தேர்தல் விதிமுறைகள் மீறல்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாக திமுக பொருளா ளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விதிமுறைகளை மீறுபவர் கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை அணுகப் போவதாக எச்சரித்தார். "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அந்த நிமிடத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ஆனால் ஆளும் கட்சியினர் தேர்தல் விதிமுறை களை மீறிச் செயல்படுகின்றனர்.

"இதுபற்றி திமுக வழக்கறி ஞர்கள் பிரிவு தேர்தல் ஆணை யத்திடம் முறையாக புகார்களை தெரிவித்து வருகிறது. அதிலும், பலன் கிடைக்கவில்லை என்றால் திமுக தரப்பில் நீதிமன்றத்தின் உதவியை நாட நேரிடும்," என்றார் ஸ்டாலின். தற்போது திமுக வேட்பாளர்க ளுக்கான நேர்காணல் நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அப்பணி முடிந்த பின்னர் திமுக வின் தேர்தல் அறிக்கை வெளி யிடப்படும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!