மலேசியாவில் 3,333 பேர் கிருமியால் பாதிப்பு

கோலாலம்பூர்: மலே­சி­ய நாட்டில் நேற்று மட்­டும் 217 புதிய கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் இடம்பெற்­ற­தாக தெரி விக்கப்­பட்­டுள்­ளது.

இதை­யும் சேர்த்து அந்­நாட்­டில் இந்த கொடிய நோய்க் கிருமி தொற்­றி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை 3,333ஆக உயர்ந்­துள்­ளது.

அத்­து­டன், ஒரே நாளில் மேலும் மூன்று பேர் இறந்து மரண எண்­ணிக்­கை­யும் 53ஆக உயர்ந்­துள்­ள­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­துள்­ளார்.

மேலும், கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான 60 பேர் சிகிச்­சை­யில் குண­ம­டைந்து வீடு திரும்பி­ விட்­ட­தா­க­வும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்­படி, மலே­சி­யா­வில் இந்த நோயி­லி­ருந்து குண­ம­டைந்­த­வர்­கள் விகி­தம் 24.8% என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மற்­ற­படி, இந்­தக் கிரு­மித்ெ­தாற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 108 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருப்­ப­தா­க­வும் இவர்­களில் 54 பேருக்கு உயிர்க்­காப்புக் கரு­வி­யின் உதவி தேவைப்­ப­டு­வ­தா­க­வும் அவர் விளக்­கி­னார்.

இந்­நி­லை­யில், நாட்­டில் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் புனித ரம­லான் மாதத்­துக்­கும் நீட்டிக்­கப்­ப­டு­மா­னால் ரம­லான் சந்­தை­கள் நடத்த அனு­ம­திக்­கப்­பட மாட்­டாது என்று மலே­சி­யா­வின் மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார்.

மலே­சி­யா­வில் தற்­பொ­ழுது அம­லில் உள்ள நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை 17வது நாளாக நீடிக்­கிறது. இது நீட்­டிக்­கப்­ப­டுமா என்­பது குறித்து இன்­னும் எந்த முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெளி­வு­ப­டுத்­தி­னர்.

தற்­போ­தைய நிலையில் மலே­சி­யா­வின் நட­மாட்­டக் கட்­டு­பாட்டு ஆணை இம்­மா­தம் 14ஆம் தேதி­வரை நடப்­பி­லி­ருக்­கும்.

அங்கு புனித நோன்பு மாதத்­தில் முஸ்­லிம்­கள் நோன்பு துறக்­கும் நேரத்­தில் உணவு உண்ண ஏது­வாக ரம­லான் மாத சந்­தை­கள் நடத்­தப்­ப­டு­வது வழக்­கம்.

இது குறித்­துப் பேசிய டாக்­டர் இஸ்­மா­யில், “நட­மாட்­டக் கட்­டு­பாடு ஆணை அம­லில் இருக்­கும்­வரை ரம­லான் சந்­தை­க­களை நடத்­து­வ­தில்லை என்ற முடி­வுக்கு வந்­துள்­ளோம்,” என்றார்.

“அதன்­பின்­னர், அந்த ஆணை நீடிக்­கப்­ப­ட­வில்லை என்­றால், தேசிய பாது­காப்பு மன்­றம் மக்­கள் கடைப்­பி­டிக்க வேண்டிய நடை­முறை அறிக்கை வெளி­யி­டப்­படும்.

“இது ரம­லான் மாத சந்­தை­கள் இருக்­குமா என்­ப­தைத் தெளி­வு­ப­டுத்­தும்,” என்றும் டாக்­டர் இஸ்­மா­யில் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!