போலி மருந்து விற்ற இரு கடைகள்

கிளாக்ஸே„ஸ்மித்கிளைன் நிறுவனத் தயாரிப்பான 'ஐ மோ ரெகுலர்', 'ஐ மோ மாய்ஸ்ட்' ஆகிய கண் சொட்டு மருந்துகளின் போலிகள் இரு கடைகளில் விற்கப்பட்டதைச் சுகாதார அறிவியல் ஆணையம் கண்டுபிடித்தது. 7.5 மி.லி. அளவில் அந்தப் புட்டிகள் இருந்தன என்றும் சிங்கப்பூரில் இத்தகைய சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை என்றும் ஆணையம் தெரிவித்தது. 36, சாய் சீ அவென்யூவில் உள்ள எஸ்கிமோ ஃப்ரோஸன் ஃபுட்ஸ், 150A, பீஷான் ஸ்திரீட் 11ல் உள்ள ஹெச்.ஜே. வென்ச்சர்ஸ் ஆகிய இரு கடைகளிலும் அந்தப் போலி கண் மருந்து விற்கப்பட்டதாக ஆணையம் கூறியது. குறைந்த தரத்திலான அந்த மருந்துகளை யாரேனும் வாங்கியிருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடுமாறும் ஆணையம் அறிவுறுத்தியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!