தொலைபேசியில் கதை விவாதம்: வெறுக்கும் பாரதிராஜா

சினிமாவில் எழுத்தாளர்களை இழந்துவிட்டோம் என்று திரையுலக விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார். தற்போது விஞ்ஞானம் பெரிய ளவில் வளர்ந்துவிட்டதாகவும் அவர் கூறி உள்ளார். "திருட்டு விசிடியால் சினிமா அழிந்து கொண்டிருக்கிறது என்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். விஞ்ஞானம் பெரிய ளவில் வளர்ந்து விட்டது. ஒரு காலத்தில் தொலைக் காட்சி வந்தவுடன் அய்யோ சினிமா கெட்டுப்போய்விடும் என்றார்கள். என்ன சினிமா கெட்டுப்போய்விட்டதா? "திருட்டு டிவிடி வந்தாலும் சினிமா வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இப்போது சினிமா வீட்டுக்கு வீடு வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் முளைத்து ஜெயிக்க வேண்டும் அவ்வளவுதான். எங்கள் காலத்தில் கொஞ்சம் பேர் இருந்தோம். அப்போது பாடகர்கள் கம்மியாக இருந்தார்கள். இப்போது ஒரு பாடலை யார் பாடுகிறார் என்பதே தெரியவில்லை. இப்போது நான் இயக்கும் படத்தில் ஒரு பாடலை யார் பாடினார் என்று கேட்டால் எனக்கே தெரியாது. "சினிமாவில் நல்ல எழுத்தாளர் களை இழந்துவிட்டோம். எழுத் தாளர்கள் சினிமாவில் ஒரு சாதி. ஒரு கணவன், மனைவி இணைந்து பிள்ளை பெறுவதுதான் நியாயம். ஒரு விஷயத்தில் இளம் இயக்குநர்கள் மிகவும் திறமையானவர்கள். "தொலைபேசியிலேயே தொடர்பு கொண்டு கதை விவாதம் செய்கி றார்கள். எல்லாவற்றையும் கைபேசியி லேயே பேசி முடித்துவிடுகிறார்கள். என்ன சினிமா இது?

"இந்த விஷயத்தை மட்டும் நான் வெறுக்கிறேன். பழைய அழகு போய் விட்டது. அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசி படம் பண்ண வேண்டும். எங்கள் காலங்களில் சினிமா ஓர் அற்புதமான விஷயம். அந்த அழகு இப்போது உள்ளதா எனத் தெரியவில்லை. "அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வரும்போது, திரையுலக வாரிசுகள் திரையுலகிற்குத் தாராளமாக வரலாம். அவர்களை நாம் உற்சாகப் படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களாலும் பெரிய அளவில் திரையுலகில் சாதிக்க முடியும்," என்றார் பாரதிராஜா.

'என்றும் தணியும்' பட நிகழ்ச்சியில் பாரதிராஜா, படக்குழுவினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!