பட்ஜெட் 2016: ஜூரோங் புத்தாக்க வட்டாரம் அமைப்பு; முதல் கட்டம் 2020க்குள் தயாராகிவிடும்

வருங்காலத் தொழிலியல் பேட்டையாக உருவமைக்கப்படும் புதிய ஜூரோங் புத்தாக்க வட்டாரம், புத்தாக்கப் பெருக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முனைப்பின் ஒரு பகுதியாகக் கட் டப்படும். ஜூரோங் வெஸ்ட்டில் அமைக்கப்படும் புத்தாக்க வட்டாரத்தின் முதல் கட்டம் 2020ம் ஆண்டு வாக்கில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரின் ஆரம்பகால தொழிலியல் பேட்டைகள் குறிப்பிட்ட தொழில்துறைகளுக்காக உருவாக்கப்பட்டன. அவை பெரும்பாலும் உற்பத்தித்துறையில் கவனம் செலுத்தியதாக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தனது வரவுசெலவுத் திட்ட உரை யின்போது கூறினார்.

ஆனால் இக்காலத்தில், ஆராய்ச்சி, புத்தாக்கம், உற்பத்தி ஆகியவை நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலப் பொருட்களையும் சேவைகளையும் உருவாக்க ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றைப் புத்தாக்க வட்டாரம் ஒன்றிணைக்கும். ஒரே அடுத்த தலைமுறை தொழிலியல் வட்டாரத் திற்குள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சூழலும் உருவாக்கித் தரப்படும். தொழிலமைப்பு, கற்றல், வாழ் வியல் ஆகியவற்றுக்கான எதிர்காலப் புத்தாக்க மையமாக இவ்வட்டாரம் திகழும் என்றார் திரு ஹெங். ன"ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, சதுப்புநிலமாக இருந்த ஜூரோங்கை உற்பத்தித் தொழில் துறையின் செழிப்பான மையமாக உருமாற்றினோம். இந்த மையம் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச் சிக்குத் தூண்டுகோலாக விளங்கி யது. இப்போது, எதிர்காலத்திற்

கான தொழிலியல் பேட்டையை உருவாக்க மற்றுமொரு பெரும் மாற்றத்தைச் செய்யவிருக்கி றோம்," என்றார் அவர். நாம் வாழும் முறை, வேலை செய்யும் முறை, பொழுதுபோக்கும் முறை, உருவாக்கும் முறை ஆகிய வற்றை உருமாற்றக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!