யும் பார்த்­துக்­கொண்டு, சமூக ஊட­கத்­தி­லும் அதிக நேரத்­தைச் செல­விட்ட அவர், ஒரு கட்­டத்­தில் சோர்ந்து போனார்.

தற்­போது வாரத்­திற்கு ஒரு நாள் ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ செய்­யும் இவர், அதிக நேரம் தூங்­கு­வ­தா­க­வும், மிகுந்த புத்­து­ணர்ச்­சி­யு­டன் இருப்­ப­தா­க­வும் நம்­மி­டம் பகிர்ந்­து­கொண்­டார்.

நான்கு வயது மக­னுக்­குத் தாயாக இருக்­கும் 32 வயது சுவாதி பன்­னீர்­செல்­வம், இந்­தி­யா­வி­லி­ருந்து வந்து சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரிந்து கொண்­டி­ருக்­கி­றார்.

வேலை முடிந்து வீட்­டுக்கு வந்து, வீட்டு வேலை­க­ளைப் பார்க்­க­வும், முக்­கி­ய­மாக தன் மகனைக் கவ­னித்­துக்­கொள்­ள­வும் தன்­னு­டைய நேரம் முழு­வ­தும் சென்று விடு­கிறது என்று பகிர்ந்து­கொண்­டார்.

சமூக ஊட­கத்தை அதி­கம் பயன்­ப­டுத்­தும் இவர், ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ மேற்­கொள்­வ­தால் இந்­தி­யா­வி­லி­ருக்­கும் தன்­னு­டைய குடும்­பம், நண்­பர்­கள் மற்­றும் உற­வி­னர் ஆகி­யோ­ரு­டன் தொடர்பு வைத்­துக்­கொள்ள முடி­யாது என்ற அவர், அதை மேற்­கொள்ள விரும்­ப­வில்லை என்று கூறி­னார்.

தன்­னு­டைய வேலை கார­ணங்­க­ளால் அடிக்­கடி வெளி­நாட்­டுப் பய­ணங்­களை மேற்­கொள்­ளும் பொறி­யி­ய­லா­ளர் ராகேஷ், 26, ‘டிஜிட்­டல் டீடாக்ஸ்’ தனது வழக்­கத்­துக்­குப் பொருந்­தாது என்­கி­றார்.

இவர் ஒரு நாட்­டி­லும், குடும்­பத்­தி­னர், வருங்­கால மனைவி ஆகி­யோர் மற்­றொரு நாட்­டி­லும் இருப்­ப­தால், இவர் அன்­றா­டம் திறன்­பேசி பயன்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யம் உள்­ளது. இருந்­தா­லும் சில சம­யங்­களில் சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வதை வாரத்­திற்கு ஒன்று அல்­லது இரண்டு நாள்கள் நிறுத்­தும் முயற்­சி­யில் இறங்­கப் போவ­தா­கக் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!