கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ், இனி இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டின் அதிகாரபூர்வ வர்த்தக விமானப் பங்காளி நிறுவனமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் யுனைடெட்டிற்கு 1.1 பில்லியன் ரசிகர்களும் கவனிப்பாளர்களும் உள்ளனர். இந்த அம்சத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் நோக்குடன் மலேசிய ஏர்லைன்ஸ் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஒப்பந்தத்தில் மலேசிய ஏர்லைன்சும் யுனைடெட்டும் கையெழுத்திட்டுள்ளன.
உலகின் ஆகப் பெரிய அமைப்புகளில் இரண்டு, ஒன்றாகச் செயல்படப்போவதாக மலேசிய விமானக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் இஷாம் இஸ்மாயில் கூறினார். இந்த அறிவிப்பை வழங்குவதற்கான நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
இந்த ஏற்பாடு, யுனைடெட்டின் ரசிகர்களுக்கும் மலேசிய ஏர்லைன்சின் வாடிக்கையாளர்களுக்கும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கும் என்றும் அவர் சொன்னார்.
தங்களுடன் இணைந்து செயல்படும் பாங்காளி நிறுவனங்களில் ஒன்றாக மலேசிய ஏர்லைன்சும் சேர்ந்துகொண்டுள்ளதை வரவேற்பதாக யுனைடெட்டின் பங்காளித்துவ விவகாரப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி விக்டோரியா டிம்ப்சன் குறிப்பிட்டார். அவ்விமானத்திள் நம்பகத்தன்மை, தரமான சேவை ஆகியவற்றைப் பற்றித் தங்களின் உலக ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாய் இருப்பதாகவும் அவர் சொன்னார்.