மரமாகி...

மரமாகி...

1 mins read

எங்கெங்கோ பறக்கும் பறவையாய்

நீ பறந்துகொண்டிருக்கிறாய்.

ஏதாவதோர் அந்திவேளையிலாவது

என் கிளையில் அடைய வருவாயாவென

ஏக்கத்தளிர் துளிர்த்த மரமாகி

நான் நின்று கொண்டிருக்கிறேன் என் அன்பே!

- தேன்மொழி அசோக்