நீண்டநாள் கனவு நனவானது

எஸ்.வெங்கடேஸ்வரன்

மருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால், பதின்மவயதில் ரத்தத்தைப் பார்க்கும்போது தமக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக மருத்துவராக முடியாது என்றே அவர் முடிவு செய்திருந்தார். டாக்டர் ஐஸ்வர்யா ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் படித்தபோது அவரது சகோதரிக்குச் சிறு காயம் ஏற்பட்டது. அதில் ரத்தக் கசிவைப் பார்த்து ஐஸ்வர்யாவுக்கு லேசான மயக்கம் வந்தது. இதனால் தமக்கு ரத்தத்தைப் பார்த்தால் பயம் வரும் என்பதை உணர்ந்து மருத்துவர் ஆகும் விருப்பத்தை ஐஸ்வர்யா கைவிட்டார்.

தொடக்கக் கல்லூரி இரண்டாம் ஆண்டில் டாக்டர் ஐஸ்வர்யாவின் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற் பட்டது. மாணவர்களுக்கு மருத்துவத் துறையைப் பற்றி தெரியப்படுத்த தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையில் நடை பெற்ற மூன்று நாள் பயிலரங்கில் அவர் பங்கேற்றார். ரத்தம் நிறைந்த பைகளையும் மருத்துவ சிகிச்சை களையும் டாக்டர் ஐஸ்வர்யாவால் பயிலரங்கில் நேரடியாகப் பார்க்க முடிந்தது.

பட்டப்படிப்பின்போது தமிழகத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுபவக் கல்வி பெற்ற டாக்டர் ஐஸ்வர்யா நாராயணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 

ஐஸ்வர்யா நாராயணன்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்

18 Mar 2019

முழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி