அழகு

அழகு

1 mins read

- தென்மாப்பட்டு அ.ராஜா

மழைக் குளியல் முடித்து

கிளை இலை தழை உலர்த்தி

மண் மணம் வீசும் காற்றில்

மகிழ்ச்சியாய் தலையசைத்து

பறவைகள் வந்து அமர்ந்து..

பல குரல் பாட்டு இசைக்க...

நிற்பதே அழகுதான் என்று..

நிழல் தந்து நிலைத்து நிற்கும்!

பசுமையை பறைசாற்றி...

பார்க்கும் கண்களுக்கு...

பெரும் அழகு கூட்டும் - இந்த

மரங்கள் மண்ணின் வரங்கள்!