அன்னையர் மூவருக்கு விருது

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழ கம் கடந்த 20ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் நடத்திய அன்னையர் தின நிகழ்ச்சியில் மூன்று அன்னையர்களுக்கு ‘அன்னை யர் திலகம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் உமா ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தர வரிசையில் இன்றி வய தின் அடிப்படையில் விருது அறி விக்கப்பட்ட மூன்று அன்னையர் களுக்கும் தலா 12 கிராம் பொன் வழங்கப்பட்டது.

அன்னையர் திலகம் விருதைப் பெற்ற மூன்று அன்னையர்களும் கிரீடத்துடன் அமர்ந்துள்ளனர். அவர்களின் உறவினர்களும் ஏற்பாட்டாளர்களும் சிறப்பு விருந்தினர் டாக்டர் உமா ராஜனும் உடனுள்ளனர். படம்: நாதன் வீடியோ