விளையாட்டுப் பொருட்களை மீட்கும் இக்கியா

இக்கியாவின் 'லாட்ஜோ' மேள குச்சிகள், 'டங் டிரம்' ஆகிய விளையாட்டுப் பொருட்களை மீட்டுக்கொள்வதாக இக்கியா சிங்கப்பூர் அறிவித்துள்ளது. அவற்றைத் திருப்பிக் கொடுத்து முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அது தெரிவித்தது. நேற்று வெளியிட்ட அறிக் கையில் இது ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை என்று இக்கியா குறிப்பிட்டது.

மேள குச்சிகளில் உள்ள ரப்பர் பந்துகளை அகற்ற முடியும் அல்லது தனியாக பிரித்து எடுக்க முடியும் என்று கடை ஊழியர்களில் சிலர் சுட்டிக் காட்டினர். அதனைத் தொடர்ந்து ஆபத்தை விளைவிக்கலாம் என் பதால் விளையாட்டுப் பொருட்கள் மீட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து லாட்ஜோ மேள குச்சிகளையும் மேளத்தையும் இக் கியா சிங்கப்பூர் விற்றுவருகிறது.

"எல்லா இக்கியா கடைகளிலும் அந்த விளையாட்டுப் பொருட்களை திருப்பிக் கொடுக்கலாம். பொருள் வாங்கியதற்கான ஆதாரங்கள் தேவையில்லை," என்று இக்கியா கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!