இத்தாலியை வீழ்த்தி ஜெர்மனி ஆறுதல் வெற்றி

மியூனிக்: இங்கிலாந்துடனான நட்புமுறை காற்பந்தாட்டம் ஒன்றில் சென்ற வாரம் தோல்வியைத் தழுவிய ஜெர்மனி அதற்கு ஈடு செய்வதுபோல் நேற்று அதிகாலை நடந்த மற்றொரு நட்புமுறை ஆட்டத்தில் இத்தாலியை 4=1 என வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனியின் முதல் கோலை டோனி குரூஸ் போட இரண்டாவது கோலை பயர்ன் மியூனிக் குழுவில் அண்மைய காலமாக மாற்று ஆட் டக்காரராக மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டு வரும் மாரியோ கோட்சே போட்டார்.

இவர்களைத் தொடர்ந்து ஜெர்மன் அணியின் தற்காப்பு ஆட்டக்காரரான ஜோனாஸ் ஹெக்டரும் இங்கிலாந்துக் குழுவான ஆர்சனலில் மத்திய திடல் ஆட்டக்காரரான மெசுட் ஒசிலும் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மூன்றாவது நான்காவது கோல்களைப் போட்டனர். இத்தாலிக்கு மாற்று ஆட்டக் காரராக களமிறங்கிய ஸ்டெஃபான் எல் ஷாராவி தமது அணி சார்பாக ஆறுதல் கோல் ஒன்றைப் போட் டார். "ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பொழுது நாங்கள் புத்திசாலித் தனமாக விளையாடினோம், தற் காப்பு ஆட்டம், தாக்குதல் என இரண்டு நிலைகளிலும்," என்று நிம்மதிப் பெருமூச்சுக்கிடையே கூறினார் ஜெர்மன் அணியின் பயிற்றுவிப்பாளரான ஜோக்கிம் லியாவ்.

இங்கிலாந்திடம் நான்கு நாட்களுக்கு முன்னர் தோல்வியைத் தழுவிய ஜெர்மனிக்கு நேற்றைய வெற்றி அந்த அணியினரின் தன்னம்பிக்கையை உயர்த்துவதாக அமைந்தது என்று ஏஎஃப்பி செய்தித் தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் நேற்றைய வெற்றி இத்தாலிக்கு எதிராக கடந்த 21 ஆண்டுகளில் ஜெர்மனி அடைந்த முதல் வெற்றி என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது. "சரியான மனநிலையுடன் விளையாடினால், அதனால் ஏற் படக்கூடிய பலன் எப்படிப்பட்டது என்பது இன்று தெரிந்தது," என்றார் ஜெர்மனியின் தற்காப்பு ஆட்டக்காரர் மேட்ஸ் ஹம்மல்ஸ். அத்துடன், பயர்ன் மியூனிக்கில் ஒப்பந்தப்படி இன்னும் ஓராண்டே இருக்கப்போகும் மாரியோ கோட்சே தமது விளையாட்டின் மூலம் மற்ற குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுபோல் தோன்றுவதாகச் செய்திகள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!